HomeTamil Naduபுதிதாக 4 ஹைட்ரோ...

புதிதாக 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளைஅனுமதிக்கக் கூடாது : சீமான் போர்க்கொடி !

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

சுற்றுச்சூழலை சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று போராடி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

நிலத்தையும், நீரையும் மாசுபடுத்தி சுற்றுச் சூழலை சீர் கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அனுமதிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. அதையடுத்து அதிமுக அரசு, காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் திட்டங்களை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்தது.

தொடர்ந்து வந்த திமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி, இராமநாதபுரம் கடற்கரை பகுதி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் தொடங்கப்படவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கடும் எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டன.

தற்போது மீண்டும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கத் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் (TNCZMA) சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதி பாரம்பரிய மீன்பிடித் தொழில் பகுதி மட்டுமல்லாது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தொடங்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டமானது கடல் நீரை மாசுபடுத்தி, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்தை அழித்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கே பேராபத்தை ஏற்படுத்தும்.

தனியார் பெருநிறுவனங்களின் நலனுக்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும், கடல் வளத்தையும் அழித்தொழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு அனுமதியளிக்க வேண்டாமென வலியுறுத்துகிறேன்.”

என்று தமது அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

spot_img

Continue reading

கால்பந்து உலகக் கோப்பை மேடையை நோக்கி எழும் ஈ*ழத் தமிழர் வீரர் நிஷான் வேலுப்பிள்ளை !

ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட உலகில் வேகமாக உயர்ந்து வரும் பெயராக மாறியுள்ள ஈ*ழத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த நிஷான் வேலுப்பிள்ளை, 2026 பிஃபா உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்ததன் மூலம் பன்னாட்டுக் கவனத்தை ஈர்த்துள்ளார். 2001 மே 7ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிறந்த நிஷான் வேலுப்பிள்ளை, சிறுவயதிலிருந்தே உள்ளூர் கால்பந்து போட்டிகளில் திறமையை...

3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் படுகொ*லை… என்ன செய்கிறது சிங்கப்பெண் படை ? : சீமான் கேள்வி

இதுகுறித்து சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வடமாநிலத் தொழிலாளி பிபின் மஞ்சி என்பவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு இதயத்தை நொறுக்குகிறது. பெற்ற குழந்தையைப் பறிகொடுத்து ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவித்து நிற்கும் பெற்றோருக்கு...

தமிழர் இன மீட்சி பேச இதுவே தருணம் !

- பெ. மணியரசன், தலைவர் : தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் - 2026 முடிவுகள் தமிழ்த்தேசியர்கட்கு ஒரு பக்கம் பேரதிர்வை உண்டாக்கியுள்ளன. நாம் தமிழர்கட்சி 2024-இல் வாங்கிய வாக்கு எண்ணிக்கையில் சரிபாதி இப்போது குறைந்து விட்டது. அக்கட்சியின் ஒரு வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை. அதே வேளை தமிழ்த்தேசியர்கட்கு மற்றொரு பக்கம் வாசல்...