HomeSri Lankaசொல்லிசைப் பாடகர் சங்கீத்சன்...

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் பிணையில் வெளிவரலாம் : இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகே

இது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்…!

சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.

குறித்த உரையாடலுக்கு அமைவாக, சங்கீத்சனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாமையின் காரணமாக சாதாரண நீதிமன்ற முறைமையின் கீழ் அவருக்கான பிணைக்கோரிக்கையை சட்டத்தரணிகள் ஊடாக விடுக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிறிதரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, அமைச்சர் சந்திரசேகரருக்கும், சிறீதரன் எம்.பிக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் உரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

​அந்த உரையாடலின்போதும், ஜனாதிபதி அநுரவின் அறிவிப்பு தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் வெளிப்படுத்தியதோடு சங்கீத்சனின் தாயாருடனும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Shritharan MP Holds Discussion with President Anura Regarding the Release of Sangeethsan….!

A telephone conversation has taken place between President Anura Kumara Dissanayake and Sivagnanam Shritharan, Member of Parliament for the Jaffna District representing the Ilankai Tamil Arasu Kachchi (ITAK), regarding the release of lyricist and folk artist Sangeethsan.

During the discussion, President Anura Kumara Dissanayake informed MP Shritharan that, since a detention order had not been issued against Sangeethsan under the Prevention of Terrorism Act (PTA), his lawyers could seek bail for him through the normal judicial process.

Subsequently, in accordance with the President’s instructions, a discussion was held within the Parliamentary complex between Minister Chandrasekar and MP Shritharan.

During that discussion, Minister Chandrasekar reiterated the President’s position regarding Sangeethsan’s case. It is also noteworthy that he contacted and spoke with Sangeethsan’s mother over the telephone.”

இவ்வாறு சிறிதரன் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

spot_img

Continue reading

அறநிலையத்துறையில் சேகர் பாபு ஆடிய ஆடக் கூடாத ஆட்டம் ! 3,000 கிலோ தங்கம்; 4,000 கோயில் குடமுழுக்கு; குவிந்த தங்கக் கட்டிகள் !!

"தமிழ் ஊடகம் குழுமம்" சொன்னதை திமுக ஆய்வுக்குழு உறுதி செய்தது ! அறநிலையத்துறையில் சேகர் பாபு ஆடிய ஆடக் கூடாத ஆட்டம் ! 3,000 கிலோ தங்கம் ; 4,000 கோயில் குடமுழுக்கு ; குவிந்த தங்கக் கட்டிகள் நேர்மையான அதிகாரிகளைப் பந்தாடிய முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ! மீட்கப்பட்ட தமிழர் கோயில் இடங்களைத் தெலுங்கர்களுக்கு குத்தகை விட்ட...

தமிழ்த் தேசியத்திற்கு முதல் மரியாதை செலுத்திய பாரதிராஜாவுக்கு நாம் தமிழர் கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்திய சீமான் !

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிப்பயணத்தின்போது தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் கொடி போர்த்தி புகழ் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்த்திரையுலகின் தன்னிகரில்லாத கலைஞன் பாரதிராஜா. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ்த் தேசியத்தின்மீதும் அளவில்லாப் பற்றுக் கொண்டிருந்தவர். தமிழ்த்தேசிய விடுதலை பெறுவதற்கான 30 ஆண்டுகாலப் போராட்டம் நடத்திய மேதகு...

திரைத்துறை தவிர எமது அரசியல் பயணத்திலும் துணை நின்ற மகாக் கலைஞன் அப்பா பாரதிராஜா மறைவு பேரிழப்பு – சீமான்

"ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட...