HomeSri Lankaதமிழ்த் தேசியத்திற்கு முதல்...

தமிழ்த் தேசியத்திற்கு முதல் மரியாதை செலுத்திய பாரதிராஜாவுக்கு நாம் தமிழர் கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்திய சீமான் !

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிப்பயணத்தின்போது தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் கொடி போர்த்தி புகழ் மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்த்திரையுலகின் தன்னிகரில்லாத கலைஞன் பாரதிராஜா. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ்த் தேசியத்தின்மீதும் அளவில்லாப் பற்றுக் கொண்டிருந்தவர்.

தமிழ்த்தேசிய விடுதலை பெறுவதற்கான 30 ஆண்டுகாலப் போராட்டம் நடத்திய மேதகு தலைவருக்கு பாரதிராஜா மீது அளவுகடந்த பாசம் உண்டு.

பாரதிராஜாவை நேரில் இலங்கைக்கு வரவழைத்து சுமார் 10 நாட்கள் தமிழ்த் தேசிய நாட்டில் விருந்தினராக அமர்த்தி மகிழ்ந்தார் தமிழ்த் தேசியத் தலைவர். தமிழர் விடுதலைப் போராட்டம் குறித்த ஒரு திரைப்படத்தை இயக்கித்தருமாறும் பாரதிராஜாவிடம் மேதகு கேட்டுக்கொண்டதாக பாரதிராஜவே தமது ஊடக நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த அரசியல் கட்சி மேடைகளிலும் ஏறிடாத பாரதிராஜா நாம் தமிழர் கட்சி மேடையில் ஏறி சிறப்புரை ஆற்றினார். நாம் தமிழரின் ஒழுக்கம், வீரம் ஆகியவற்றைப் பாராட்டிப் பேசினார்.

இலங்கையில் நடைபெற்ற இனவழிப்புத் தாக்குதல், மனித உரிமை மீறல்கள் குறித்துத் தொடர்ந்து கடும் அதிருப்தி தெரிவித்து வந்த பாரதிராஜா தமக்கு அளிக்கப்பட பத்மஸ்ரீ பட்டத்தை நிராகரித்தார்.

இலங்கையில் தமிழர் இனவழிப்பைக் கண்டித்து நடைபெற்ற பெரும்போராட்டங்களில் பங்கேற்றார் பாரதிராஜா.

கடந்த 2009 ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற இனவழிப்புக்கு எதிரான திரையுலகினர் பங்கேற்ற மாபெரும் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் பாரதிராஜா முதன்மையானவர்.

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது தமிழ்த் தேசிய உலகிலும் பாரதிராஜாவின் பங்கு மகத்தானது.

அன்னாரைப் போற்றும் வகையில் நாம் தமிழர் சார்பில் பாரதிராஜாவுக்குச் செலுத்திய கொடி மரியாதை மிகவும் பொருத்தமானது மட்டுமல்ல தமிழ்த் தேசியர்களின் பெருங்கடமையும்கூட. அதனை நிறைவேற்றிய சீமான் அவர்களுக்குத் தமிழ்த் தேசிய உலகம் நன்றி வணக்கம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள்.

spot_img

Continue reading

அறநிலையத்துறையில் சேகர் பாபு ஆடிய ஆடக் கூடாத ஆட்டம் ! 3,000 கிலோ தங்கம்; 4,000 கோயில் குடமுழுக்கு; குவிந்த தங்கக் கட்டிகள் !!

"தமிழ் ஊடகம் குழுமம்" சொன்னதை திமுக ஆய்வுக்குழு உறுதி செய்தது ! அறநிலையத்துறையில் சேகர் பாபு ஆடிய ஆடக் கூடாத ஆட்டம் ! 3,000 கிலோ தங்கம் ; 4,000 கோயில் குடமுழுக்கு ; குவிந்த தங்கக் கட்டிகள் நேர்மையான அதிகாரிகளைப் பந்தாடிய முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ! மீட்கப்பட்ட தமிழர் கோயில் இடங்களைத் தெலுங்கர்களுக்கு குத்தகை விட்ட...

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் பிணையில் வெளிவரலாம் : இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகே

இது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்…! சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது. குறித்த...

திரைத்துறை தவிர எமது அரசியல் பயணத்திலும் துணை நின்ற மகாக் கலைஞன் அப்பா பாரதிராஜா மறைவு பேரிழப்பு – சீமான்

"ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட...