வதந்திகளைப் பரப்ப மெனக்கெட்டு வெளிநாட்டில் படிக்கும் கிருஷ்ணா முத்துக்குமரப்பன் !!
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
கடந்த சில நாட்களாக சுபா. முத்துக்குமார் குறித்த உண்மை நிலவரம் என்னவென்று அறியாத, தமிழ்நாட்டில் கால் வைத்திராத, தமிழ்நாடு அரசியல் குறித்து எந்த அடிப்படை அறிவுமற்ற லண்டனின் ஏதோ ஒரு கல்வி நிறுவனத்தில் படித்ததாக ஒரு முகநூல் ID யில் இயங்கும்…வாட்சாப் வதந்திகளைக் கட்டுரைகள் எனும் பெயரில் கக்கிக் கொண்டும், தமது பதிவுகளை அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்கிற வெட்டி விளம்பர, புகழ் விரும்பித்தனத்தில் திகில் கதைகள் போல பொய், புரட்டுகளைக் கிறுக்கிக்கொண்டிருக்கும் யாரோ சிலரின் எச்சில் கைகளை நக்கிப் பிழைத்துக் கொண்டிருக்கும் முகிந்தன் துரைராஜசிங்கம் எனும் ஒரு இழிபிறவி தவறான தகவல்களை பார்ப்பிக் கொண்டிருக்கிறார். அவரது நோக்கம் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்பித் தனது விளம்பர அரிப்பைத் தீர்த்துக்கொள்வது, அல்லது அவர் நக்கிப்பிழைக்கும் கைகளுக்கு அடியாள் வேலை செய்வது என்பது மட்டுமே.
இந்தச் செயல் சிங்கள பவுத்த பேரினவாத அரசியல்வாதிகளுக்கும், தமிழ்த் தேசிய வெறுப்பாளர்களுக்கும் மிகவும் பிடிக்கும், அவர்கள் இரசிப்பார்கள். ஒருவேளை இந்த முகிந்தன் துரைராஜசிங்கம் நக்கிப் பிழைக்கும் அந்த எச்சில் கைகள் அவர்களுடையதாகவும் இருக்கலாம்.
ஈ*ழத்தமிழர்களின் நற்பெயரைக் கெடுப்பதே இந்த முகிந்தன் துரைராஜ சிங்கம் போன்ற ஆட்கள்தான்.
இவர் ஒரு அறிவாளி எழுத்தாளர் என்று எண்ணி இவரது சில “ஈரான் – அமெரிக்க போர் குறித்த கட்டுரைகளை” நானே தமிழ் ஊடகத்தில் பகிர்ந்துள்ளேன். பிறகு இந்த நபரின் மட்டரகமான சிந்தனையை அறிந்தபின் இவரது எழுத்துக்களைப் பகிர்வதை நிறுத்திவிட்டேன்.
அந்த இழி பிறவியின் வதந்தியை, அவதூறுப் பதிவை “நாம் தமிழருக்கு எதிரான விமர்சனம்” என்ற பெயரில் சுவிட்சர்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா என்று சுற்றிக்கொண்டு தமிழ்நாடு அரசியல் குறித்த எந்தக் கள நிலவர நேரடி அனுபவமுமற்ற, மனதுக்குத் தோன்றியதையெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கும், தமிழ்த் தேசியம் குறித்துத் தொடர்ந்து குழப்பமான பதிவுகளை வெளியிட்டு மக்களிடம் ஒரு தொடர் மனக் குழப்பத்தை விதைத்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணா முத்துகுமரப்பன் போன்ற மெத்தப் படித்ததாகக் கூறிக்கொள்ளும் பரிதாபத்திற்குரிய சில அறிவு முடம் கொண்டவர்களும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த அவதூறு பரப்பும் “தொழிலுக்கு” இவர்கள் அடையாளமாக வைத்துக்கொள்வது வெளிநாட்டின் சில பல்கலைக்கழகங்களின் பெயர்களை.
உண்மையில் இவர்களின் எழுத்துக்களை வாசிக்கும்போது இவர்கள் தாங்கள் பயின்றதாக அல்லது பணிசெய்வதாகக் கூறிக்கொள்ளும் அந்த பல்கலைக் கழகங்களின் “தரம்” குறித்தே நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.
உண்மையில் இவர்கள் பயின்றதாக, ஆய்வு செய்ததாகக் கூறும் அந்த வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இவ்வளவு மட்டக்கரமான அறிவைத்தான் கற்றுக்கொடுக்கின்றனவா…அல்லது எங்கு படித்தாலும் எந்த அறிவும் வளரவே வளராத இவர்கள்தான் அந்த அளவு மட்டரகமானவர்களா என்றும் எண்ணத் தோன்றுகிறது.
உண்மையில் இந்த இருவரும் அந்த வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களோடு தொடர்புடைய அறிவுக்குச் சொந்தக்காரர்கள் என்றால் பல்வேறு தரப்புகளில் விசாரிக்காமல், ஆராயாமல் இப்படிப் படு சில்லறைத் தனமாக சீமான் குறித்தும், சுபா.முத்துக்குமார் மனைவி குறித்தும் அவதூறுகளை, மனிதக் கழிவுகளை வாய்வழியாகக் கக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
எனவே இவர்கள் இனியாவது அந்தக் கல்வி நிறுவனங்களின் பெயர்களை தங்கள் சுயவிவரத்தில் இருந்து அகற்றி விடட்டும்.
சரி…தலைப்புக்கு வருவோம்.
- அவரது பெயர் சுப. முத்துக்குமார் அல்ல. சுபா. முத்துக்குமார். அவரது தந்தை பெயர் சுந்தரம், தாயார் பெயர் பார்வதி. சுபா என்பது தந்தை – தாய் பெயர்களின் முதலெழுத்துகள். அவர் பிறந்தது மதுரையில்தான். பழனி – திண்டுக்கல் மாவட்டத்தில் அல்ல. கடைசிக்காலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்கா வடகாட்டிற்குக் குடியேறிவிட்டார்.
இந்த முகிந்தன் துரைராஜசிங்கத்திற்கு இந்தத் தகவல் கூடத் தெரிந்திருக்கவில்லை.
- இலங்கை எனும் தீவு நாட்டின் மொத்த மக்கள்தொகையான 2 கோடியே 20 லட்சம் பேருக்குத் தலை முதல் கால் வரை தேவைப்படும் 100 க்கு 90 விழுக்காடு பொருட்கள் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் பெட்ரோல், டீசல் எரிபொருள் என்பது மிகவும் முக்கியம். இலங்கை அரசே இந்தியாவிலிருந்துதான் இதனை இறக்குமதி செய்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் இலங்கை அரசை எதிர்த்துப் போரிட்ட போராளி இயக்கம் இந்தப் பொருட்களை இலங்கை நாட்டிலிருந்து வாங்க முடியாது என்கிறபோது தமிழ்நாட்டிலிருந்து நேரடியாகப் பணம் கொடுத்து “வாங்கிக் கொண்டனர்”.
இவ்வாறு வாங்கி அனுப்பும் பணியில் ஓசூர் முதல் நாகப்பட்டினம் வரை நூற்றுக்கணக்கானவர் ஈடுபட்டனர்.
ஈரோடு, சென்னிமலை பகுதியில் இருந்து கைலி (லுங்கி), ஆடைகள், துணிகள், போர்வைகள் என இலங்கை வடக்கிற்கு விற்றுக் கோடீஸ்வரர்கள் ஆன எண்ணற்றவர்கள் தமிழ்நாட்டில் உள்ளார்கள்.
மிதிவண்டியில் உள்ள பால்ரஸ் குண்டுமணிகள், பஞ்சு, மருந்து ஊசி என்று நூற்றுக்கணக்கான பொருட்கள் தமிழ்நாட்டிலிருந்துதான் செல்ல முடியும்.
அப்போது மிகவும் பிரபலமாக இருந்த யமஹா ஆர் எக்ஸ் இருசக்கர வாகனத்தின் எந்திரம் – எஞ்சின் ஜப்பான் நாட்டின் உருவாக்கம். அந்த ஒரு எஞ்சினுக்கு ஒரு லட்சம் ரூபாய் அப்போதே கொடுத்து மேதகுவின் போராளி இயக்கம் வாங்கியது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் யமஹா பைக்கிற்குத் தடை விதிக்கப்பட்டது.
இதெல்லாம் முகிந்தன் துரைராஜா சிங்கத்திற்குத் தெரிந்திருக்குமா என்றே தெரியவில்லை. அப்போது அவர் பிறந்திருந்தாரா என்றே தெரியவில்லை.
ஆக, 1991 ராஜிவ் காந்தி படுகொ*லைக்கு முன்புவரை பொருட்களின் இந்த விற்பனை தமிழ்நாட்டிலிருந்து இயல்பாக நடைபெற்றது.
போராளிகளுக்கு இந்தப் பொருட்கள் செல்வது தமிழ்நாடு அரசுக்கும் தெரியும், இலங்கை அரசுக்கும் தெரியும். இறுதி நாட்களில் கருணாநிதி ஆட்சியில் “கடற்கரையை” கொஞ்சம் திறந்து விட மேதகு தலைவர் கோரியதும் இதனால்தான். அதிமுக ஆட்சியில் எந்தத் தடையும் இல்லாதிருந்த இந்தப் பொருள் போக்குகள் கருணாநிதி ஆட்சியில் அதிலும் இறுதிக் காலகட்டத்தில் கடுமையாக தடை செய்யப்பட்டது. அவ்வாறு சென்ற இரத்தப் பொட்டலங்களை கருணாநிதி ஆட்சியில் போலீஸ்காரர்கள் பூட்ஸ் கால்களில் போட்டு நசுக்கினார்கள்.
ஆக….டீசல், பெட்ரோல் வாங்கி வடக்கில் போராளி இயக்கத்துக்கு அனுப்ப சுபா. முத்துக்குமார் மட்டுமல்ல குறைந்தது ஆயிரம் பேராவது அந்தப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள்.
தமிழ்நாட்டில் பொருட்களை வாங்கி இலங்கை வடக்கிற்கு அனுப்ப சுபா. முத்துக்குமார் என்ற ஒரு நபரை மட்டுமே மேதகுவின் போராளி இயக்கம் நம்பியிருக்கவில்லை.
தமிழ்நாடு மட்டுமல்ல உலகெங்கிலும் இருந்து பொருட்களை வாங்க போராளி இயக்கம் “சோழா” தொடங்கி மொத்தம் 12 கப்பல்களை வைத்திருந்தது.
எனவே சுபா. முத்துக்குமார் போன்ற ஒற்றை நபர் மட்டுமே இயக்கத்திற்கு இங்கே இருந்து எரிபொருட்களை வாங்கி அனுப்பினார் என்று உருட்டிக்கொண்டிருப்பதை இந்த அறிவிலிகள் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளில் போரில் அடிபட்டு காயம்பட்டு வந்த தமிழர்களைக் கடற்கரையிலிருந்து மீட்டு மருத்துவ உதவி செய்து அவர்களைத் திரும்பி அனுப்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர். அவர்கள் எவரும் இப்படித் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை.
சீமான் மீது அவதூறு பரப்ப, வதந்தி பரப்ப வேண்டும் என்பதற்காக, சுபா. முத்துக்குமாரை அவரது தகுதிக்கும் மீறி “ஹீரோ” ஆக்க முனையும் இந்த அறிவிலிகள் உண்மையை எழுதவில்லை.
- போராளிகள் இயக்கத்தில் இணைந்தவர்கள் அனைவருமே இளம் வயதினரே. என்னவோ சுபா. முத்துக்குமார் மட்டுமே இளம் வயதில் இயக்கத்தில் சேர்ந்தது போலவும் மீதமுள்ளவர்கள் 70 வயதில் இயக்கத்தில் சேர்ந்து போலவும் வெட்டியாக மிகைப்படுத்துகிறார்கள் இந்த அறிவிலிகள்.
ராஜிவ்காந்தி படுகொ*லை குறித்த முன் தகவல்களோ, நேரடித் தொடர்போ இல்லாதிருந்தும் ஒற்றைக்கண் சிவராசனை “சந்தித்தார்” என்பதற்காகக் கைது செய்யப்பட்டு சுமார் 30 ஆண்டுகள் சிறையில் இருந்த இரா.பொ.இரவிச்சந்திரன் இளம் வயதில் இயக்கத்தில் இணைந்தவர்தான். தனது இளம் வயது முழுவதும் சிறையில் கழித்தவர்தான். அவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான், இயக்கத்திற்காகப் பணியாற்றியவர்தான்.
ஆனால் அவர் குறித்து சுபா. முத்துக்குமார் போல எவரும் எந்த பில்டப்பும் செய்யவில்லையே?!
நிறைகுடங்கள் தழும்பாது என்பது இதுதான்.
- “1994 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி வேலூர் கோட்டையிலிருந்து 80 போராளிகள் தப்பிச்செல்ல 90 அடி சுரங்கம் தோண்டியவர் சுபா. முத்துக்குமார்” எனும் உலகமகா புரட்டு !
தமிழ்நாட்டில் வேலூர் கோட்டையில் அதுவும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் 90 அடி சுரங்கம் ஒன்றை எப்படியடா முட்டாப்பயலுவளே சுபா. முத்துக்குமார் தோண்டியிருப்பார் என்று இந்த முகிந்தன் துரைராஜா சிங்கம் எனும் மறைகழண்ட ஆளிடம் அந்தக் கட்டுரையை வாசித்த ஒருவர்கூடவா கேட்கவில்லை ?!
அடேய்…முகிந்தன் துரைராஜா சிங்கம் என்னடா இது பேய்க்கதையாக இருக்கிறது ?!
அடுத்து…மிக முக்கியமான கேள்வியும், தகவல்களும் :
சுபா. முத்துக்குமார் குழம்புக் கரண்டி ஒன்றையும், சோற்றுத் தட்டு ஒன்றையும் வைத்தே வேலூர் கோட்டையில் இருந்தோ சென்னை மத்திய சிறையில் இருந்தோ, 90 அடி சுரங்கம் தோண்டி தப்பிக்க வைத்து ஈ*ழத்திற்கு அனுப்பி வைத்த எத்தனை பேரை மேதகு இயக்கம் உள்வாங்கியது…அதாவது உள்ளே சேர்த்துக்கொண்டது என்ற கணக்கைச் சொல்ல வேண்டுமா வேண்டாமா முட்டாப் பயலே முகிந்தன் துரைராஜசிங்கம் ?!
அவர்கள் எவரையும் போராளி இயக்கத்தினர் தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள்ளேயே அனுமதிக்கவில்லை என்று அன்றே தகவல்கள் வெளியாகின.
காரணம், இதுபோன்று இந்தியாவின் அதி உயர் பாதுகாப்பு சிறைக்குள் இருந்து “நம்பமுடியாத சினிமாக் கதைகளைக்” கூறி தப்பி வருபவர்களை மேதகு மற்றும் பொட்டம்மான் ஆகியோர் உடனே சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று அதி உயர் பொறுப்பு கொடுத்து விடுவார்களா என்ன ?
பத்திரிகை ஊடகவியலாளனாக விடுதலை இயக்கம் போன்ற உலகப் போராட்டகாரர்கள் குறித்து செய்திகள், கட்டுரைகள், நூல்கள் ஆகியவற்றை வாசிக்கிறவன் என்கிற வகையிலேகூட இந்த தப்பிய சாகசக் கதைகளை என்னாலேயே நம்ப முடியவில்லை… பிறகு உலக அளவில் புலனாய்வு மற்றும் நுண்ணறிவில் மிகச் சிறப்பாக செயலாற்றிய மேதகுவின் இயக்கம் எப்படி நம்பியிருக்க முடியும் ?!
எமது இந்தக் கணிப்புக்கு ஏற்ப சுபா. முத்துகுமாரால், தமிழ்நாட்டின் அதி உயர் சிறைகளில் குழம்புக் கரண்டி, பொறியல் கரண்டி, உப்பு எடுக்கும் ஸ்பூனை வைத்து 90 அடி சுரங்க ஓட்டை போட்டுத் (!) தப்பிக்க வைத்துப் பத்திரமாக இடுப்பில் தூக்கி அமரவைத்து ஈ*ழத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட எவரையும் இயக்கம் அங்கே உள் வாங்கவில்லை, சேர்த்துக் கொள்ளவில்லை என்பதுதான் விவரம் அறிந்த முன்னாள் போராளிகள் கூறும் தகவல்.
அவர்கள் எல்லோரையும் “சிவில்” மக்கள் வாழும் பகுதிகளில் பிற பொதுமக்கள் போலத்தான் நடமாட விட்டார்கள். அதுமட்டுமல்ல….அதன் பிறகு அவர்கள் இயக்கத்தின் நுண்ணறிவு மற்றும் புலனாய்வுக் குழுவினரால் மிக நுட்பமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தனர் என்கின்றனர் முன்னாள் போராளிகள்.
ஆக…இந்த முகிந்தன் துரைராஜ சிங்கம் போன்ற அரைவேக்காடுகளுக்கு ஒரு மிக நுண்ணறிவு கொண்ட விடுதலைப் போராளி இயக்கத்தினர், இந்தியாவின் அதி உயர் சிறையில் இருந்து தப்பி வருவதாகக் கூறக்கூடிய தனி ஒருவரைக்கூட எந்தவித சந்தேகமும் இல்லாமல் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்கிற அடிப்படை சிற்றறிவு கூட இல்லை என்பது நிரூபணமாகிறது.
- சுபா. முத்துக்குமார் நாம் தமிழரின் தலைமை ஒருங்கிணைப்பாளரா ?!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சுபா. முத்துக்குமார் இருந்ததாக இந்த முட்டாப்பயல் முகிந்தன் இராஜசிங்கம் உளறிக்கொட்டி தமது பொங்கி வழியும் அறிவை மூளைக்கு வெளியேயும் கொட்டியிருக்கிறார்.
திரை இயக்குநர் மறைந்த மணிவண்ணன், கொளத்தூர் மணி உள்ளிட்ட சிலர் மட்டுமே இருந்த அந்த அறையில் நாம் தமிழர் இயக்கத்துக்குத் தலைவர், பொதுச்செயலாளர் போன்ற பொறுப்புகள் கூடாது, ஒருங்கிணைப்பாளர் என்கிற பொறுப்புகள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டும் என்று மணிவண்ணன் முன்மொழிய கொளத்தூர் மணி வழிமொழிந்தார்.
நாம் தமிழர் அமைப்பே சீமானை மையமாக வைத்துதான், மணிவண்ணனால் பெருமுயற்சி எடுத்துத் தொடங்கப்பட்டது.
1950 களில் நாம் தமிழர் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் மீது அடுத்தடுத்து தேசியப் பாதுகாப்பு சட்டம் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது போல, சீமான் மீதும் அடுத்தடுத்த வழக்கு, சிறை என்று தொடர்ந்ததால், சீமானுக்கு ஒரு அமைப்பு வேண்டும் என்று முடிவெடுத்து சீமானை வற்புறுத்தி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது மணிவண்ணன்.
அன்றிலிருந்து இன்றுவரை சீமான் ஒருவர் மட்டுமே தலைமை ஒருங்கிணைப்பாளர்.
சில காலம் அமைப்பிலிருந்த சுபா. முத்துக்குமார் “ஒருங்கிணைப்பாளர்” மட்டுமே.
முத்துக்குமார், “தலைமை” ஒருங்கிணைப்பாளராக எப்போதும் இருந்ததில்லை.
- வீரப்பனைத் தெருவில் இழுத்துவிட்ட சுபா. முத்துகுமார் !
சுபா. முத்துக்குமார் மேதகுவின் இயக்கத்தில் சில ஆண்டுகள் இருந்தாலும் அதன்பிறகு இந்தியாவுக்கு அவர் திரும்பிவிட்டார். இயக்கத்தில் இருந்தாகக் கூறப்படும் காலத்தில் எத்தனை களம் கண்டார், இயக்கத்தில் அவர் என்ன பணிகள் செய்தார் என்பதெல்லாம் அவருக்கும் இயக்கத்துக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.
ஆனால் அப்படி வெளியேறி இந்தியாவுக்குத் திரும்புபவருக்கு பொருட்களை வாங்கி அனுப்பும் வேலைதான் தரப்படும். அல்லது இங்கே ஒழுங்கு படுத்தவேண்டிய வேறு வேலைகள் ஏதும் தரப்படலாம். இயக்கத்தின் விதிமுறைகளுக்கு உட்படவே அவர்கள் செயல்படுவார்கள்.
ஆனால், மேதகு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத, ஒரு வேலையைச் செய்தார் சுபா. முத்துக்குமார்.
தேவையில்லாமல் வீரப்பனைக் கொண்ட ஆயுதம் தாங்கிய ஒரு குழுவைத் தொடங்கி வீரப்பனைத் தெருவில் இழுத்து விட்டதோடு அவருக்கு சமாதி கட்ட இந்தச் செயலே மூல காரணமாகிவிட்டது.
நாம் எந்த அடிப்படையில் “மேதகு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத” என்று கூறுகிறோமென்றால், இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதிய “சிவராசன் டாப் சீக்ரெட்” நூலில், “எங்களுக்கு பிடல் கேஸ்டரோக்கள்தான் வேண்டும், சேகுவேராக்கள் அல்ல” என்ற தமிழ்த் தேசியத் தலைவரின் கொள்கை குறித்துக் குறிப்பிட்டிருப்பர்.
மேலும், இந்தியாவில், இந்திய அரசுக்கு, மக்களுக்கு, இறையாண்மைக்கு எதிரான எந்தவிதமான செயல்களையும் செய்யக்கூடாது என்பதில் மேதகு மிகக் கவனமாக இருந்து வந்தது அவரது மாவீரர் நாள் உரை மட்டுமல்ல முன்னாள் போராளிகளின் கூற்றாகவும் இருக்கிறது.
ஆக…இயக்கத்தில் இருந்த காலகட்டத்தில் சுபா. முத்துக்குமார் என்ன செய்தாரோ தெரியாது. ஆனால் அதிலிருந்து வெளியே வந்து அவர் இங்கே செய்த இதுபோன்ற செயல்கள் மேதகுவின் விடுதலை போராட்ட இயக்கத்துக்கே அவப்பெயர் ஏற்படுத்திய செயல்கள்.
மேலும், சுபா. முத்துக்குமார் தப்பிக்க வைத்ததாகக் கூறப்படும் நபர்களையும், மேதகுவின் இயக்கம் இறுதிவரை அங்கீகரிக்கவில்லை.
சுபா. முத்துக்குமார் தொடங்கிய தமிழ்நாட்டு இயக்கங்கள், ஆயுதப் போராட்ட வடிவங்கள், வீரப்பனைத் தெருவில் இழுத்துவிட்ட செயல்கள் எதையும் மேதகுவோ, இயக்கமோ அவ்வளவு ஏன் தமிழ்நாட்டு மக்கள்கூட அங்கீகரிக்கவில்லை என்பதே பல பொறுப்புள்ள ஈ*ழத் தமிழ்ப் பெரியவர்கள் கூற்றிலிருந்தும், நூல்களில் இருந்தும், முன்னாள் போராளிகளின் கூற்றுகளில் இருந்தும் நாம் செய்த எமது ஆய்விலும் தெரிய வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இறுதியாக முத்துக்குமார் நாம் தமிழரில் இணைகிறார். அதன்பிறகு அவர் வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார்.
முத்துக்குமார் கொ*லை செய்யப்படுவதற்கு முன்னதாக நடந்த ஒரு நிகழ்வு இதோ, “சில மாதங்களுக்கு முன் இதே வடகாடு கிராமத்தில் முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் வெங்கடாசலம் என்பவர் அவரது சொந்த வீட்டிலேயே கொலை செய்யப்படுகிறார் . இவரின் நெருங்கிய உறவினர்தான் கரு.காளிமுத்து. கரு.காளிமுத்துவின் மகளைத்தான் முத்துக்குமார் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் முடித்தார். முத்துக்குமார் மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் ” இவரைப் பற்றி தெரியுமா ” என்று துண்டு பிரசுரங்களை இரவில் ஆங்காங்கே வீசி சென்றது ஒரு கும்பல் . அந்த பிரசுரத்தின் துண்டு நோட்டீசில் முத்துக்குமார் மீது உள்ள வழக்குகள், வீரப்பனுடன் உள்ள தொடர்புகள், தடை செய்யப்பட்ட புலிகளுக்கு மருந்துகள் வாங்கிய விபரங்களை எல்லாம் தெரிவித்து இறுதியில், கொலையுண்ட வெங்கடாசலத்தை ஏன் இவர் கொலை செய்திருக்கக் கூடாது என்று அரசியல் வகுப்பைப் போல எழுதி இருந்தார்கள். இந்த சிறு பிரசுரத்தை அறிந்த முத்துக்குமார் தனது நண்பர்களை மிகக் கவனமாக இருக்கச் சொல்லி இருக்கிறார்.” என்று தமிழ் முருகன் என்பவர் எழுதிய வலைப்பூ பதிவு ஒன்று கூறுகிறது.
முத்துக்குமாருக்கு எதிராக இப்படி ஒரு பரப்புரையை நாம் தமிழர் மேற்கொள்ளுமா இல்லை காங்கிரஸ் தரப்பு மேற்கொள்ள வாய்ப்புள்ளதா ?!
காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கொள்கை ரீதியாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி அரசியல் ரீதியான பரப்புரையை மேற்கொண்டதன் காரணமாகவே அக்கட்சி அந்தத் தேர்தலில் மண்ணைக் கவ்வக் காரணமாக இருந்தது என்பது உலகறிந்த ஒன்று.
எனவே…நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொறாமைப்படும் இடத்திலோ, அல்லது சீமானைவிட மக்களிடம், ஈ*ழ மக்களிடம், முன்னாள் போராளிகளிடம் நற்பெயர் பெற்ற இடத்திலோ சுபா. முத்துக்குமார் இருக்கவேயில்லை.
ஆயுதப்போராட்டம் இலங்கை வடக்கில் இலங்கை அரசால் திணிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியாவில் தமிழ்நாட்டில் அப்படி ஒரு ஆயுதப் போராட்டம் எப்போதும் அவசியமற்றது, மக்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் படக்கூடியது அல்ல. காரணம் மேதகு அவரைச் சந்திக்க இந்தியாவில் இருந்து சென்ற பழ நெடுமாறன், வைகோ, திருமாவளவன் தொடங்கி இறுதியாக சீமான் வரை சுமார் 100 க்கும் மேற்பட்ட எவரிடமும் ஒருபோதும் வலியுறுத்திய வழிமுறை அல்ல இந்த ஆயுதப் போராட்ட வழிமுறை, குறிப்பாக இந்தியாவில்.
அரசியல் ரீதியாகத் தங்களின் நீதிக்கான போராட்டத்தின் தேவையை இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு எடுத்துக்கூறுமாறுதான் இவர்களிடம் மேதகு கேட்டுக்கொண்டார்.
முத்துக்குமார் கைகளில் எடுத்த வன்முறை சார்ந்த, ஆயுதம் தங்கிய போராட்ட வழிமுறைகள் தமிழர்களை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் சென்று “தமிழ்த் தீவிரவாதிகள்” என்று தினமலரும், தினமணியும், இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளும் குத்திய முத்திரைக்குள் அடக்கி ஒடுக்கி அழித்து விட்டிருக்கும்.
சுபா. முத்துக்குமார் மிக மிகத் தவறான போராட்ட வடிவங்களை இந்தியாவில் , தமிழ்நாட்டில் கைகளில் எடுத்தவர்.
சீமான் எடுத்த அனைவரையும் அரவணைத்துப் போகும், அன்பு செலுத்தும் அதே வேளை அரச்சீற்றம் கொண்ட அரசியல் வடிவத்தின் பின்னால் நிற்கும் லட்சக்கணக்கான இளையோர்களின் பக்குவம் தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படுகிறது. அதனால்தான் இன்று 20 முதல் 36 லட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
சுபா. முத்துக்குமாரின் அபத்தமான ஆயுதப் போராட்ட வடிவத்தை எடுத்திருந்தால் இந்த 15 ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி புதைக்கப்பட்ட இடத்தில் மரம் முளைத்திருக்கும்.
சீமானும், நாம் தமிழரும் அரசியல் ரீதியான நகர்வுகள், முழக்கங்கள், போராட்டங்கள் மூலமாக உலகெங்கிலும் வாழும் 15 கோடித் தமிழர்களுக்குப் பொறுப்பான ஒரு அறம் சார்ந்த, அகிம்சை வழியிலான அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
சீமானின் இந்தப் பக்குவ அரசியலுடன் சுபா. முத்துக்குமாரின் செயல்பாடுகளை ஒருபோதும் ஒப்பிடவே முடியாது.
எனவே…சுபா. முத்துக்குமார் அவர்களின் தமிழ்த் தேசிய உணர்வுகளை மதிக்கலாம்..அதற்காக அவர் செய்த நாம் மேலே கூறிய அவரது செயல்கள் எதனையும் மேதகுவோ, தமிழ்நாட்டுத் தலைவர்களோ, உலகெங்கிலும் வாழும் எவருமோ அங்கீகரிக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியாதது.
இந்தியாவில், தமிழ்நாட்டில் ஆயுதம், வன்முறை, வெறுப்பு ஆகியவை இந்த மண்ணின் மக்களால் இரசிக்கப்படமாட்டாது.
எனவே அரசியல் மற்றும் வரலாறுகளை அதன் உண்மைத் தன்மை அறிந்து எழுதினால், பேசினால் அது அறிவுடைமை.
அதற்காக என் புருசனும் அரண்மனைக்குப் போகிறான் என்கிற ரீதியில் சமூக ஊடகங்களில் அறிவற்ற அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கக் கூடாது.
இந்த அளவுக்கு ஆழமான பேருண்மைகளையே அவதூறாக வாயில் கழிவு கக்கும் இந்தச் சில்லறைகள் முத்துக்குமாரின் மனைவி குறித்தும், சீமான் அவர்கள் குறித்தும் கண்ணியமாக எழுதுவார்கள் என்று எண்ணுவது மூடத்தனமானது.

