Sunday, March 15, 2026

Creating liberating content

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும்...

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு...

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர்...

ஈரான் போர் : இந்தியாவில்...

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்,...
HomeIndiaபயங்கரவாத ஆயுதக் குழுக்களுக்கு...

பயங்கரவாத ஆயுதக் குழுக்களுக்கு உதவும் ஈரானின் உள்ளே மனித உரிமைகளுக்கும் இடமில்லை !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம்

ஈரானின் பழைய வரலாறு, அதன் பெர்சியத் தொன்மை ஆகியவை அந்நாட்டின் தனித்துவத்தை உணர்த்தினாலும் உலகக் காலனி ஆதிக்கம் முடிந்த காலகட்டத்துக்குப் பிறகு குறிப்பாக இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்ட பிறகு இன்றுவரை அந்நாட்டின் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பெண்ணுரிமை ஆகியவை எந்தவித

முன்னேற்றமும் அடையவேயில்லை. மனித உரிமைகளை சிறிதும் மதிக்காத நாடாகவே ஈரான் இருந்து வருகிறது.

மனித உரிமைகள் மதிக்கப்படாத நாடாகவும், பயங்கரவாத ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு தரும் நாடாகவும் ஈரான் இருந்து வருவதுதான் அந்நாட்டுக்குப் பெரும் பின்னடைவு.

ஈரான் மீதான இன்றைய இஸ்ரேல் – அமெரிக்கப் போர் என்பது எப்படி சட்டவிரோதமாக சில பிரிட்டன் நாடாளுமன்றவாதிகளால் பார்க்கப்படுகிறதோ, அமெரிக்க செனட் உறுப்பினர்கள் சிலரால் பார்க்கப்பட்டுகிறதோ அதேபோல ஈரானின் உள்நாட்டு சட்ட திட்டங்களும் அவை நடைமுறைப்படுத்தப்படும் விதமும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களை மதிக்காததாகவே இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ஒரு காட்டுமிராண்டித் தனமான ஆட்சியாகவே பல நிகழ்வுகளில் அந்நாட்டு ஆட்சி இருந்து வந்திருக்கிறது.

உலக மனித உரிமைத் தன்னார்வ அமைப்பு அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் 2024-25 ம் ஆண்டு அறிக்கையின் படி, “ஈரானில் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியாக மக்கள் ஒன்று கூடும் சுதந்திரம் அளிக்கப்படுவதில்லை. குறிப்பாக பெண்கள், இளம்பெண்கள், LGBTI மக்கள், இன மற்றும் மதச் சிறுபான்மை மக்கள் கடுமையான பாகுபாட்டுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர்.

மனித உரிமை குறித்துப் பேசும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்படுவது, கொடும் விசாரணைக்கு ஆட்படுத்தப்படுவது, துன்புறுத்தப்படுவது, தண்டிக்கப்படுவது ஆகியவை நடைபெறுகின்றன. நீதி விசாரணைகளும் சரிவர நடத்தப்படுவதில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்படுவது, கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவது மிக இயல்பான நடவடிக்கைகளாக ஈரானுக்குள் நடைபெறுகின்றன.

கசையடி, உறுப்புத் துண்டித்தல் உள்ளிட்ட கொடூரமான தண்டனைகள், மனிதாபிமானமற்ற துன்புறுத்தல் ஆகியவையும் நடைபெறுகின்றன. சிறுபான்மை மற்றும் புலம்பெயர்ந்து வந்தவர்கள் கடுமையான கொடூரமான தண்டனைக்கு ஆளாகிறார்கள். கடந்த 1988 ம் ஆண்டு சிறைச்சாலை கூட்டுத்தண்டனை பன்னாட்டு சட்ட விதிகளுக்கு முரணானது.

ஊடகங்கள் முடக்கப்படுவது, சமூக ஊடகங்கள் முடக்கப்படுவது, அரசியல் கட்சிகளுக்குத் தடை, தன்னார்வ மனித உரிமை மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்குத் தடை, தொழிற்சங்கங்களுக்குத் தடை, அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்த அமைதிப் பேரணிக்குக் கூட அனுமதி மறுப்பது என்பது ஈரானின் இறுக்கமான மனித சுதந்திரத்திற்கு விரோதமான நடைமுறைகளாக உள்ளன.

ஈரான் தொடர்ந்து ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட பயங்கரவாத ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளித்து வருவது, ஆயுதங்கள், பயிற்சி ஆகியவை அளித்துவருவதையும்” அம்னெஸ்டி இண்டெர்நேஷனல் அமைப்பு தமது அறிக்கையில் உறுதிப்படுத்தி உள்ளது.

மேலும், பன்னாட்டு மனித உரிமைப் பார்வையளார்களை ஈரான் அனுமதிப்பதும் இல்லை.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் ஈரான் எதிர்க்கப்படுவதற்கும், அந்த எதிர்ப்புக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவிப்பதற்கும் இந்தக் காரணங்களே முக்கியக் காரணங்களாக உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன், தமது “ஹிஜாப்” கடந்து தலைமுடி வளர்த்ததாக மாஷா ஆமினி எனும் 22 வயது இளம்பெண் ஈரான் ஒழுக்கவிதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்தது உலக அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருந்தது.

  • Explore tags ⟶
  • iran
spot_img

Continue reading

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா போர் ; அதிர வைக்கும் மூல காரணம்

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும் அந்த ஒரு 'ரகசியம்' மட்டும் ஒருபோதும் சொல்லித்தரப்படவில்லை. நான் கீழே சொல்லப் போவதை நீங்கள் புரிந்துகொண்டால், இன்று தொலைக்காட்சியில் வரும் உலகச்...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும் கொண்டு வந்ததே திமுகதான் : நாடகமாடும் திருமுருகன் காந்தி !

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற இராஜகோபாலச்சரியார் அறிவித்தபோது, ஈ.வெ.இராமசாமி நினைத்திருந்தால் நண்பர் இராஜாஜியிடம் நட்பு ரீதியாகவே எடுத்துக்கூறி இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வைத்திருக்கலாம். ஆனால், அதுகுறித்து மூச்சே விடவில்லை பெரியார் இராமசாமி. மாறாக, அந்த அறிவிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்த அறிக்கை...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு ஒரு முரட்டு அதிபரால் அதன் மதிப்பை இழந்து நிற்கிறது : ராபர்ட் ரைக்

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார். தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடும் ராபர்ட் ரைக் இதில் பல பொதுமக்களும் குழந்தைகளும் உள்ளதாகத்...