தமிழ்நாடு அரசியலில் சேகர் பாபு எனும் ஒரு “கேரக்டர்” மணிவண்ணனின் அமைதிப்படை அம்மாவாசை கேரக்டருக்கு அப்படியே பொருந்திப் போகும் ஒரு கேரக்டர். என்ன, அதில் அம்மாவாசை பட்டப்படிப்பு படித்திருப்பார், நிஜத்தில் சேகர்பாபு பட்டப்படிப்பு படித்தவர் அல்ல பத்தாம் வகுப்பு படித்ததாக அவரது தேர்தல் ஆவணங்கள் சொல்கின்றன.
வடசென்னையில் ஒரு காலத்தில் வலுவான ஆளாக ஆள் பலம், அரசியல் பலம் என்று வலம் வந்தவர் மதுசூதனன். அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் எனும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 1991-ஆம் ஆண்டு போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரான மதுசூதனன் பிறகு அமைச்சராகவும், அதிமுகவின் அவைத் தலைவராகவும் செல்வி ஜெயலலிதாவால் ஆக்கப்பட்டார்.
தமது சகோதரி மூலம் மதுசூதனனுக்கு அறிமுகம் ஆகிய சேகர்பாபு படிப்படியாக வளர்ந்து பிறகு அதிமுகவின் மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
1991 – 96 க்குப் பிறகு தேர்தலில் தோல்வி அடைந்திருந்த செல்வி ஜெயலலிதா மீது 26 க்கும் மேற்பட்ட வழக்குகளைப் போட்டது திமுக.
செல்வி ஜெயலலிதாவுக்கு அத்தகைய இக்கட்டான 1996 – 2001 காலகட்டத்தில் சேகர்பாபு தமது ஆதரவாளர்களைக் கொண்டு ஜெயலலிதாவுக்குத் தனிப் பாதுகாவலர் படை அமைத்தல், போயஸ் தோட்ட வீட்டுக்கு காய்கறி முதல் பல்வேறு பொருட்களை வாங்கித்தருதல் என சின்னம்மா மற்றும் பெரியம்மா ஆகியோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.
சேகர் பாபு தாய்க்குலங்களின் நம்பிக்கைக்கு உரிய சேவகராகத் தம்மை ஆக்கிக் கொள்வதில் வல்லவர்.
கராத்தே தியாகராஜன், வெற்றிவேல், சேகர் பாபு ஆகியோரின் தேர்தல் ஆட்டங்கள் அப்போது பிரபலம்.
திடீரென சேகர் பாபுவின் “ஜீப்” தலைகீழாகக் கிடைக்கும். உடனே ஜெயா டிவி குழுவை அழைப்பார். பாருங்கள் திமுகவினர் எப்படித் தாக்குதல் நடத்திவிட்டார்கள் என்று ஒரு பேட்டி கொடுப்பார்.
பத்திரிகை ஊடகக்காரர்களைத் தாஜா செய்வதில் சேகர்பாபு ஸ்பெஷலிஸ்ட்.
இப்படி ஒருபுறம் வீட்டுக்கு சேவை செய்யும் ஒரு தொண்டராகவும், மறுபுறம் ஊடகத்தை வைத்து தமக்கு திமுகவினர் படு தொல்லைகள் தருவதாகவும் செய்திகள் ஊடகங்கள் மூலம் குறிப்பாக அம்மாவின் கவனத்துக்குச் செல்லுமாறு மிக நுட்பமாக அரசியல் செய்வதில் கை தேர்ந்தவர் சேகர் பாபு.
இப்படிச் செய்து செய்து சின்னம்மாவின், பெரியம்மாவின் நம்பிக்கையைப் பெறுவது மட்டுமல்லாது அவர்களின் பாதுகாவலன் என்றும், அவர்களின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவன் பாருங்கள் என்றும் கட்சிக்காரர்கள் மத்தியிலும் தம்மை முன்னிறுத்திக் கொள்வதில் சேகர் பாபுவுக்கு ஈடு இணை இல்லை.
அதாவது Power Centre க்கு சேவகம் செய்தே, அவர்களின் நம்பிக்கைக்கு ஆளாகும் அதே வேளை அந்த பவர் சென்டருக்கு எல்லாமே நான்தான் என்பது போல பில்ட் அப் செய்வதில் சேகர் பாபு Phd அனுபவ ஆய்வுப் படிப்பு படித்தவர்.
ஆனால் “அம்மா” செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இந்த முகத்துதி, சீன் போடுதல் அறவே ஆகாது. அவரது பார்வைக்கு அந்த நடிப்பும், நாடகமும் பட்டுவிட்டால் அத்தோடு அந்த நடிகரின் சோலி சுத்தம்.
இதற்கு எடுத்துக்காட்டு பாண்டுரங்கன் எனும் ஒரு சட்டமன்ற உறுப்பினர். அவர், போயஸ் தோட்டத்தில் உள்ள செல்வி ஜெயலலிதாவின் வீட்டுக்கு வரும்போதெல்லாம், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு அருகில் செருப்புகளை கழட்டி விட்டுவிட்டு அங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள செல்வி ஜெயலலிதாவின் வீடான வேதா இல்லத்துக்கு இரண்டு கைகளையும் கும்பிட்டவாறு குனிந்தே நடந்து வருவார்.
ஒருநாள் இது செல்வி.ஜெயலலிதா கவனத்துக்குப் போக ஒரு கூட்டத்தில் “பாண்டுரங்கன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும் உங்க நடிப்பைப் பார்த்தா அவர் சினிமாவை விட்டே போயிடுவார்” என்று சொல்ல குளுகுளு அறையிலும் வியர்த்து விட்டது பாண்டுரங்கனுக்கு.
அதுபோல செல்வி ஜெயலலிதாவின் கார் கதவைத் திறந்து விடுவது போன்ற தமக்கே உரித்தான நடிப்பைத் தொடர்ந்து வந்த சேகர்பாபு குறித்து முழுத் தகவலும் ஜெ காதுக்குச் செல்ல, தலைமைச் செயலகத்திலேயே பத்திரிகையாளர்கள் அனைவரின் முன்னிலையில், “சேகர் பாபு…Be Careful” என கண்கள் சிவக்க ஜெயலலிதா கர்ச்சிக்க அத்தோடு அங்கிருந்து மூட்டையைக் கட்டியவர்தான் சேகர் பாபு.
அதன்பிறகு திமுகவுக்கு வந்து சேர்ந்து அதைவிடப் பல மடங்கு நடித்து மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோருக்கு தான்தான் பாதுகாவலன், சேவகன், சென்னை என்றாலே திமுகவுக்குத் தான் மட்டும்தான் என்று ஏகத்துக்கும் பில்ட் அப் செய்ததை அப்படியே அப்பிராணிகளாக நம்பிவிட்டார்கள் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர்.
நன்றாகக் கவனித்துப் பார்த்தால் நிழற்படம், ஒளிப்பதிவு என்று யாரவது செல்போனில் படம் பிடித்தால்கூட சேகர் பாபுவைத் தவிர்த்துவிட்டு மு.க.ஸ்டாலினை எவரும் படம் எடுக்கவே முடியாத வண்ணம் சேகர்பாபு சரியாக படத்துக்குள் “பிட்டிங்” ஆகியிருப்பார்.
ஆக வெளியிலிருந்து பார்க்கும் எவருக்கும் குறிப்பாக கட்சிக்காரர்கள், அதிகாரிகளுக்கு அடேங்கப்பா சேகர் பாபுதான் மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் ஒரே பவர் பாய்ன்ட் போல என்று எண்ணுமளவுக்கு அம்மாவாசையின் பெர்பார்மன்ஸ் அப்படி இருக்கும்.
இது தவிர துர்கா ஸ்டாலினுக்கும் கோயில், பத்தி அதிகமாக இருக்க மிக வசதியாகப் போய்விட்டது சேகர் பாபுவுக்கு. அதற்கு ஏற்ப துர்கா அம்மாவின் ஆசியோடு அறநிலையத்துறையும் கிடைக்க ஏகத்துக்கும் தலைகால் புரியாமல் ஓ(ஆ)டத் தொடங்கினார் சேகர் பாபு.
துர்கா ஸ்டாலினின் கால் செருப்பைக் கூட எடுத்துக் கொடுத்துக் கார் கதவை மூடிவிட்டு அம்மாவாசை நடித்த நடிப்பு துர்கா ஸ்டாலினுக்கு அப்போது புரிந்திருக்க வில்லை. ஆனால் செல்வி. ஜெயலலிதா இதனைக் கண்டிபிடித்து அப்போதே Be careful என்று அதிரடி எச்சரிக்கை விடுத்துத் துரத்தி விட்டுவிட்டார்.
மு.க.ஸ்டாலினை “வாழும் வள்ளலார்” என்றெல்லாம் புகழ்ந்து தள்ளி, துணை நடன நடிகைகளை வைத்து மு.க.ஸ்டாலினை வரவேற்க ஆட்டம் பாட்டமெல்லாம் ஏற்பாடு செய்து அப்படியே பெரிய அளவில் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் குடும்பத்தினரையே சுற்றி சுற்றி வந்த செவ்வாழை சேகர்பாபு 2026 சட்டமன்றத் தேர்தலில் கொண்டையை மறைக்க மறந்துவிட்டார்.
எந்த ஆறு தொகுதிகளைத் தன்னிடம் தந்தாலும் அனாயாசமாகப் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து அந்த வெற்றியை மு.க.ஸ்டாலின் காலடியில் வைக்கும் அளவுக்குத் தான் ஒரு “சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், தன்னை எவனாலும் அடிச்சுக்க முடியாது” என்றெல்லாம் பில்ட் அப் செய்துவிட்டிருந்ததை மு.க.ஸ்டாலின் குடும்பம் முழுசாக நம்பி விட்டிருந்த நிலையில் மு.க.ஸ்டாலினே அவரது கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். சென்னையில் உதயநிதி, சேகர் பாபு தொகுதிகளைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் திமுக வாஷ் அவுட்.
தான் வெற்றிபெறுவதற்கான “டெக்னிக்” தெரிந்த சேகர்பாபுவுக்கு முதலைச்சர் மு.க.ஸ்டாலினை வெற்றி பெற வைக்கும் டெக்னிக் ஏன் தெரியாமல் போய்விட்டது எனும் கேள்வி ஒவ்வொரு உடன்பிறப்பு மத்தியிலும் எழுந்தது.
இப்போது அமைதிப்படை படத்தை நினைவு படுத்திப் பாருங்கள். அம்மாவாசை வெற்றிபெற, அவரை நிற்கவைத்த (மணிவண்ணன்) மு.க.ஸ்டாலின் தோற்று விட்டார்.
அத்தோடு நிற்காமல் தோல்வி பெற்ற நிலையில் கொளத்தூர் தொகுதிக்கு நன்றி சொல்ல மு.க.ஸ்டாலின் போக, எல்லா ஊடகங்களும் அதனை கவர் செய்து கொண்டிருந்த போது சிவாஜி கணேசன், கமல்ஹாசன் என இருவரையும் மிஞ்சும் வண்ணம் ஒரு அழுகாச்சி அழுது சேகர் பாபு போட்ட “சீன்” திமுகவினரை மேலும் கொதிப்படைய வைத்துவிட்டது.
இந்தக் கோபங்கள் எல்லாம் ஒன்று சேர சேகர்பாபுவை நோக்கி ஒரு சொம்பு வேகமாகப் பறந்து வந்து விழுந்து அவரைப் பதம் பார்த்து இருக்கிறது. அந்த வேகத்தில் அவர் ஒரு அதிகாரியை ஓங்கி அறைந்ததாகவும் தகவல்.
இந்த சொம்பு அடிக்குப்பிறகு சேகர்பாபு தட்டுப்படவில்லை, மு.க.ஸ்டாலின் பக்கத்தில் காணவில்லை.
எப்படியோ, பெரியவர் குடும்பம் உண்மை என்னவென்று உணர்ந்து கொண்டிதிருந்தால் சரி.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கடந்த ஐந்தாண்டுகளில் அம்மாவாசை அறநிலையத்துறையில் மட்டுமே ஆடக் கூடாத ஆட்டமெல்லாம் ஆடியிருக்கிறாராம். நான்காயிரம் கோயில் குடமுழுக்கு, ஒவ்வொரு கோயிலில் இருந்தும் பணமாக அல்ல தங்கக் கட்டியாகி வாங்கிய “அன்பளிப்பு”, உருக்கப்பட்ட 3 ஆயிரம் கிலோ தங்கம், விலை மதிக்க முடியாத நவ இரத்தினக் கற்கள் என்று அம்மாவாசையின் க்ரைம் ரேட் ஏகத்துக்கும் எகிறி நிற்கிறதாம்.
எப்படியிருந்தாலும் ஒருநாள் இவை அனைத்தும் வெடித்து வெளிவரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
— தமிழ் ஊடகம் புலனாய்வுச் செய்தியாளர் குழுவினர்.

