Sunday, March 15, 2026

Creating liberating content

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு...

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர்...

ஈரான் போர் : இந்தியாவில்...

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்,...

கொங்குச் சோழர்களின் 800 ஆண்டுகள்...

- தொல்லியல் ஆய்வறிஞர் வெ.நாராயணமூர்த்தி திண்டுக்கல் - திருப்பூர் மாவட்ட எல்லையில் அமராவதி ஆற்றங்கரையில் உள்ளது கரியபிரான் கோயில். இக்கோயில்...
HomeIndiaதமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும் கொண்டு வந்ததே திமுகதான் : நாடகமாடும் திருமுருகன் காந்தி !

ள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற இராஜகோபாலச்சரியார் அறிவித்தபோது, ஈ.வெ.இராமசாமி நினைத்திருந்தால் நண்பர் இராஜாஜியிடம் நட்பு ரீதியாகவே எடுத்துக்கூறி இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வைத்திருக்கலாம்.

ஆனால், அதுகுறித்து மூச்சே விடவில்லை பெரியார் இராமசாமி. மாறாக, அந்த அறிவிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்த அறிக்கை அழைப்பிதழ் ஒன்றை குடியரசு மற்றும் விடுதலை இதழ்களில் வெளியிடுமாறு ஈழத்து சிவானந்தம் அடிகள் கேட்டபோது மறுத்ததோடு நில்லாமல் போராட்டம் தொடங்கியபோது அதைக் கலைக்க முயற்சித்தவர் இராமசாமி.

1965 ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காலிகள் அவர்கள் சுட்டுக் கொல்லுங்கள் என்று காவல்துறைக்கு கூறியவர் இராமசாமி.

இராமசாமியின் சீடர் என்று கூறிக்கொள்ளும் தி.மு.காந்திக்கு மட்டும் 2026 ம் ஆண்டு திடீரென்று எங்கிருந்து ஹிந்தி எதிர்ப்பு பொங்கி வழிகிறது ?

உண்மையில் 1938 ம் ஆண்டு போராட்டம் மக்கள் போராட்டம். 1965 போராட்டம் மாணவர்கள் போராட்டம். ஆனால் அதிலும் திமுக அரசியல் சாயம் பூசிக்கொண்டது.

இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்கள் நுழையாமல்தான் இருந்தன.

திமுகவின் டி.ஆர். பாலு இந்திய அரசின் கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோதுதான் மீண்டும் தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் ஹிந்தி திணிக்கப்பட்டது.

இதற்கு கருணாநிதி வார்த்தை ஜாலங்கள் செய்து சப்பைக் கட்டு கட்டினார்.

இது நடந்தது 2004 – 2009 வாக்கில். அப்போது அதனை திருமுருகன் காந்தி எதிர்த்தாரா என்றால் இல்லை. அப்போது எதிர்த்திருந்தால் இப்போது ரயில் நிலையங்களிலும் ஹிந்தி நுழைந்திருக்காது.

எனவே, திமுகவின் ஹிந்தி எதிர்ப்பே ஒரு நாடகம்தான். அதில் அந்தக் கட்சியின் தொங்கு சதையாக இருக்கும் தி.மு.காந்திக்கு இத்தனை ஆண்டுகள் இல்லாமல் அடுத்த மாதம் தேர்தல் வரும் நிலையில் ஹிந்தி எதிர்ப்பு பொங்குகிறது என்பதே நகைச்சுவைதான்.

தி.மு காந்தி உண்மையில் போராடவேண்டிய இடம் அறிவாலயம். ஆனால் அங்கு போராடினால் முதலுக்கே மோசம் வந்துவிடும். அதனால், உள்ளூர் ரயில் நிலையத்தில் நாடகமாடுகிறார்.

காரணம், (உண்மையான) தமிழ்த் தேசிய அன்பர்கள் சிலர் காஞ்சிபுரத்தில் தமிழில் எழுதுங்கள் என்ற கோரிக்கையுடன் தெருவுக்கு வந்தவுடன் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேலாக சிறையில் மு.க.ஸ்டாலின் அரசால் வைக்கப்பட்டார்கள்.

ஆனால் தி.மு.காந்திக்கள் பொங்கல், தீபாவளிக்கு வரும் விருந்தாளிப் போராளிகள். அதனால் அவர்கள் மீது ரயில் போலீசும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள், மாநிலப் போலீசும் எடுக்காது.

அடித்துக்கொலை, வெட்டிக்கொலை, சிறுமி கொலை, கிழவி பாலியல் வன்கொடுமை எனும் செய்திகளை மடை மாற்ற “ஹிந்தி எதிர்ப்பு” திருமுருகன் காந்திக்கும் மு.க.ஸ்டாலின்களுக்கும் தேவைப்படுகிறாள் போல !

-தமிழன் கரிகாலன்

spot_img

Continue reading

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா போர் ; அதிர வைக்கும் மூல காரணம்

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும் அந்த ஒரு 'ரகசியம்' மட்டும் ஒருபோதும் சொல்லித்தரப்படவில்லை. நான் கீழே சொல்லப் போவதை நீங்கள் புரிந்துகொண்டால், இன்று தொலைக்காட்சியில் வரும் உலகச்...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு ஒரு முரட்டு அதிபரால் அதன் மதிப்பை இழந்து நிற்கிறது : ராபர்ட் ரைக்

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார். தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடும் ராபர்ட் ரைக் இதில் பல பொதுமக்களும் குழந்தைகளும் உள்ளதாகத்...

ஈரான் போர் : இந்தியாவில் LPG சமையல் எரிவாயுவுக்குக் கட்டுப்பாடு : பதுக்கல்களைத் தடுக்க அத்தியாவசியப் பொருள் சட்டம் அமல்.

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் எல்லா நாடுகளிலும் விலை உயர்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் LPG சமையல் எரிவாயுவுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தேவைகள், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கே எரிவாயு உருளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் வணிக...