ஈரானின் பிரபலமான போர்க்கப்பல் IRGS டேனா இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு பயிற்சிக்காக வந்திருந்தது. அது இந்தியாவிலிருந்து புறப்பட்டு பன்னட்டுக் கடலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இலங்கை அருகே மூழ்கியது.
அந்தக் கப்பலிலிருந்து அதிகாலை அவலக்குரல் கேட்டதையடுத்து இலங்கைக் கடற்படை மற்றும் விமானப்படையினர் அங்கு விரைந்தனர். அங்கே உயிருக்குத் தத்தளித்துக் கொண்டுருந்த 32 பேர் மீட்கப்பட்டு இலங்கை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மொத்தம் 150 பேர் வரை அந்தக் கப்பலில் பயணம் செய்ததாகவும், 32 பேர் மட்டுமே மீட்கப்பட்டதாகவும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹெராத் தெரிவித்துள்ளார்.
எனினும் கப்பல் மூழ்கியதற்கான காரணம் தங்களுக்குத் தெரியவியில்லையென இலங்கை கடற்படை தெரிவிக்கிறது.
இதற்கிடையில் இந்தியா அருகே ஈரானின் போர்க்கப்பல் ஒன்றை நீர்மூழ்கிக் கப்பல் முலமாக தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததாக அமெரிக்காவின் இராணுவச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.

ஈரான் மீதான போர் இந்திய இலங்கை அருகே இந்தியக் கடற்பரப்பில் தாக்குதலாக நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

