Sunday, March 15, 2026

Creating liberating content

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும்...

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு...

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர்...

ஈரான் போர் : இந்தியாவில்...

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்,...
HomeIndiaநாம் தமிழர் கட்சியின்...

நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாநாடு ; தமிழர் வரலாற்றுத் திருப்புமுனை மாநாடு !

மூன்றரை லட்சம் தமிழர்கள் கூடிய பெருங்கூட்டம் !

ஐயையோ சீமான் பொய் பேசுகிறார்,

ஐயயோ சீமான் இளைஞர்களைத் தவறாக வழி நடத்துகிறார்,

ஐயையோ சீமானுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது,

ஐயையோ சீமான் பாஜக பி டீம்,

ஐயையோ சீமான் மட்டும் சொகுசாக வாழ்கிறார்

ஐயையோ சீமான் கட்சி கூண்டோடு காலி

ஐயையோ பார்ப்பனக் கடப்பாரை என்கிறார்

ஐயையோ சீமான் சுப. முத்துக்குமாரை விட்டுவிட்டார்

ஐயையோ சீமான் பேசுவது தமிழ்த் தேசியமல்ல….

ஐயையோ சாட்டை அப்படிப் பன்றார், இப்படிப் பன்றார்

ஐயையோ இடும்பாவனம் கார்த்தி அப்படிப் பன்றார் இப்படிப் பன்றார்

ஐயையோ திரள் நிதியை மக்கள் அள்ளித் தருகிறார்களே

ஐயையோ அம்மம்மா ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயையோ …..

எனும் ஒரு சிறு கூட்டத்தின் ஒப்பாரிக் கூப்பாடுகள் தங்களது கோவணம் அவிழ்வது கூடத் தெரியாது கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக ஊடகங்களில் முக்கல் முனகல்களாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

ஆனால், பணம் பெற்றுக்கொண்டு இப்படிக் கூவிக் கதறும் எவரையும் கால் கேசத்துக்குக் கூட சட்டை செய்யவில்லை தமிழர்கள்.

ஆட்சிக்கு வந்ததும் பல ஆயிரம் கோடிகளில் கமிஷன், கரப்ஷன், முறைகேடு, திருட்டு என பணம் சுருட்டிக் கொள்வது. தேர்தல் நேரத்தில் அதில் ஒரு குறிப்பிட்ட பணத்தை மக்களிடமே கையூட்டாகக் கொடுப்பது. கொடுத்து வாக்குகளை வாங்கி மீண்டும் ஆட்சிக்கு வருவது. கொள்ளுப்பேரனில் தொடங்கி எள்ளுப்பேரன் வரை பல ஆயிரம் கோடிகளில் சொத்து சேர்த்து சொகுசாக வாழ்வது. பணி நிரந்தரம், கூலி உயர்வு கேட்டு உழைக்கும் மக்களைத் தெருவில் போராட விட்டுவிடுவது. சோறு போடும் விவசாயியை வெளிநாட்டுக் கம்பெனிக்காரன்களிடம் அடகு வைப்பது, மலை, காடு, ஆறு, நதி என எல்லாவற்றையும் சுரண்டித் தின்பது, தனது வைப்பாட்டி வீட்டு நாய்க்குட்டி வரை மக்கள் பணத்தில் குளு குளு அறையில் உறங்க வைக்க வேண்டியது…..

பெயருக்கு நாலு திட்டங்கள், பெயருக்கு நாலு பெயர் சூட்டும் விழா, பெயருக்குத் தமிழ் வாழ்க, தமிழர் நலன் என கண்துடைப்பு நாடகம் நடத்திவிட்டு மக்கள் வரிப்பணத்தை குடும்பத்தோடு நக்கிப் பிழைப்பது….

“இவை அனைத்தையும் மக்களின் நலனுக்காகவே” என்று பொய் கூற பணம் கொடுத்து பத்திரிகை, ஊடக சமூக ஊடகங்களில் கொத்தடிமைகளை நியமித்துக் கொண்டு புகழ் புராணம் பாடுவது….

எத்தனை நாள் …. எத்தனை நாள் இந்தக் கழிசடை திராவிட முகமூடிகளைப் பொறுத்துக் கொள்வார்கள் மக்கள் ?!

தமிழ் வாழ்க என்று கூறிக்கொண்டே ஒன்றரை லட்சம் தமிழர்களை சிங்கள பவுத்த பேரினவாதிகள் பொசுக்கிக் கொன்றபோது குளு குளு இயந்திரங்களை காலுக்கு ஒன்று தலைக்கு ஒன்றுமாக வைத்துக்கொண்டு மனைவி துணைவியோடு ஒரு நாடக உண்ணாவிரதம் நடத்தி ஒட்டுமொத்த தமிழரினத்தை அழித்த மகிழ்ச்சியோடு பெருமிதம் கொண்ட கொலை பாதகர்களின் உண்மையான முகம் அறிந்தபின்னர் தமிழர்கள் விழித்துக் கொண்டனர்.

இந்தத் திராவிட முகமூடித் திருடர்கள் நாட்டுக்கானவர்கள் அல்லர், அவர்களின் சொந்த வீட்டுக்கானவர்கள் என்பதை தமிழுலகம் அறிந்துகொண்டு விட்டது.

தமிழர் அறம், தமிழர் தலைவர்களின் பெயர்கள், வரலாறு, தொன்மம் என எல்லாவற்றையும் மறைத்து ஈ.வெ.ராமசாமி, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி ஸ்டாலின் என்று இவர்கள் மட்டுமே தமிழ்நாட்டின் வரலாறு, தொன்மம், அறம் என்றெல்லாம் பொய்யாகக் கட்டமைத்து மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதை உணர்ந்து கொண்டு விட்டார்கள் தமிழர்கள்.

ச்சீ ச்சீ இது ஒரு பிழைப்பா ? என்று அவரகளைப் பார்த்துத் தமிழர்கள் உணர்ந்ததன் விளைவு….

இத்தனை திருடியும் இன்னமும் கமல் ஹாசன், விஜய் போன்ற கோமாளிகளைக் களம் இறக்கி தமிழர்களை மேலும் ஏமாற்றத் துடிக்கும், ஏளனம் செய்யத் துடிக்கும் திராவிட முகமூடிகளை இனியும் கிழித்தெறியாமல் தமிழர்கள் இருந்தால் நாடு நாசமாகப் போகும் என்று தமிழர்கள் உணர்ந்ததன் விளைவு….நாம் தமிழராக மக்கள் அணி திரள்கிறார்கள்.

சீமானா…ஹா ஹா ஹா ஓஹ் ஓஹ் ஹோ…என்று ஏளனமாக சிரித்து அவரைப் புறம் தள்ளிய ஊடகங்கள் இன்று மாய்ந்து மாய்ந்து அவர் தொடர்பான செய்திகளை வெளியிடுகின்றன. அச்சு ஊடக விற்பனை சரிந்தாலும், காட்சி ஊடகப் பார்வை எண்ணிக்கை சரிந்தாலும் சீமான் குறித்து எதையாவது செய்தி வெளியிட்டு தமது வருவாயை சமன்படுத்திக் கொள்ளும் நிலைக்கு பத்திரிகை ஊடகங்கள் வந்துவிட்டன.

தமிழ், தமிழர், தமிழ்த் தேசியம் என தங்களது பேச்சில் எல்லா கட்சியினரும் பேசும் நிலை வந்துவிட்டது.

திராவிட மொழி, திராவிட இனம், திராவிட மாடல் என்று உருட்டு உருட்டென்று உருட்டியவர்கள் இன்று தமிழ் வாழ்க என்கிறார்கள், ததும்பும் தமிழ்ப் பெருமிதம் என்கிறார்கள். தேர்தல் வரும் வரை திராவிட முகமூடியைக் கழற்றி வைத்துவிட்டு, தமிழ், தமிழர் என்று நெஞ்சை வருடுவார்கள். பிறகு, எப்பாடுபட்டாவது வெற்றி பெற்றபிறகு “திராவிட மாடல்” என்று தம்பட்டம் அடிப்பார்கள்.

ஆனால், இனி அது முடியாது என்பதைத் தமிழர்கள் நிரூபித்து விட்டார்கள்.

நாம் தமிழர் நடத்திய மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டில் கலந்து கொள்ள மக்கள் குடும்பத்துடன், கைக்குழந்தைகளுடன், வளர்ப்பு செல்லப் பிராணிகளைக் கூட அழைத்துக் கொண்டு ஒரு திருவிழாவுக்கு வரும் உறவுகள் போல வந்து ஆலம்பட்டி புதூரில் குவிந்தனர்.

நூற்றுக்கனான பேருந்துகள், சிறிய ரக பேருந்துகள், மகிழுந்துகள் என ஆயிரக்கணக்கில் வானகங்கள் வந்து குவிந்தன.

குறைந்தது 3.5 லட்சம் பேர் வந்து குவிந்தனர். சீமான் பேசிக்கொண்டிருக்கும் இறுதி வேளையில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் பேர் வந்தனர்.

போக்குவரத்து, தொலைவு ஆகியவற்றால் மாநாடு முடியும் வேளையில் வந்து சேர்ந்த கூட்டம் ஒரு பெருங்கூட்டம்.

இத்தனை பேர் வந்தும்கூட ஒரு சிறு சல சலப்பு கூட இல்லை, காவல்துறையினர் இவ்வளவு ரிலாக்ஸ்டாக மகிழ்ச்சியுடன் வேறு எந்த மாநாட்டிலும் பணியாற்றி நாம் பார்த்தது இல்லை. அவர்களின் பணி அனைத்தையும் நாம் தமிழர் தன்னார்வலர்கள் பார்த்துக்கொண்டனர்.

அத்தனை ஆயிரம் வாகனங்கள், லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். ஆனால் தள்ளு முள்ளு இல்லை, முகச்சுழிப்பு இல்லை, தடித்த சொற்கள் இல்லை, சண்டை இல்லை, சச்சரவு இல்லை…. திருமண வீட்டிற்கு வரும் உறவுகள் போல அவரவர் வீட்டு நிகழ்வாகக் கருதி மக்கள் வந்து சென்றது வியப்பூட்டக்கூடியது.

போக்குவரத்து, வாகன நிறுத்தம் என மிகச்சரியான திட்டமிடல், ஒழுங்கு.

புடவை, வேட்டி, குவார்ட்டர், கோழி பிரியாணி, வந்து செல்ல பணம் என்று எதுவும் இல்லை.

தமிழ், தமிழர், தமிழ்த் தேசியம் என்கிற ஒரே இலக்கைத் தவிர வந்தவர்களுக்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.

குடும்பத்தோடு வந்திருந்தவர்களில் பெரியவர்கள் சிலர் திமுக கரை வேட்டி கட்டியிருந்தனர்.

இரண்டு பேர் தங்கள் வளர்ப்பு செல்லப் பிராணிகளை (நாய்க்குட்டிகள்) அழைத்து வந்திருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் நாய்க்குட்டி கூட மெரிசலின்றி நடந்து வந்தது.

கடை போட்டிருந்த தனியார் அன்பர்கள் அனைவரும் தண்ணீர் பாட்டிலை வெளியில் கடையில் விற்கும் அதே விலைக்கே விற்றனர், கரும்புச் சாறு கடைக்காரர், தேநீர் கடைக்காரர்கூட அதே விலைதான். கூடுதல் விலையேதுமில்லை.

சரிக்கு சரியான எண்ணக்கையில் பெண்கள், மேலும் கைக்குழந்தை, சிறுவர், சிறுமியருடன். மாற்றுத் திறனாளிகளும் வீட்டில் இருப்பது போல வசதியாக வந்து சென்றனர்.

சீமான் உறுதி மொழி வாசித்த போது நடந்து கொண்டிருந்தவர்கள் கூட அப்படியே ஓரமாக நின்று கையை நீட்டி உறுதி மொழி ஏற்கின்றனர்.

தன்னார்வலர் தொடங்கி காவல்துறையினர் வரை ஒருவர் முகத்திலும் சிறிது கூட சிடுசிடுப்பு, விரட்டி அடிப்பது என்கிற எந்த ஒரு செயலும் இல்லை.

வந்த லட்சக்கணக்கானவர்களும் அவர்களுக்கு எந்தவித இடையூறும் கொடுக்கவில்லை, எரிச்சலூட்டவில்லை.

தமிழ் ஊடகம் சார்பில் சிறப்பு இதழ் ஒன்று நான்கு பக்கங்களுக்கு 5 ஆயிரம் பிரதிகள் அச்சடித்து விலையில்லாமல் வழங்கினோம்.

வழங்கும்போது நம்மைக் கடந்து சென்ற ஒருவரிடம்கூட மது வடை அடிக்கவில்லை.

எவரும் அடாவடியாக, ஆர்ப்பாட்டம், கூச்சல், வெற்று முழக்கம், வாழ்க, ஒழிக முழக்கங்கள் எதுவும் இல்லை.

அட…இதுதான் உண்மையான “அரசு இயல்” இயக்கம் என்று அரசியலுக்கு உண்மையான பொருள் தந்த மேதகு தலைவரின் தமிழர் செல்வங்கள் கூடிய பெரும்புரட்சிக் கூட்டம் !

சீமானின் அவரது தம்பி தங்கைகளின் உழைப்பு வீண் போகவில்லை !

தற்காலிக ஐந்தாண்டு தேர்தல் வெற்றிகளைவிட தமிழர் விழிப்புணர்வு எனும் நீண்ட நெடுங்கால வெற்றிக்குப் பாடுபடும் சீமான் மற்றும் நாம் தமிழர் குடும்பத்தினர் அனைவருடன் ஒவ்வொரு மனிதரும் நிற்கவேண்டியது காலத்தின் கட்டாயம். மானுட நலனுக்கான தேவை.

–தமிழ் ஊடகம் செய்தியாளர் குழு

spot_img

Continue reading

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா போர் ; அதிர வைக்கும் மூல காரணம்

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும் அந்த ஒரு 'ரகசியம்' மட்டும் ஒருபோதும் சொல்லித்தரப்படவில்லை. நான் கீழே சொல்லப் போவதை நீங்கள் புரிந்துகொண்டால், இன்று தொலைக்காட்சியில் வரும் உலகச்...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும் கொண்டு வந்ததே திமுகதான் : நாடகமாடும் திருமுருகன் காந்தி !

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற இராஜகோபாலச்சரியார் அறிவித்தபோது, ஈ.வெ.இராமசாமி நினைத்திருந்தால் நண்பர் இராஜாஜியிடம் நட்பு ரீதியாகவே எடுத்துக்கூறி இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வைத்திருக்கலாம். ஆனால், அதுகுறித்து மூச்சே விடவில்லை பெரியார் இராமசாமி. மாறாக, அந்த அறிவிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்த அறிக்கை...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு ஒரு முரட்டு அதிபரால் அதன் மதிப்பை இழந்து நிற்கிறது : ராபர்ட் ரைக்

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார். தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடும் ராபர்ட் ரைக் இதில் பல பொதுமக்களும் குழந்தைகளும் உள்ளதாகத்...