-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
வரலாற்றில் முதன் முறையாக இஸ்ரேல் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான். அதேபோல இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் முதன் முறையாக உரையாற்றிய இந்தியப் பிரதமரும் நரேந்திர மோடிதான். இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் மிக உயரிய கவுரவ விருதான Speaker of the Knesset Medal “கன்னசெட் உரையாளர்விருது” பெற்றமுதல் உலகத் தலைவரும் நரேந்திர மோடிதான்.
முன்னதாக, இரண்டாவது முறையாக இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்குச் சென்ற இந்துத்துவக் கொள்கை கொண்ட இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி காவி நிற கைக்குட்டையை மேல் சட்டையில் வைத்துக்கொண்டு தரையிறங்கினார். அவரைக் “காவி” நிற உடை அணிந்து வந்து வரவேற்றார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மனைவி சாரா நெதன்யாகு. இந்த இரண்டு “Same Pinch” வண்ணப் பொருத்தங்களை சுட்டிக்காட்டி மகிழ்ந்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

அரேபியர்களும், ஹீப்ருக்களுமான இஸ்லாமியர்களும் – யூதர்களும் உரிமை கொண்டாடும் ஒரு புனிதத் தலம் ஜெருசலேம். பெரும்பான்மை எண்ணிக்கையில் இஸ்லாமியர்களும் குறைவான எண்ணிக்கையில் யூதர்களும் வாழ்ந்து வந்த இந்த மண்ணில் இஸ்ரேல் எனும் தனி நாட்டை உருவாக்கினார்கள் யூதர்கள். அதாவது பாலஸ்தீனத்தைப் பிரித்து இஸ்ரேல் தனி நாடாக உருவாக்கப்பட்டது.
இஸ்ரேல் உருவானவுடன் அங்கிருந்து இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், உலகெங்கிலும் சிதறிக் கிடந்த யூதர்கள் இஸ்ரேலுக்கு குடியேறினார்கள். தமது இஸ்ரேல் நாட்டின் எல்லையைத் தொடர்ந்து விரிவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக “காசாவில்” (Gaza) ஆதிக்கம் செலுத்தும் இஸ்ரேலின் செயலும், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக இன்னமும் அங்கீகரிக்காத உலக நாடுகளின் செயலாலும் அங்கே தொடர்ந்து அமைதியற்ற போர்ச்சூழல் இருந்து வருகிறது.
இந்தப் பாலஸ்தீனப் பிரிவை எதிர்த்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 1947 ம் ஆண்டு “பாலஸ்தீனம் பிரிக்கப்படுவதற்கான” ஐநாவின் வாக்கெடுப்பில் அதற்கு எதிராகவே இந்தியா வாக்களித்தது. அரேபியர்களும் – யூதர்களும் ஒரே நாட்டில் இசைந்து வாழவேண்டும், பிரிவினை கூடாது என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது.
அதன் பிறகு 1950 ம் ஆண்டுதான் இஸ்ரேல் நாட்டை இந்தியா அங்கீகரித்தது. அதுவும் உடனே அங்கீகரித்துவிட வில்லை. சுமார் இரண்டு ஆண்டுகள் இஸ்ரேல் தரப்பில் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு, அரபு நாடுகளின் முகச்சுழிப்புக்கும், பகைமைக்கும் ஆளாகிவிடாமல் கவனமாக இந்த முடிவை எடுத்தது இந்தியா.
சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்தே “இஸ்ரேலை இந்தியா அங்கீகரிக்கிறது” என்று இந்திய தரப்பில் ஒரே வரியில் இஸ்ரேலுக்குத் தகவல் அனுப்பப்பட்டது.
அதேவேளை, அரபு நாடுகளின் தலைமைகளுக்கு ஒரு விரிவான தன்னிலை விளக்கத்தை அளித்தது இந்தியா.
இஸ்ரேல் உருவாக்கத்திற்கும் இஸ்லாமிய நாடுகளான துருக்கியும், ஈரானும் அங்கீகாரம் அளித்துள்ள நிலயில், ஒரு பொதுவான அணிசேரா நாடாக இந்தியா அங்கீகாரம் அளிக்கிறது. இதனால், இஸ்லாமிய அரபு நாடுகளுடனான உறவில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துக் கடிதம் அனுப்பியது இந்தியா. ஆனால் எகிப்து உள்ளிட்ட நாடுகள் இதனை ஏற்காமல் இஸ்ரேலை ஆதரிக்கும் இந்தியாவின் முடிவைத் திரும்பப் பெறக் கோரியது.
இப்படிப்பட்ட நிலையில் ஒருவாறாக இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்த நிலயில் 1953 ம் ஆண்டு இஸ்ரேலின் தூதரகம் இந்தியாவின் மும்பை நகரில் அமைக்கப்பட்டது.
எனினும் 1992 ம் ஆண்டுவரை இந்தியர்களுக்கு இஸ்ரேல் தடை விதித்தே இருந்தது. அதாவது இந்தியர்களுக்கு “விசா” எனும் நுழைவு அனுமதியை இஸ்ரேல் வழங்கவில்லை.
பிறகு 1992 ம் ஆண்டுதான் முதல் விசா வழங்கப்பட்டது. இதன்பிறகும் இந்திய – இஸ்ரேல் உறவு என்பது ஒரு குறித்த தொலைவிலான அளவான நட்பாகவே இருந்தது.
இந்தியாவின் பிரதமராக 2014 ம் நரேந்திர மோடி பதவியேற்றவுடன் இஸ்ரேலுடனான உறவில் பெரும் திருப்பங்கள் நடந்தேறின.
அவரது முதல் இஸ்ரேல் பயணத்தை அடுத்து இருநாட்டு உறவுகள் மேலும் பலமடைந்தன.
குறிப்பாக இந்தியாவின் பாஜக ஆதரவு தொழிலதிபர் அதானி இஸ்ரேலில் துறைமுகம் அமைத்து வணிகம் செய்யுமளவுக்கு உறவு பலப்பட்டது. அனில் அம்பானி 10 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டு ஒப்பந்தம் மேற்கொண்டு தொழில் உறவை இஸ்ரேலில் பலப்படுத்தினார்.
அனில் அம்பானி மற்றும் இஸ்ரேலின் உளவாளியுமான “எப்ஸ்டீன்” இடையே நடைபெற்ற உரையாடல் ஆவணங்களில் நரேந்திர மோடியின் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உறவுக்கான அலுவல்பூர்வமற்ற உறவுப் பாலம் எப்படி அமைக்கப்பட்டது என்று குறிப்பிடப்படும் அளவுக்கு இஸ்ரேல் -இந்தியா இடையே தீவிரமான உறவுப்பாலம் அமைக்கப்பட்டது.
பல லட்சம் கோடி ரூபாய்க்கு இஸ்ரேலிடமிருந்து இந்தியா ஆயுதங்கள், போர் விமானங்கள் ஆகியவற்றை வாங்குகின்றன.
இத்தகைய நிலையில் இரண்டாவது முறையாக இஸ்ரேல் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தமது மேல் சட்டையில் காவி நிற கைக்குட்டை அணிந்து சென்றார். அவரை வரவேற்க வந்த இஸ்ரேல் பிரதமர் மனைவி சாரா நெதன்யாகு காவி நிற உடை அணிந்து வந்தார்.
இந்த “காவி” நிற வண்ண “same pinch” ஒற்றுமையை வெளிப்படையாக சுட்டிக்காட்டி பிரதமர் நெதன்யாகு மகிழ்ந்தார்.
முன்னாதாக, இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான கேரளாவின் ரவிவர்மா ஓலைச்சுவடி ஒன்றை தமது முதல் பயணத்தின்போது மோடி, நெதன்யாகுவிடம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டாவது பயணத்தின்போது இஸ்ரேலின் “கன்னசெட்” நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் எனும் பெயரையும் பெற்றார் நரேந்திர மோடி.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் மிக உயரிய விருதான “கன்னசெட் உரையாளர்” விருது நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.

மோடி – நெதன்யாகுவின் நட்பும், இஸ்ரேல் — இந்தியப் புதிய உறவும் உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலும் மிகவும் உற்று நோக்கப்படுகிறது.
இஸ்ரேல் – இந்தியா தொடர்பான விரிவான கட்டுரைகளுக்குத் தொடர்ந்து வாசியுங்கள் tamiloodagam.net இணைய தளத்தை.

