HomeTamil Naduஎட்டு விழுக்காடு வாக்குகளுடன்...

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார்.

ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார்.

பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த பின்பற்றாளர்கள் உருவானார்கள்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களின்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிடப் பெயர் கொண்ட கட்சிகளின் கூட்டணி இல்லாது தனித்து தமெக்கென்று ஒரு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.

பாமக, தமாகா, அமமுக மற்றும் சிறிய சில கட்சிகளை மட்டும் கூட்டணி சேர்த்து 23 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 11.1 விழுக்காடு வாக்குகள் பெற்றது.

தாமரை சின்னத்தில் 19 தொகுதிகளிலும், நான்கு தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு என்றும் ஒதுக்கப்பட்ட சின்னங்களிலும் போட்டியிட்டது பாஜக கூட்டணி.

அண்ணாமலைக்கென்று சேர்ந்த இளையோர் கூட்டம், ஆதரவாளர்கள் செல்வாக்கால் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி இரண்டு இலக்க வாக்கு விழுக்காடு பெற்றது.

அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினூடாகவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அழுத்தங்கள் காரணமாகவும் அண்ணாமலையின் தலைவர் பொறுப்பு மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரனிடம் அளிக்கப்பட்டது.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வாக்கு விழுக்காடு 2.97.

நாடாளுமன்றத் தேர்தலை விட 8.13 விழுக்காடு வாக்குகள் பாஜகவுக்குக் குறைந்தன.

சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை இல்லாத பாஜக பெற்ற குறைவான வாக்குகள், பாஜக தமிழ்நாடு மாநில அரசில் செய்த பிழைகள் ஆகியவை குறித்த அறிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை அமித்ஷாவிடம் கொடுத்த அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகியிருக்கிறார்.

இத்தகைய நிலையில் அண்ணாமலைக்கு என்று மட்டும் குறைந்தது 5-8 விழுக்காடு வாக்குகள் உள்ளன என்கிற நிலையில் தனியே கட்சி தொடங்க அவர் களமிறங்கியிருக்கிறார்.

முன்னதாக அரசியல் கல்வி ஒன்றைக் கற்க ஆறுமாத காலம் லண்டன் சென்றிருந்தார் அண்ணாமலை.

இந்துத்துவ ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அண்ணாமலையின் புதிய அரசியல் கட்சியின் கொள்கை, நிலைப்பாடு ஆகியவை குறித்த அவரது அடுத்த அறிவிப்பில் தெரியவரும்.

அதிமுக, திமுக, மதிமுக, விசிக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகளின் தேய்மானங்களுக்கு இடையே அண்ணாமலை களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

spot_img

Continue reading

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...

நாம் தமிழர் கட்சிப் பெயரை சீமானுக்குக் குருமூர்த்தி வாங்கிக் கொடுத்தாரா ?! 2010 ல் குருமூர்த்தி எங்கே இருந்தார் ?

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் தமிழ்த் தேசியம் என்பது ஏதோ இலங்கைத் தீவின் வடக்கில் தமிழர்களின் பூர்வகுடி நிலத்தில் வாழும் 20 - 30 லட்சம் தமிழர்களுக்கான தேசிய முழக்கம் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் வாழும் 6 கோடித் தமிழர்களுக்கான முழக்கம் மட்டுமல்ல. அது உலகெங்கிலும் வாழும் 15 கோடித் தமிழர்களுக்கான, இனி வரும்காலத்தில் வரும் தலைமுறைகளுக்கான...