— தமிழன் கரிகாலன்
இராமநாதன் அருச்சுனா என்கிற இந்த மருத்துவர் தமிழ்த் தேசியத்துக்கும், உலகத் தமிழர்களுக்கும், தமிழர் இனத்துக்கும் எதிராக செயல்படுவதற்கான காரணம் குறித்து நாம் விசாரித்தபோது அருச்சுனாவின் தந்தையில் இருந்து கதை தொடங்குகிறது. நாம் விசாரித்தவர்கள் நடந்த நிகழ்வுகளை நினைவு படுத்தினார்கள்.
“அருச்சுனாவின் தந்தை இராமநாதன் இலங்கை காவல்துறையில் பணியாற்றியவர். இந்த அனுபவத்தின் காரணமாக அவருக்குத் தமிழ்த் தேசக் காவல்துறையில் ஊதியத்தின் அடிப்படையில் பணி தரப்படுகிறது. (தமிழ்த் தேசத்தில் காவல்துறைத் தலைவராக இருந்த நடேசனும் இலங்கைக் காவல்துறையில் பணியாற்றியவர்தான்.)
பணியில் இருந்தபோதே ஒரு பெண்ணிடம் மிகத் தவறாக அருச்சுனாவின் தந்தை இராமநாதன் நடந்து கொண்டதாகப் புகார் எழுந்தது.
தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான குற்றம் மன்னிக்கப்படவே படாது, கடும் தண்டனை வழங்கப்படும்.
இராமநாதன் பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். விசாரணை முடிவில் இராமநாதன் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இராமநாதனை விசாரித்தவர் நீலன் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இராமநாதனுக்கு தமிழ்த் தேசத்தில் அளிக்கப்பட்ட தண்டனை பச்சைமட்டையில் 60 அடிகள், 60 நாட்கள் சிறைத் தண்டனை.
இப்படிப்பட்ட பெண் தொடர்பான குற்றம் இழைத்து, அது நிரூபிக்கப்பட்டுத் தண்டனை பெற்றவர்தான் அருச்சுனாவின் தந்தை இராமநாதன்.
அருச்சுனாவும் மது மற்றும் பெண்கள் தொடர்பில் வெளிப்படையாக ஒழுக்கமற்று செயல்படக்கூடியவர்.
அருச்சுனா தன்னைத் தமிழர் என்று கூறிக்கொண்டாலும் கூட அவரது செயல்பாடுகள் தமிழர்களுக்கு இருக்கும் அடிப்படை ஒழுக்கம், அறம் அற்றதாகவே இருப்பதைக் காணலாம். தனி மனிதராக மட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் எனும் வகையில்கூட அவர் ஒழுக்கமாக நடந்து கொள்வதில்லை என்பது உலகறிந்த ஒன்றாகிவிட்டது.
அருச்சுனா ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் சாவகச்சேரி மருத்துவமனையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்து பிரபலம் அடைந்த அதே வேளை, அந்த முறைகேட்டு புகார்களில் நுட்பமாக “இறுதிப் போரில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்த எளிமையான, நேர்மையான மருத்துவர்களையும்” அவர் கொச்சைப் படுத்தி இருந்தார்.
ஆக, தமிழர்களின் இறுதி யுத்த காலத்தில் சேவை செய்த மருத்துவர்கள், தமிழ்த் தேசிய நாடு குறித்துப் பேசும் தமிழர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய அரசியலை தமிழ்நாட்டில் முன்னெடுத்துவரும் சீமான் உள்ளிட்ட…தமிழர்களுக்கான சம உரிமை கேட்கும் அனைவரையும் கொச்சைப்படுத்தி, வன்மத்துடன் அவர்கள் மீது அவதூறு பரப்பி வருவதை ஒரு தொழிலாகவே செய்துவருகிறார் அருச்சுனா என்கிறார்கள் ஈ*ழத்து மக்கள்.
மருத்துவம் படித்த ஒரு தமிழர், சாவகச்சேரி மருத்துவமனையின் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த ஒரு தமிழர் என்று அருச்சுனாவை நம்பினோம், ஆனால் அவர் ஒரு நச்சுப் பாம்பு என்பது இப்போதுதான் தெரிகிறது என்கிறார்கள் சாவகச்சேரி மக்கள்.
இந்த அருச்சுனா போர்க் காலத்தில் சிங்களப் பெண் ஒருவருடன் இலங்கை தெற்கில் வாழ்ந்து வந்தார் என்று கூறும் அவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ச பங்கேற்ற கூட்டத்தில் பேசிய அருச்சுனா, தான் ஒரு சிங்கள பவுத்தப் பேரினவாதத்தின், அதிலும் தமிழர்களை ஈவு இரக்கமற்றுக் கொ*ன்று குவித்த ராஜபக்சவின் கைக்கூலி என்பதை உறுதி செய்தார் என்றும் கூறி அதிர்ச்சி தெரிவிக்கிறார்கள்.
மேலும், சிங்கள பவுத்தப் பேரினவாதிகளிடம் ஒரு “வழக்கம்” இருப்பதை நினைவு படுத்துகிறார்கள் அவர்கள். தவறு, பிழை, குற்றம், துரோகம் செய்து தமிழ்த் தேசிய இராணுவம், காவல்துறையால் தண்டிக்கப்பட்டவர்களின் வாரிசுகளை அணுகி, உனது அப்பா இறப்பிற்கு மேதகுதான் காரணம், இயக்கம்தான் காரணம் என்று கூறிக் கூறி அவர்களுக்குள் வெறுப்பை உண்டாக்குவது. இப்படி வெறுப்பேறிய இளையோர்களை ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகத் திருப்பிவிட்டு செயல்பட வைப்பது. அப்படி பொய் கூறி, மன நிலை பாதிக்க வைக்கபட்டு ராஜபக்சேவின் கைக்கூலியாக செயல்படும் அருச்சுனாவுக்கு இப்போது உண்மை புரியாது, இதே ராஜபக்ச கூட்டம் ஒருநாள் அருச்சுனாவையும் வேட்டையாடும் என்று” என்கிறார்கள் அவர்கள்.
அருச்சுனா இராமநாதன் ஒன்றும் சாவகச்சேரி மக்களால் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெறவைக்கப்பட்டவர் அல்ல. அவர் பெற்ற வாக்குகள் வெறும் 5,978 வாக்குகள் மட்டுமே. இலங்கைத் தேர்தலில் இரண்டு விதமான வாக்குகள் உள்ளன. ஒன்று வழக்கமான கட்சி அல்லது சுயேச்சைக் கட்சிக்கான வாக்கு, மற்றொன்று விருப்ப வாக்கு. அதாவது ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழு சார்பில் போட்டியிடும் ஏதாவது மூன்று வேட்பாளர்களில் தமக்கு பிடித்தமானவர்களை 1,2,3 என்று வரிசைப்படுத்தி வாக்களிப்பது. அதிலும் பிரதிநிதித்துவ அடிப்படையில் / விருப்ப வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்றதாகக் கூறப்பட்டவர்தான் அருச்சுனா.
மேலும், தேர்தலில் பல அத்துமீறல்கள், வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன என்பதையும் நினைவு கூறுகிறார்கள் சாவகச்சேரி மக்கள்.
ஒரு பெண்ணைத் து*ப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் சிறை சென்ற அருச்சுனாவை பிணையில் எடுத்தது மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச என்பதையும் நினைவு படுத்தும் சாவகச்சேரி மக்கள், தமிழ்த் தேசியத் தலைவரால் மாவீரர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ரவிராஜ் அவர்களின் சாவகச்சேரி தொகுதியில் ஒரு பைத்தியக்காரக் கோமாளி அருச்சுனாவைத் திட்டமிட்டு இறக்கியதும் தமிழ், தமிழர்களை, தமிழ்த் தேசியத்தை அவமானப்படுத்தவே என்றும் கூறுகிறார்கள் மக்கள்.
அருச்சுனா பிறப்பால் ஒரு தமிழராக இருக்கலாம். ஆனால், அவர் வேலை செய்வது தமிழர் இனத்தை முற்றாக அழிக்கத் துடிக்கும் ஒரு சிங்கள பவுத்த பேரினவாத வெறிபிடித்த ராஜபக்ச குடும்பத்திற்கு என்பதை ஒவ்வொரு தமிழரும் உணரவேண்டும் என்கிறார்கள் நிலத்திலும், புலத்திலும் வாழும் ஈழ*த் தமிழ் மக்கள்.

