Sunday, March 15, 2026

Creating liberating content

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும்...

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு...

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர்...

ஈரான் போர் : இந்தியாவில்...

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்,...
HomeIndiaநாம் தமிழர் :...

நாம் தமிழர் : ஆயிரமாண்டு வரலாற்றில் ஒரு பெரும் புரட்சி!

வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம்.

ங்ககாலம் என்பது கிறித்து பிறந்த பிறகான (கிபி) 300 ஆண்டுகள் வரையிலான காலத்தைக் குறிக்கிறது. அதாவது இன்றிலிருந்து 1700 ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலம்.

சங்கம் மருவிய காலம் என்பது கி.பி 300 லிருந்து 600, இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முந்தைய காலம்.

சங்கம் தொடங்கிய காலம் என்பது அதாவது முதல் சங்க காலம் என்பது சிந்துவெளிக் காலம் ஆகும்.

சங்கம் என்பதைக் கழகம் என்றழைப்பது தமிழர் வழக்கம். முதல் கழகம், இரண்டாம் கழகம், மூன்றாம் கழகம் என இவை அழைக்கப்படுகின்றன.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காரணத்தால் சங்க காலம் என்று அழைக்கப்படுகிறது. மூன்று சங்கங்கள் பதிவாகியுள்ளதால் மூன்று சங்க காலங்கள் குறிக்கப்படுகின்றன. இதில் மூன்றாவது அதாவது கடைச் சங்ககாலம் வரை சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் ஆட்சி சிறந்து விளங்கியது.

இதன்பிறகு,

கிபி 400 ம் ஆண்டு தொடங்கி கிபி 600 வரை – களப்பிரர் காலம் (கன்னடர்கள்)

கிபி 600 தொடங்கி கிபி 900 வரை – பிற்காலப் பாண்டியர் மற்றும் பல்லவர் காலம்

கிபி 900 தொடங்கி கிபி 1300 வரை – பிற்காலச் சோழர் காலம்

கிபி 1300 தொடங்கி கிபி 1400 வரை – எதிர்த்துப் போராட வலிமையான தமிழ் மன்னர்கள் இல்லாத காரணத்தால் வலுவற்ற பாண்டியர்கள் சிறிதே ஆண்ட நிலையில் சுல்தான்கள் உள்ளிட்ட போகிற வருகிறவர் உள்பட பலர் இங்கே வந்து ஆட்டம் போட்ட காலகட்டம்.

கிபி 1400 தொடங்கி 1700 வரை – விஜயநகர மற்றும் நாயக்கர் காலம்

கிபி 1700 தொடங்கி கிபி 1947 ம் ஆண்டு வரை – பிரிடிஷ் ஆட்சிக்காலம்

களப்பிரர் காலத்துக்குப் பிறகு பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் பல்லவர் காலம் தொடங்கி கிபி 1300 ம் ஆண்டுகள் வரை அதாவது கிபி 600 ம் ஆண்டு தொடங்கி கிபி 1300 ம் ஆண்டு காலம் வரை தமிழர்கள் மீண்டும் பேரெழுச்சி பெற்ற காலம்.

பிறகு 1400 தொடங்கி 1700 வரையிலான காலம் விஜயநகரத் தெலுங்கு நாயக்க மன்னர்களால் தமிழர்கள் மீண்டும் வீழ்த்தப்பட்ட காலம்.

அதன்பிறகு பிரிடிஷ் ஆட்சிக்குத் தமிழ்நாடும் ஆளானது. பல்வேறு மன்னர்கள் ஆண்ட பல நாடுகளை இணைத்து இந்தியா ஒரே நாடாக ஆக்கப்பட்டது.

மொத்தமாக 1947 ம் ஆண்டுதான் விடுதலை கிடைக்கிறது.

1956 ம் ஆண்டு மொழிவழித் தேசிய இனத்தினர் வாழும் மாநிலங்களாக இந்தியா தனித்தனியே பிரிக்கப்படுகின்றன.

ஆனாலும் “இந்திய தேசியம்” எனும் ஒரு அமைப்பு, பல்வேறு தனித்தனி மொழிவழி மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும் புதிய பேரரசாக உருவெடுக்கிறது.

இந்திய அளவில் கூட்டாட்சி, மாநிலங்கள் அளவில் சுயாட்சி எனும் புதிய கோட்பாடு உருவாகிறது. அதுவே இந்தியா என்ற தனித்த நாடாக உருவாகிறது. இந்திய அரசுடன் கூட்டாட்சி முறையில் எல்லா மாநிலங்களும் இயங்குகின்றன.

தமிழ்நாடு என்பது சேர, சோழ, பாண்டிய, பல்லவ, கொங்கு, ஈழ என ஆறு நாடுகளாக இருந்துள்ளன. இவை அனைத்தும் தமிழர் நாடுகளாக இருந்துள்ளன.

களப்பிரர் காலத்திற்குப் பிறகு இராஜராஜ, இராஜேந்திர சோழர்கள் தமிழ், தமிழர்களை மீட்டெடுத்த நிலையில் மீண்டும், விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் தமிழும், தமிழர்களும் வீழ்த்தப்பட்டனர், அழிக்கப்பட்டனர்.

ஆளும் அரசர்கள் வீழ்த்தப்பட்டு தலைமை இல்லாத ஒரு இனமாகத் தமிழர் இனம் ஆக்கப்பட்டது.

அறம் போற்றும் அரசர்கள் தமிழர் அரசர்கள் என்பதாலும் தங்களுக்கான தேவைகளுக்காக தமிழர் அரசர்களிடம் மக்கள் கையேந்தி நிற்க வேண்டிய நிலை இல்லாத காரணத்தாலும், ஒரு அரவணைப்பான வாழ்க்கை வாழ்ந்து பழகிய தமிழர்களுக்கு நல்ல தலைமை இல்லாத காலகட்டங்கள் பிற மொழியாளர்கள், பிற நாட்டினருக்கு எளிதில் ஆக்கிரமிக்கும் காலங்களாகிப்போயின.

“மன்னன் எப்படியோ மக்கள் அவ்வழி” என்பதாக மன்னனும் மக்களும் வேறு வேறாக இல்லாது, மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அவற்றையெல்லாம் வாரி வழங்கி ஆட்சி ஆண்ட மன்னர்கள் தமிழர் மன்னர்கள்.

எனவே, வருகிற மன்னர்கள் எல்லோரும், வருகிற ஆட்சியாளர்கள் எல்லோரும் அப்படியே இருப்பார்கள் எனும் எண்ணத்தில் ஏமாந்து போனார்கள் தமிழர்கள்.

தலைமை இல்லாத தமிழர்களை போகிற வருகிறவன் எல்லாம் ஆண்டு, சுரண்டி, கொழுத்து வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

எனினும், சிறு குறு தமிழர் மன்னர்கள், அரசர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் மக்களைக் காத்து பிரிடீஷாரை எதித்து நின்று போராடியிருக்கிறார்கள்.

ஆனாலும், சேர சோழ பாண்டியர்கள் ஆண்டதுபோல பெரும் வலிமை கொண்ட எவராலும் வீழ்த்தப்படாமலும் இருந்த ஒரு தமிழர் நாடுகளமைப்பு விஜயநகர, தெலுங்கு நாயக்க மன்னர்கள் காலத்திற்குப் பிறகு ஏற்படவேயில்லை.

பிரிட்டிஷ் ஆட்சி விலகி மக்களாட்சி எனும் பெயரில் இந்திய தேசியம் மீண்டும் ஒரு சர்வாதிகாரப் போக்கையே கையாள விரும்புகிறது. மாநில சுயாட்சியை மறுத்து ஒரே நாடு ஒரே ஆட்சி எனும் இந்திய தேசியப் பேரரசு ஆட்சியையே டெல்லியில் ஆளும் அரசுகள் ஆளத் துடிக்கின்றன.

அன்று மன்னராட்சி முறையில் சிறு சிறு நாடுகளையும் தங்களின் கீழ் கொண்டு வந்து பேரரசாக நிறுவி மன்னர்கள் ஆண்டதுபோல இப்போதும் மொழி வழி மாநில அரசுகளை தங்கள் வசம் கொண்டுவந்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சட்டம், ஒரே ஆட்சி என்று மீண்டும் ஒரு பேரரசை நிறுவவே டெல்லியில் ஆள வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் முயற்சி செய்கின்றன.

இவ்வாறு செய்வதால் ஒவ்வொரு மொழி வழி தேசிய இனங்களும் தங்களின் சுய இன அடையாளங்களை இழக்க நேரிடுகிறது.

தங்களின் மொழி, இலக்கியம், கலை, அறிவியல், பண்பாடு என்று அனைத்தையும் இழக்கும் நிலையை இது உருவாக்குகிறது.

எனினும், எந்த மாநில அரசுகளும் தங்களின் மொழி வழி தேசிய இன அடிப்படை அடையாளங்களை இழக்க விரும்புவதில்லை என்று அறிந்தபிறகு நேரடியாக இல்லாது, மறைமுகமாக அந்தந்த மாநில மொழிகளை அழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியாக ஹிந்தியைத் திணிப்பது இந்த நோக்கில்தான்.

பிற மொழியாளர்களுக்கு எப்படியோ, பிற மாநிலத்தவர்களுக்கு எப்படியோ ஆனால் தமிழர்களுக்கு இது விளையாட்டானது அல்ல. காரணம், தமிழ் மொழி பிற மொழிகள் போல அல்ல.

பிறமொழிகள் ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளின் துணையோடுதான் இயங்கவே முடியும், தனித்து இயங்கவே முடியாது.

ஆனால், தமிழ் எந்த ஒரு பிறமொழிச் சொற்களும் இல்லாமல் தனித்து இயங்க முடியும். தமிழில் உள்ள பிறமொழி சொற்கள் அத்தனையையும் எடுத்துவிட்டாலும்கூட தமிழால் தனித்து இயங்க முடியும்.

தொல்காப்பியம் உலகில் வேறு எந்த மொழி ஆவணங்களிலும் சொல்லப்படாத பல பத்தாயிரம் ஆண்டுகள் அறிவைச் சொல்கிறது.

அழிந்துபோன அல்லது அழிக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் தவிர மீதம் எஞ்சித் தப்பிய தமிழ் இலக்கியங்களில் உள்ள அறிவுகூட வியக்கத்தக்கதாக உள்ளது. உலகில் வேறு எந்த மொழி ஆவணங்களிலும் இல்லாத அறிவுத் தகவல்கள், வாழ்வியல் பேருண்மைகள் தமிழர் இலக்கியங்களில் மட்டுமே உள்ளன.

ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளுக்கு சொற்களைக் கடன் கொடுத்த மொழியாகத் தமிழ் உள்ளது.

தமிழர் கலை, இலக்கியம், இசை, நாட்டியம், பண்பாடு ஆகியவை தனித்து விளங்குகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ், தமிழர் நாகரிகம் இயற்கையோடு இசைந்ததாக உள்ளதுதான் பெரும் வியப்புக்குரியது.

நாம் மேலை நாடுகளின் தேதி, மாதம், ஆண்டு ஆகிவற்றை நடைமுறையில் பின்பற்றுவதால் நமக்கு இயற்கையோடு இசைந்த நமது தமிழர் வாழிவியல் குறித்த அறிவு மழுங்கிவிட்டது.

ஆனாலும், தமிழர் மாதங்கள் சித்திரை தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதக் கணக்குகள் அப்படியே இயற்கையின் பருவ காலம், வேளாண் விளைச்சல் ஆகியவற்றை ஒத்து இயங்குகிறது.

தமிழர்களின் மாதக்கணக்கில் வரும் விண்மீன் நாட்களின் அடிப்படையில்தான் தைப்பூசம் உள்ளிட்ட தமிழர் வழிபாட்டு நாட்களும் பின்பற்றப்படுகின்றன.

மேற்குலக நாடுகளும் பிற நாடுகளும் இப்போதுதான் வயதாவதை தடுத்து இளமையோடு வாழ்வது எப்படி, சாகாமல் இருப்பது எப்படி என்றெல்லாம் ஆய்வுகளைத் தொடங்கி இருக்கிறது.

ஆனால் நரை, திரை, மூப்பு, பிணி, சாவு ஆகிய முடி நரைத்தல், கண் புரை இல்லாதிருத்தல், வயதாகமல் தடுத்தல், நோய் வராமல் வாழுதல், இறவாமல் இருத்தல் எனும் ஐந்து சாதனைகளையும் செய்து காண்பித்து இவற்றை அடுத்தவருக்கும் தமிழ் சித்தர்கள் போதித்து பல நூறு ஆண்டுகள் ஆகின்றன.

இப்படிப்பட்ட ஒரு இனம் இன்று திரைக்கவர்ச்சி (சினிமா மோகம்), மது, இலவசங்கள் என்று மயக்கப்பட்டு தாங்கள் தமிழர்களே அல்ல திராவிடர்கள் என்று குழம்பி நிற்கும் அளவுக்கு மாற்றி மதி மயக்கி வைத்தவர்கள் திராவிட முகமூடிகளணிந்த பிற மொழியாளர்கள்.

ஆரியர்கள் என்று அழைக்கப்படும் வட வேத வைதீகர்கள் (பிராமணர்கள்) தமிழர்களின் மொழி, இறையியல், பண்பாடு, கலை, இசை, நடனம் ஆகியவற்றைத் தங்களுடையதாக்கிக் கொண்டுவிட்டனர்.

வரிவடிவமே இல்லாத சமஸ்கிருதத்தில் இருந்துதான் தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளும் தோன்றின, சமஸ்கிருதம் “தேவ பாஷை” என்று கற்பித்து தமிழ் கோயில்களில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலித்து வருகின்றனர்.

தமிழர்கள் புடவை உடுத்தும் வழக்கத்தை “மடிசார்” என்று அவர்களே புடவையைக் கண்டுபிடித்தது போல கற்பிக்கின்றனர். தமிழர்களின் இசை மும்மூர்த்திகளை மறைத்து சம்ஸ்கிருத, தெலுங்கு மும்மூர்த்திகளை இசை மும்மூர்த்திகள் என்று கொண்டாடுகின்றனர், தமிழர் நாட்டியக்கலை சதுராட்டத்தை தங்களுடையதாக்கிக் கொண்டு “பாரத நாட்டியம்” என்று பெயரிட்டு இசை நாட்டியக் கலையே அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொந்தம் கொண்டாடுகின்றனர்.

தமிழர் கடவுள் முருகனுக்கு சுப்பிரமணியர் என்று பெயர் சூட்டி, தெய்வயானை எனும் பிராமணப் பெண்ணை ஆவது இரண்டாவது மனைவியாகி தமிழ்க் கடவுளை சமஸ்கிருதமயமாக்கிவிட்டனர்.

எகிப்தில் பிரமிட்டில் தமிழ் எழுத்துக் கிடைத்தால் அதனை சமஸ்கிருதம் என்று சமஸ்கிருதமயமாக்குகின்றனர்.

வட வேத வைதீகர்கள் தமிழர்களின் மொழி, இலக்கியம், இசை, நாட்டியம், கலை, பண்பாட்டை, இறைவழிபாட்டை சமஸ்கிருதமயமாக்கி அவர்களுடையது என்று சொந்தம் கொண்டாடுகின்றனர்.

திராவிட முகமூடி அணிந்துள்ள தெலுங்கு உள்ளிட்ட பிறமொழியாளர்கள் தமிழர்களின் மொழி, இலக்கியம், இசை, நாட்டியம், கலை, பண்பாட்டை, இறைவழிபாட்டை திராவிடமயமாக்கி சொந்தம் கொண்டாகின்றனர்.

ஒருபடி மேலே சென்று திராவிட முகமூடி பிறமொழியாளர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துக் கொண்டு விட்டனர்.

அப்படியானால் தமிழரின் நிலை என்ன…???

ஒரு வினாடி சிந்தித்துப் பாருங்கள். நாம் தமிழர் கட்சியின் தேவை ஏன் என்று புரியும் !

இரண்டு புறமும் இரண்டு சூழ்ச்சிக்காரர்கள் . நடுவே தமிழர்கள் அதுவும் தலைமை அற்ற தமிழர்கள். சாதிகளாக, மதங்களாக, மது போதைக்கு அடிமையானவர்களாக, திரைக்கவர்ச்சி, இலவசங்களுக்கு மயங்குபவர்களாக மாற்றி வைக்கப்பட்டுள்ள, தலைமை அற்ற தமிழர்கள். இப்படி ஒரு சூழ்ச்சி வலைக்குள் சிக்கி அழிந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட கடந்த 2009 வரைக்கும் அறியாமலேயே ஏமாந்து வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள்.

ஆனால் இதனை ஆய்ந்து அறிந்து உள்வாங்கிக் கொண்டு தமிழர்கள் யாரென்று இந்த உலகத்திற்கு செவுளில் அரைவதுபோல சொன்னவர் மேதகு தேசியத் தலைவர் அவர்கள்.

சுமார் ஆயிரமாண்டுகள் அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு இனத்தினரை தட்டி எழுப்பவேண்டுமானால் அதற்கு எங்கிருந்து தொடங்குவது, எப்படிக் கொண்டு செல்வது, யாரை வைத்து என்ன செய்வது என்று தீர நிதானமாக சிந்தித்து அதனைத் துல்லியமாகச் செயல்படுத்தியவர் மேதகு தலைவர்.

வீழ்ந்த இடத்திலிருந்து தொடங்கினார் அவர்.

சோழர்களின் வீழ்ச்சிதான் தமிழர்களின் வீழ்ச்சி என்றும் அறிந்த அவர் சோழர்களின் நீட்சியாகவே இயக்கம் கண்டார். புலிக்கொடி, சோழன் கப்பல் என்று சோழப் பேரரசின் பிற்கால அரசனாக செயல்பட்டுக் காண்பித்தார்.

அறம் என்றால் அறம், ஆயுதம் என்றல் ஆயுதம் என்று சமரசமற்று அவர் நின்றார்.

உறங்கி கிடந்த, மயங்கிக் கிடந்த தலைமையற்றுக் கிடந்த தமிழர்களை ஓர்மைப்படுத்தும் செயல் நாம் மேலே பார்த்த, தமிழர்களை எளிதாக ஏய்த்து வாழும், வட வேத வைதீகர்கள் மற்றும் திராவிட முகமூடிகளுக்கு இனிக்குமா என்ன ?

ஆரிய வட வேத வைதீகமும், திராவிட முகமூடிகளும் இணைந்தே இயக்கத்தை அழித்தனர். இயக்கத்தோடு சுமார் இரண்டு லட்சம் தமிழர்களையும் அழித்தனர்.

சம உரிமை கேட்ட தமிழர்களை பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக விரட்டி அடித்தனர்.

தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்க வெறிகொண்டு முனைகின்றனர்.

எண்ணிப்பாருங்கள், தங்களுக்கென்று ஒரு மொழி, இனம், உறவுகள், கலை, இலக்கியம், பண்பாடு, இசை, நாட்டியம், காப்பியங்கள், நாடு என்று பல ஆயிரமாண்டுகளாக வாழும் ஒரு இனத்தை அவர்களுக்கு என்று ஒரு மொழி இல்லை, இனமில்லை, கலை, இசை, நாட்டியம், பண்பாடு, இலக்கியம் என்று எதுவுமில்லை எல்லாம் பார்ப்பனீயப் புராணக் கதைகள் என்று திராவிட முகமூடிகளும், இவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தவை என்று வட வேத ஆரிய வைதீகமும் ஒருசேர சொந்தம் கொண்டாடி தமிழர்களை மொழி அற்றவர்களாக, இனமற்றவர்களாக, கலை, இலக்கியம், பண்பாடு அற்றவர்களாக வெறும் சாதி, மதக் கொத்தடிமைக் கூட்டமாக ஆக்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு திட்டமிட்டத் தொடர் தாக்குதல் நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த சூழ்ச்சி கூட அறியாது இரண்டு பக்கமும் தலையாட்டிக்கொண்டு ஒரு வாத்துக் கூட்டமாக வாழ்வது எத்தகைய இழி நிலை ?!

இப்படிப்பட்ட படு சிக்கலான ஒரு நிலையில்தான் தமிழர்களுக்கென்று ஒரு தகுதி வாய்ந்த தலைவரை மேதகு தலைவர் அடையாளம் காண்பித்திருக்கிறார்.

காலம் கனிந்து நிற்கிறது.

கனிந்த காலமென்றாலும், நுட்பமான நயவஞ்சக அரசியலை எதிர்கொள்ள முதலில் உள்ளத் தெளிவு தேவை, அந்த உள்ளத் தெளிவில் உறுதியாக நிற்கும் துணிவு தேவை. துணிவோடு நின்று தொடர்ந்து செயல்பட நேர்மை தேவை. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மீதும், தமிழர் மீதும் உண்மையான அன்பும் அக்கறையும் தேவை.அப்படிப்பட்டவர்களை உருவாக்கும் ஒரு இயக்கம் தேவை.

அத்தகைய தெளிவான ஒரு தலைவர்தான் திரு.சீமான், அத்தகைய ஒரு உறுதியான இயக்கம்தான் லட்சக்கணக்கான தம்பி தங்கைகளைக் கொண்டு செயல்படும் நாம்

தமிழர் கட்சி.

நாம் தமிழரில் செயல்படும் ஒவ்வொருவரின் ஆன்மாவிலும் மேதகுவின் உணர்வு செயல்பட்டுக் கொண்டிருப்பதை உணர முடியும்.

நாம் தமிழர் வெறும் தேர்தல் வெற்றி பெறத் தொடங்கப்பட்ட இயக்கமோ, கட்சியோ அல்ல. தமிழரினத்தின் ஆயிரமாண்டு அடிமைத் தளையை, விலங்கை உடைக்க வந்த பெரும்புரட்சி !

spot_img

Continue reading

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா போர் ; அதிர வைக்கும் மூல காரணம்

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும் அந்த ஒரு 'ரகசியம்' மட்டும் ஒருபோதும் சொல்லித்தரப்படவில்லை. நான் கீழே சொல்லப் போவதை நீங்கள் புரிந்துகொண்டால், இன்று தொலைக்காட்சியில் வரும் உலகச்...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும் கொண்டு வந்ததே திமுகதான் : நாடகமாடும் திருமுருகன் காந்தி !

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற இராஜகோபாலச்சரியார் அறிவித்தபோது, ஈ.வெ.இராமசாமி நினைத்திருந்தால் நண்பர் இராஜாஜியிடம் நட்பு ரீதியாகவே எடுத்துக்கூறி இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வைத்திருக்கலாம். ஆனால், அதுகுறித்து மூச்சே விடவில்லை பெரியார் இராமசாமி. மாறாக, அந்த அறிவிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்த அறிக்கை...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு ஒரு முரட்டு அதிபரால் அதன் மதிப்பை இழந்து நிற்கிறது : ராபர்ட் ரைக்

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார். தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடும் ராபர்ட் ரைக் இதில் பல பொதுமக்களும் குழந்தைகளும் உள்ளதாகத்...