HomeTamil Naduநான் அணியும் கருப்பு...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள்.

இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் – சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள்.

விஜய் மட்டும் வெள்ளை சட்டை – கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார்.

அதற்கு அவர் நான் Black and White ஆக இருக்கிறேன் என்று உணர்த்தவே இந்த உடை அணிவதாகத் திருச்சியில் கூறினார்.

அதிலும் “கருப்பு” நிறத்தின் அர்த்தம் தெரியுமா என்று ஒரு கேள்வியும் கேட்டார்.

அவரது இரசிகர்கள், தொண்டர்களுக்கு பெரியார் இராமசாமிதான் நினைவுக்கு வந்திருப்பார்.

ஆனால் உண்மையில் விஜயின் இந்த கருப்பு வெள்ளை உடை “மரபு வழி ஆசாரமான யூதர்கள் அணியும் உடை”.

விஜய் தமது பிற்காலத்திய திரைப்படங்களில் இந்த கருப்பு வெள்ளை உடையை மறக்காமல் அணிந்திருப்பதைப் பார்க்கலாம்.

அதேபோல பிரமிட்டில் உள்ள ஒற்றைக் கண் சின்னத்தையும், அதன் கைக் குறியீடுகளையும் விஜய் படங்களில் காண்பித்துள்ளார். சிலுவை சின்னங்களையும் அவரது திரைப்படங்களில் பார்க்க முடியும்.

யூதர்களின் திருமண நிகழ்வுகளில் மணப்பெண் வெள்ளை உடை அணிந்திருப்பார். மணமகன் கட்டாயம் கருப்பு உடை அணிய வேண்டும். மேலும், அந்தத் திருமணத்திற்கு வரும் எவரும் வெள்ளை நிற உடை அணியக்கூடாது என்பதும் விதி.

கருப்பு நிறமும், உடையும், தலையில் கருப்பு தொப்பியும் யூதர்களின் மரபுவழி ஆசாரமான உடை.

ஆனால், இந்த ஆசாரமான யூதர்கள் தவிர பிற உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் யூதர்கள் அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டின் மொழி, உடை, பண்பாட்டுக்கு மாறிக்கொள்வது அவர்களின் வழக்கம்.

யூதம் என்பது மத வழிபாட்டு அமைப்பு என்றால், அவர்களின் அரசியல் ஜியோனிஸம்.

Zionism / Zionist என்பது யூதர்களுக்கான தனி நாட்டை அமைப்பது அல்லது மீட்பது, மேலும், அதை விரிவாக்குவது.

அந்த அடிப்படையில்தான் “கானான் தேசம்” என்று வழக்கத்தில் இருந்து வந்த, தற்போதைய இஸ்ரேலைப் பிடித்து அங்கு யூதர்கள் குடியேறினார்கள்.

அவர்களின் “இஸ்ரேல்” என்பது தற்போதைய இஸ்ரேலுடன் நிற்பது அல்ல. அருகில் காசா, லெபனான் உள்ளிட்ட நாடுகளையும் பிடித்து விரிவாக்கம் செய்வது.

அதற்காகவே அவர்கள் அங்குள்ள இஸ்லாமியர்களை விரட்டியடித்து அந்த நாடுகளைப் பிடித்து விரிவாக்கம் செய்யப் போர் தொடுத்து வருகிறார்கள்.

ஜியோனிஸ்டுகளின் நீண்ட நெடுங்கால எதிர்காலத் திட்டம் உலகின் எல்லா நாடுகளையும் தங்கள் மறைமுக ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது.

வெளியில் கிறித்தவமாக இருக்கும். உள்ளே முடிவெடுக்கும் அதிகார உச்சியில் யூத அரசியல் தலைமை – ஜியோனிஸ்டுகளிடம் இருக்கும்.

பிரமிட் மீதுள்ள ஒற்றைக் கண் போல.

இன்னும் புரியும்படி சொல்லப்போனால் சைவம் மற்றும் வைணவர்கள் 97 விழுக்காடு கொண்டதுதான் ஆங்கிலேயர் உருவாக்கிய இந்து மதம் என்பது.

மீதமுள்ள 3 விழுக்காடு வட வேத பிராமணர்கள்.

இந்த வட வேதபிராமணியமே 100 விழுக்காடு இந்து மதத்தைக் கட்டுப்படுத்தும்.

கிறித்துவத்துக்கு யூதர்கள் என்றால் “இந்துக்களுக்கு” வட வேத வைதீகர்கள் (பிராமணர்கள்).

இதுதான் உலக – இந்திய மத அரசியல் !

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் விஜய் அரசு பொறுப்பேற்ற முதல் கூட்டத்தில் அவைத் தலைவர் பைபிள் வசனம் சொல்லித் தொடங்கினார்.

spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நாம் தமிழர் கட்சிப் பெயரை சீமானுக்குக் குருமூர்த்தி வாங்கிக் கொடுத்தாரா ?! 2010 ல் குருமூர்த்தி எங்கே இருந்தார் ?

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் தமிழ்த் தேசியம் என்பது ஏதோ இலங்கைத் தீவின் வடக்கில் தமிழர்களின் பூர்வகுடி நிலத்தில் வாழும் 20 - 30 லட்சம் தமிழர்களுக்கான தேசிய முழக்கம் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் வாழும் 6 கோடித் தமிழர்களுக்கான முழக்கம் மட்டுமல்ல. அது உலகெங்கிலும் வாழும் 15 கோடித் தமிழர்களுக்கான, இனி வரும்காலத்தில் வரும் தலைமுறைகளுக்கான...