ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் எல்லா நாடுகளிலும் விலை உயர்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவில் LPG சமையல் எரிவாயுவுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தேவைகள், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கே எரிவாயு உருளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் வணிக ரீதியிலான தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தேவைகளுக்கும் 21 நாளைக்கு ஒருமுறை எரிவாயு உருளைக்குப் பதிவு செய்து வந்த நிலையில் 25 நாளைக்கு ஒருமுறை பதிவு செய்ய முடியும் என்று அரசு அறிவித்துள்ளது.
எரிவாயு மற்றும் எரிபொருள் பதுக்கல்கள் மற்றும் கள்ளச் சந்தை நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி எரிபொருளைப் பதுக்கி வைத்தால் தண்டம் மற்றும் தண்டனை அளிக்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரு மாதத்திற்கு 18 கோடி எரிவாயு உருளைகள் (LPG சிலிண்டர்), 900 கோடி லிட்டர் பெட்ரோல், 1200 கோடி லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.

