மத்திய கிழக்கு அரபு நாடுகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அழுத்தங்களுக்கு ஆளாகாமல் ஈரான் தனித்து எதிர்த்து நின்று வருகிறது. ஷியா மதக் கோட்பாடுகளைப் பின்பற்றும் பெர்சியர்களான ஈரான் இஸ்ரேல், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குப் பயப்படுவதில்லை.
பிற அரபு நாடுகள் பெரும்பாலும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஆளாகி நட்பு நாடாக இருப்பதுடன் அமெரிக்காவின் இராணுவ தளங்களுக்கும் இடம் கொடுத்துள்ளன.
நேற்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் ஈரானின் 24 மாகாணங்களில் சுமார் 201 பேர் பலியாகினார்கள்.
பதிலுக்கு ஈரான், மத்திய கிழக்கு அரபு நாடுகளான கத்தார், ஐக்கிய அமீரகம், குவைத், பக்ரைன், ஜோர்டான், சவூதி அரேபியா, ஈராக், ஓமான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுமார் 27 அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
சக இஸ்லாம் நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தாது என்று எண்ணியிருந்த அமெரிக்காவுக்கு இது பேரதிர்ச்சி அளித்துள்ளது.
ஈரான் தொடர்ந்து தங்கள் இராணுவத் தளங்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினால் “இதுவரை இல்லாத அளவு பெரும் இராணுவ பலத்துடன் பதில் தாக்குதல் நடத்துவோம்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கும் அளவுக்கு ஈரான் நடத்திய பதில் தாக்குதல் அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானைப் பொறுத்தவரை அவை சக அரபு நாடுகளாக இருந்தாலும், தாங்கள் பதில் தாக்குதல் நடத்திய தளங்கள் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் மீதுதான் என்பதில் தாங்கள் தெளிவாக உள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அடுத்த உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்வரை ஈரான் அமைதி காக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா காமனெய் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

