நாராயணமூர்த்தி, தொல்லியல் ஆய்வாளர்
“சிகை கொற்றன்”
தமிழ் மேல் வன்மத்தையும் வெறுப்பையும் வக்கிரத்தையும் கொட்டி, தமிழன் என்ற போர்வையில் பொதிந்து கொண்டு, சமஸ்கிருதத்தை தமது தாய்மொழியாக உணர்பவர்களுக்கு இந்தப் பதிவு
எகிப்து பிரமிடுகளில் எட்டு முறை எழுதப்பட்டுள்ள சிகை கொற்றன் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் போது வழக்கம் போல எதிர்பார்த்தபடி ‘அது தமிழ் அல்ல. சமஸ்கிருதம்’ என்று உரிமை கொண்டாட வந்து விட்டீர்கள்.தனக்கென ஏதும் இல்லாதவன் தான் அடுத்தவன் சிகை மேல் ஏற விரும்புவான்.
சிகை என தெளிவாக அங்கு எழுதி இருக்கும் போது வம்படியாக அதை சிகா என சொல்லி ஏன் சமஸ்கிருதப் படுத்த வேண்டும்.?
தமிழ் சிகை என்பது குறிப்பாக ஆண்களின் தலைமுடியைக் குறிக்கிறது.
சிகைக்காய் என்பது ஆண்களுக்கும் அரப்பு என்பது பெண்களுக்கும் சங்கநாட்களில் பயன்பாட்டில் இருந்த ஒரு தமிழ்சித்த மருத்துவ மூலிகை.
முடிக்கு பல சொற்கள் தமிழில்/பிங்கல – திவாகர நிகண்டுகளில் கொட்டிக் கிடக்கின்றன.
ஆண் பெண்ணுக்கு பொதுவாக
கதுப்பு
சுரியல்
குழல்
முடி
மயிர்
கொப்பு
சிகழிகை
பின்னகம்
என்றும்
ஆண்கள் முடிக்கு மட்டும்
மயிர்
முடி
உளை
தளை
குழல்
பங்கி
தொங்கல்
நவிர்
கார்
குடுமி
பித்தை
ஓரி
குஞ்சி
சுரியல்
பிச்சம்
சுடிகை
சிகை
என்றும்
பெண்களுக்கு
மை
குழல்
கூழை
குந்தளம்
கூந்தல்
பனிச்சை
வார்
ஐம்பால்
உச்சி
தொங்கல்
கதுப்பு
அளகம்
துஞ்சை
சுருள்
கொண்டை
பின்னல்
சடை
ஓதி
விலோதம்
கோதை
குருள்
குரல்
கூரல்
கொப்பு
மிஞ்சிகம்
தம்மிலம்
முச்சி
குடிலம்
சிகழிகை
என்றும்
கொட்டிக் கிடக்கும் போது கொற்றனின் பெற்றோர் தம் குழந்தைக்கு சமஸ்கிருதத்தில் பெயர் இட வேண்டிய அவசியம் இல்லை.
சிகை என்பது தமிழ்ச் சொல்.
அது வடமொழியில் சிகா என கடன் வாங்கப்படுகிறது. கேஷம்
என்பதுதான் அங்குள்ள வடமொழி மயிர்களுக்கு உரிய பெயர்.
சிலை> ஷிலா
எனவும்
கலை> கலா எனவும் வடமொழியில் திரிவதைப் போல சிகை> சிகா எனத் திரிகிறது.
வடமொழி பெயர்ச்சொல்லில் இரண்டாவது /நான்காவது வல்லின எழுத்து வருமேயானால் அது தமிழில் இருந்து கடன் பெறப்பட்டதே.
தமிழ் முகம் வடமொழியில் முக(2)ம் என்றும் தமிழ் நகம் வடமொழியில் நக(2)ம் என்றும் இரட்டிப்பு வல்லின அழுத்த உச்சரிப்பு பெறும்.அதனால்தான் தமிழ் சிகை வடமொழியில் ஷிகா(2) என திரிகிறது.
“பல்மயிர் கொய் கவல்
மேல் விரித்த யாக்கை சிகழிகை செவ்வுளை” என்பது சங்க இலக்கியச் சான்று. (கலித்தொகை
96/8-9)
கொல்லன் தெருவில் ஊசி விற்க வேண்டாம்.
கேசம் என்பதைத் தவிர வேறு சொல் இல்லாத வடமொழி மயிருக்கு ஏன் தமிழ் சிகையை அபகரிக்க ஆசை.?
உண்மையில் அந்தப் பிரமிடுகளில் சமஸ்கிருதம் இல்லை.அது பிராகிருதம்.
அந்தக் குட்டு சீக்கிரம் வெளிப்பட்டு விடும் என்று அஞ்சி அந்த ஷிகா என்ற மயிர் தமிழ் சிகை மேல் ஏறி உட்காரப் பார்க்கிறது..!
வடமொழியில் உள்ள ஷிகா என்பது தமிழ்மொழி சிகையில் இருந்து கடன் பெறப்பட்டதே.
இருப்பவரிடம் இல்லாதவர் கடன் பெறுவது இயல்பானதே.அதை தமிழர்கள் யாரும் பழிப்பதில்லை.ஆனால் கடன் வாங்கி விட்டு நீதான் என்னிடம் இருந்து கடன் பெற்றாய் என்று குதர்க்கமாய் வன்மமாய் வக்கிரமாய் வெறுப்பைக் கக்கும் போது எதிர்வினை ஏற்பட்டு சமஸ்கிருதம் தாக்குதலுக்கு உள்ளாகிறது.
உலகில் உள்ள அனைத்து மொழிகளும் அழகானவையே..
“யாதும் மொழியே யாவரும் கேளிர்.”
ஆனால் எமது பெருமைகளின் மேல் கல் எறிந்தால் வேடிக்கை பார்க்க முடியாது… உங்கள் மொழி எங்களிடம் அடி வாங்குவதை யாம் ரசிக்கவில்லை.எமது பண்பாடு அடுத்தவர் மொழியை அடி(ழி)ப்பதல்ல.
அங்கு எகிப்துக்குச் சென்றவர் ஒரு தமிழர்.அவர்தாய்மொழி தமிழ்.அவர் அவருடைய பெற்றோர்கள் இட்ட தூய தமிழ்ப்பெயரை பொறித்திருக்கிறார்.இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை..? சிகைகொற்றன் என்பதற்கு பதில் ‘பத்ரி’ என்றோ ‘ஷேஷாத்ரி’ என்றோ எழுதி இருந்தால்தான் அது சமஸ்கிருதம் என நீங்கள் உரிமை கொண்டாட முடியும்…?!

