Sunday, March 15, 2026

Creating liberating content

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும்...

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு...

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர்...

ஈரான் போர் : இந்தியாவில்...

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்,...
HomeSpecial Articlesபெண் சீடர்களுக்கு மன...

பெண் சீடர்களுக்கு மன நல பரிசோதனை : வசமாக மாட்டுகிறார் ஜக்கி வாசுதேவ் !

ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் உள்ள பேராசிரியரின் 2 மகள்களுக்கு “மன நல சோதனை” நடத்தி அறிக்கை தர தமிழ்நாடு அரசு மன நல இயக்குனரகம் உத்தரவு.

கோயமுத்தூரைச் சேர்ந்தவர் முனைவர் காமராஜர். இவர் வேளாண் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது இரண்டு மகள்களை ஜக்கி வாசுதேவ் கட்டாயமாகத் தமது சீடர்களாக்கி அவர்களை மன வசியம் செய்து பிடித்து வைத்திருப்பதாகவும் அவர்களை விடுவிக்கக் கோரியும் புகார், வழக்குகள் எனத் தொடர்ந்து போராடி வருகிறார் காமராஜ்.

இந்திலையில் இவரது மகள்கள் மன வசியம் – ஹிப்நாடிசம் – செய்யப்பட்டு சுய தன்மை இழந்து ஜக்கியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உள்ளதாகவும் அதை அறிவியல் மருத்துவப் பரிசோதனை நடத்தி உறுதி செய்து அவர்களை மீட்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் மன நல இயக்குநரகத்தில் The Tamil Nadu State Mental Health Authority (TNSMHA), அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

தொடர்புடைய இருவரையும் கோயமுத்தூர் மையத்தில் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய The Tamil Nadu State Mental Health Authority (TNSMHA) பணித்துள்ளது.

இதுகுறித்து கோயமுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த திரு. காமராஜ், கருவூரார் அறக்கட்டளை நிறுவனர் சத்தியபாமா, புதிய தலைமுறை கட்சி நிறுவனர் கோபால கிருஷ்ணன், தமிழர் முன்னணி நிறுவனர் இமயம் சரவணன் ஆகியோர் இத்தகவலைத் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய திரு.காமராஜ், ஜக்கி வாசுதேவ் தம்மை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அமெரிக்காவைச் சேர்ந்த நீதா எனும் பெண் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர் மீது ஜக்கி தொடுத்த அவதூறு வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.எனவே அந்த வழக்கில் அவர் தண்டிக்கப்பட வாய்ப்பு உண்டு.

அதே போல இங்கும் பல வழக்குகளில் ஜக்கி சிக்குவார். அதன் ஒரு படியாக தம் இரண்டு மகள்களைப் போலவே பல இளையோர்களை சட்டவிரோத ஹிப்நாடிசம் அல்லது போதை உள்ளிட்ட வசியம் செய்து மயக்கி வைத்த குற்றத்திலும் அவர் உறுதியாகப் பிடிபடுவார் என்றார்.

அடுத்துப் பேசிய சத்தியபாமா, சட்டவிரோதமாகவும், ஆன்மீகத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லாதும் வணிக ரீதியாக மதவாதத்தை பயன்படுத்தி வரும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோக மையம் அரசுடைமையாக்கப்பட வேண்டும், அங்கு மனவசியம் செய்து மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டுள்ள சன்னியாசி இளையோர்களை மீட்க வேண்டும். அவர்களுக்கு முறையாக மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய தமிழர் முன்னணி இமயம் சரவணன், அமெரிக்காவில் எப்ஸ்டீன் என்பவர் குழந்தைகளை தவறாக பயன்படுத்தியது போல ஜக்கி வாசுதேவன் செய்திருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே அந்தக் குழந்தைகளை – இளையவர்களை எல்லாம் மீட்டு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும், ஜக்கி வாசுதேவ் நடத்தும் தகன எரி மேடைகளை தடை செய்ய வேண்டும் என்றும் கூறினார். தனி ஒரு மனிதர் இயற்கையாக இறந்தாலே தகனம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் தேவைப்படும் நிலையில் யாருடைய அனுமதியின் பேரில் ஈஷா யோக மையத்திற்குள் உடல்கள் எரிக்கப்படுகின்றன என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் இமயம் சரவணன் கேட்டுக் கொண்டார். தமது மகளை சொகுசாக வாழவிட்டு ஊரார் மகன் – மகள்களை மொட்டையடித்து சன்னியாசிகளாக்கி தமிழர் இனவழிப்பு செய்து உலகத்தை ஏமாற்றி வருகிறார் ஜக்கி என்றும் சரவணன் குற்றம் சாட்டினார்.

அடுத்துப் பேசிய புதிய தலைமுறை கட்சியின் நிறுவனர் கோபாலகிருஷ்ணன், சிவராத்திரி என்கிற தமிழருடைய மெய்யியல் ஜக்கி வாசுதேவின் கையில் பட்டு சீரழிவதாக குறிப்பிட்டார். ஆன்மீக மெய்யியலை வணிக நோக்கில் விளம்பரம் செய்து வசூல் மையமாக மாற்றி வைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்த கோபாலகிருஷ்ணன் ஈஷா யோக மையத்தை சோதனை செய்து தடை செய்ய வேண்டும் என்று கூறினார். உண்மையான சிவநெறியைப் பின்பற்றி வரும் பெரிய பெரிய மடங்கள் இருக்கும் நிலையில் இதுவரை எந்த மடமும் ஜக்கி வாசுதேவ் செய்வது போல சிவராத்திரிக்கு விளம்பரம் செய்து வசூல் செய்வதில்லை, அதேபோல நடிகர் நடிகைகளை வைத்து ரெக்கார்ட் டான்ஸ் நடத்துவதில்லை என்பதையும் கோபாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

இனியும் ஆன்மீகத்தின் பெயரில் ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஜக்கிவாசுதேவை அனுமதிப்பது தமிழர் மெய்யிலை குழி தோண்டிப் புதைக்கும் செயல் என்றும் கோபாலகிருஷ்ணன் கூறினார்

ஜக்கி வாசுதேவ் நடத்தும் சிவன் ராத்திரிக்கு செல்லுவோர் அவரின் ஹிப்னாட்டிஸ மதி மயக்கத்தில் மன வசியத்திற்கு ஆட்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்த நான்கு பேரும் எச்சரித்தனர்.

spot_img

Continue reading

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா போர் ; அதிர வைக்கும் மூல காரணம்

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும் அந்த ஒரு 'ரகசியம்' மட்டும் ஒருபோதும் சொல்லித்தரப்படவில்லை. நான் கீழே சொல்லப் போவதை நீங்கள் புரிந்துகொண்டால், இன்று தொலைக்காட்சியில் வரும் உலகச்...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும் கொண்டு வந்ததே திமுகதான் : நாடகமாடும் திருமுருகன் காந்தி !

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற இராஜகோபாலச்சரியார் அறிவித்தபோது, ஈ.வெ.இராமசாமி நினைத்திருந்தால் நண்பர் இராஜாஜியிடம் நட்பு ரீதியாகவே எடுத்துக்கூறி இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வைத்திருக்கலாம். ஆனால், அதுகுறித்து மூச்சே விடவில்லை பெரியார் இராமசாமி. மாறாக, அந்த அறிவிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்த அறிக்கை...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு ஒரு முரட்டு அதிபரால் அதன் மதிப்பை இழந்து நிற்கிறது : ராபர்ட் ரைக்

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார். தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடும் ராபர்ட் ரைக் இதில் பல பொதுமக்களும் குழந்தைகளும் உள்ளதாகத்...