HomeTamil Naduதம்பி மாரிதாஸ் மீதான...

தம்பி மாரிதாஸ் மீதான தவெக அரசின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்! அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்தும் பாசிசப்போக்கு! – சீமான் கடும் கண்டனம்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான தம்பி மாரிதாஸ் அவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைதுசெய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சமாகும்.

தம்பி மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்; மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது சனநாயக விரோதமாகும். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம் பாயாத அதிரடி கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது? இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா? ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினரையும், அரசை விமர்சிப்போரையும் தனிநபர் தாக்குதல் தொடுத்து, இணையவெளியில் அவதூறுகளையும், ஆபாசத்தையும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம் தம்பி மாரிதாஸ் மீது பாய்கிறதென்றால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் போக்காகும். தவெகவை மற்றவர்கள் விமர்சிப்பதை கவனிக்கும் காவல்துறை, தவெகவினர் மற்றவர்களை விமர்சிப்பதை கண்டுகொள்ளாதது ஏன்?

திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், ‘என்னை விமர்சிப்பவர்கள் நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து விமர்சியுங்கள்’ என்று மேடையில் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது அற்ப விமர்சனத்திற்கு அதிரடி கைது நடவடிக்கை எடுப்பதற்கு பெயரென்ன? முந்தைய திமுக அரசு செய்த கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் அதே கொடுஞ்செயலை தவெக அரசும் தொடர்வதற்கு பெயர்தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! ஆளும் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்த முனையும் இத்தகைய மிரட்டல்கள் அப்பட்டமான பாசிசப்போக்காகும். பந்து எப்போதுமே ஒருவரிடம் மட்டுமே இருந்து விடுவதில்லை. இன்று உங்கள் கைகளில் இருக்கும் பந்து நாளை மற்றவர்கள் கைகளுக்கும் இடம்மாறும்; பார்த்து விளையாடுங்கள்.

ஆகவே, தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் சனநாயகத் தன்மையோடு இயங்க வேண்டுமெனவும், தம்பி மாரிதாசை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு சீமான் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

spot_img

Continue reading

அறநிலையத்துறையில் சேகர் பாபு ஆடிய ஆடக் கூடாத ஆட்டம் ! 3,000 கிலோ தங்கம்; 4,000 கோயில் குடமுழுக்கு; குவிந்த தங்கக் கட்டிகள் !!

"தமிழ் ஊடகம் குழுமம்" சொன்னதை திமுக ஆய்வுக்குழு உறுதி செய்தது ! அறநிலையத்துறையில் சேகர் பாபு ஆடிய ஆடக் கூடாத ஆட்டம் ! 3,000 கிலோ தங்கம் ; 4,000 கோயில் குடமுழுக்கு ; குவிந்த தங்கக் கட்டிகள் நேர்மையான அதிகாரிகளைப் பந்தாடிய முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ! மீட்கப்பட்ட தமிழர் கோயில் இடங்களைத் தெலுங்கர்களுக்கு குத்தகை விட்ட...

தமிழ்த் தேசியத்திற்கு முதல் மரியாதை செலுத்திய பாரதிராஜாவுக்கு நாம் தமிழர் கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்திய சீமான் !

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிப்பயணத்தின்போது தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் கொடி போர்த்தி புகழ் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்த்திரையுலகின் தன்னிகரில்லாத கலைஞன் பாரதிராஜா. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ்த் தேசியத்தின்மீதும் அளவில்லாப் பற்றுக் கொண்டிருந்தவர். தமிழ்த்தேசிய விடுதலை பெறுவதற்கான 30 ஆண்டுகாலப் போராட்டம் நடத்திய மேதகு...

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் பிணையில் வெளிவரலாம் : இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகே

இது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்…! சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது. குறித்த...