புறநானூற்றுப் புலவர்களால் பாடப்பட்ட மன்னர்களில் பிட்டன் மகன் கொற்றனும் ஒருவர்.
இதில் பிரிட்டன் என்பது ஊர்பெயராக புறநானூற்றில் கூறப்படவில்லை. பிட்டனின் மகன் கொற்றன் என்றே உள்ளது. பிட்டங்கொற்றன் சிறந்த போர் வீரன் என்றும், மலை நாட்டை ஆண்டதால் அவர் மலை கெழு நாடன் என்றும் கூர்வேல் பிட்டன் என்றும் பாராட்டப்பட்டுள்ளான்.
பிட்டன் மற்றும் கொற்றன் இருவருக்கும் தனித்தனி சமணப் படுக்கைகள் பற்றிய குறிப்புகள் புகளூர் கல்வெட்டில் உள்ளன. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (புறம் 169) மற்றும் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் (புறம் 168) ஆகியோர் பிட்டங்கொற்றன் குறித்துப் பாடியுள்ளனர்.
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப,
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும்
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன்,
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே
– – திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம். அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
புறநானூற்றுப் புலவர்கள் பாடிய அரச வள்ளல்களின் பெயர்கள் :
அகுதை
அண்டிரன்
அதியமான் நெடுமான் அஞ்சி
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி
அந்துவஞ் சாத்தன்
அந்துவன் கீரன்
அம்பர் கிழான் அருவந்தை
அவியன்
ஆதன் அழிசி
ஆதனுங்கன்
ஆந்தை
ஆமூர் மல்லன்
ஆய்
ஆய் அண்டிரன்
இயக்கன்
இருங் கோவேள்
இளங் கண்டீரக்கோ
இளங் குமணன்
இளந் தத்தன்
இள விச்சிக்கோ
இள வெளிமான்
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்
எயினன்
எவ்வி
எழினி
ஏறைக்கோன்
ஏனாதி திருக்கிள்ளி
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
ஓய்மான் நல்லியக்கோடன்
ஓய்மான் நல்லியாதன்
ஓய்மான் வில்லியாதன்
கடிய நெடு வேட்டுவன்
கண்டீரக்கோப் பெரு நள்ளி
கண்ணகி
கந்தன்
கபிலன்
கரிகால் வளவன்
கரும்பனூர் கிழான்
காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி
கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
கிள்ளி வளவன்
குமணன்
கொண்கானங் கிழான்
கோச் சேரமான் யானைக்கட் சேய் மாந்த ரஞ்சேரல் இரும்பொறை
கோப்பெருஞ்சோழன்
கோப்பெருஞ்சோழன் நடுகல்
சிறுகுடி கிழான் பண்ணன்
சேர, சோழ, பாண்டியர்
சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை
சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன்
சேரமான் கடுங்கோ வாழியாதன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை
சேரமான் குட்டுவன் கோதை
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
சேரமான் கோக்கோதை மார்பன்
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் பெருங் கோப்பெண்டு
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன்
சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
சேரமான் பெருஞ்சேரலாதன்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
சேரமான் மாரி வெண்கோ
சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
சேரமான் வஞ்சன்
சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந் தாயன்
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ் சாத்தன்
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னி
சோழன் உருவப் பல் தேர் இளஞ்சேட் சென்னி
சோழன் கரிகாற் பெருவளத்தான்
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
சோழன் செங்கணான்
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி
சோழன் நலங்கிள்ளி
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்
சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி
சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி
சோழன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி
சோழன் வேற் பல்தடக்கைப் பெருவிறற்கிள்ளி
சோழிய ஏனாதி திருக்குட்டுவன்
தந்து மாறன்
தருமபுத்திரன்
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்
தழும்பன்
தாமான் தோன்றிக் கோன்
தித்தன்
தேர் வண் மலையன்
தொண்டைமான்
நம்பி நெடுஞ்செழியன்
நலங்கிள்ளி
நள்ளி
நன்னன்
நாஞ்சில் வள்ளுவன்
நாலை கிழவன் நாகன்
நெடியோன்
நெடுங்கிள்ளி
நெடுமான் அஞ்சி
நெடுவேள் ஆதன்
பண்ணன்
பரணன்
பரதவர்
பாண்டியன் அறிவுடைநம்பி
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
பாண்டியன் கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி
பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி
பாண்டியன் கீரஞ் சாத்தன்
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்
பாண்டியன் நெடுஞ்செழியன்
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
பாரி
பாரி மகளிர்
பிசிராந்தையார்
பிட்டங்கொற்றன்
புல்லி
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்
பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பேகன்
பொகுட்டெழினி
பொறையாற்று கிழான்
மல்லி கிழான் காரியாதி
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்
மலையமான் திருமுடிக்காரி
மலையமான் மக்கள்
மலையன்
மாங்குடி மருதன்
மாவளத்தான்
முக்காவனாட்டு ஆமூர் மல்லன்
மூவன்
யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
வல்லார் கிழான் பண்ணன்
வல்வில் ஓரி
வல்வில் வேட்டுவன்
வாட்டாற்று எழினியாதன்
விச்சிக்கோன்
வெளிமான்
வேங்கைமார்பன்
வேள் எவ்வி
வேள்பாரி
வையாவிக் கோப்பெரும் பேகன்
எனவே பிட்டன் என்பது ஊர்ப் பெயர் அல்ல அது கொற்றனின் தந்தை பெயர் என்பது தெளிவாகிறது.
-வளர்மெய்யறிவான்

