HomeSri Lanka"புத்த பிக்குகள் "ரேப்"...

“புத்த பிக்குகள் “ரேப்” பண்ணலாம் ஆனால் தமிழர்கள் “ராப்” பாடக்கூடாது” — அனுரகுமார ஆட்சியிலும் தொடரும் இனவெறுப்பு அரசியல்

இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்தவர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவருக்கு வயது 24. ஹிப்ஹாப்சங்கீ எனும் பெயரில் தமிழ் “ராப்” எனும் சொல்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். இவரது பாடல்கள் இளையோர் மத்தியில் மிகவும் புகழ் பெற்றது.

கடந்த மாதம் (மே) 31-ஆம் தேதியன்று ஒரு கோயில் திருவிழாவில் இவரது சொல்லிசை நிகழ்வு நடைபெற்றது.

அங்கு பாடிய காட்சிகளைத் தொகுத்து அந்தத் தொகுப்பில் விடுதலைப் போராளிகள் குறித்த பாடலை சேர்த்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

அது தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு தருவதும், அந்த இயக்கத்தை புகழ்வதுமான குற்றத்தின் கீழ் வருகிறது என்று கூறி சங்கீத்சன் மீது PTA எனப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாய்ச்சி அவரைக் கைது செய்திருக்கிறது இலங்கைக் காவல்துறை.

இது உலகத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிகை ஊடகவியலாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு பாடல் பாடுவது பயங்கரவாதமா என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

பிரிடிஷ்காரர்களிடமிருந்து இலங்கை விடுதலை பெற்ற காலத்திலிருந்து சிங்கள பவுத்த பேரினவாதிகளால் இந்த இனவெறுப்புத் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இலங்கையின் பூர்வகுடி மக்களாகியத் தமிழர்களுக்கு எதிரான இந்தத் தொடர் இனவெறுப்பு அரசியலை எதிர்த்து, சம உரிமை கோரியுமே தொடக்கத்தில் அறப்போராட்டம் நடத்தியும் அதிலும் பலன் கிட்டாமல் போனது மட்டுமல்லாமல் மேலும் தமிழர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட காரணத்தினாலேயே அங்கே ஆயுதப் போராட்டம் வெடித்தது.

2009-ஆம் ஆண்டு ஒன்னரை லட்சம் ஆயுதமற்ற அப்பாவித் தமிழர்களையும் ஆயுதப் போராட்ட இயக்கங்களையும் அழித்த இலங்கை அரசு அதன்பிறகு இன்னமும் இனவெறுப்பு அரசியலையே செய்து வருகிறது.

அதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டுதான் இந்த பாடகர் கைது, அதிலும் பயங்கர வாதத் தடைச் சட்டத்தில் கைது.

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் PTA என்பது 1979 ம் ஆண்டு அமல் படுத்தப்பட்ட ஒரு கொடூரமான மனித உரிமைகளுக்கு எதிரான சட்டம்.

இதன்படி எவரையும் எப்போது வேண்டுமானாலும் எந்தவிதப் பிடி ஆணையும் (warrant) இல்லாமல் கைது செய்து சிறையில் அடைக்க முடியும். அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் எந்த வித விசாரணையும் இன்றி 18 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகே விசாரணை தொடங்கும்.

இந்த சட்டம் மனித உரிமை அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பையும் கடந்து இலங்கை அரசு தொடர்ந்து தமிழர்கள் மீது பாய்ச்சி வருகிறது.

விடுதலை போராட்ட இயக்கங்களை அழித்துவிட்டோம் என்று கூறும் இலங்கை அரசு போர் முடிந்து 27 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றவில்லை.

இந்தியாவில் கூட TADA எனும் தடாச் சட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கை அரசு PTA எனும் இந்தக் கொடூர சட்டத்தை வைத்துக்கொண்டு தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, அழித்து இனவழிப்பு செய்து வருகிறது.

பாடகர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பாடலுக்காக இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பாய்ச்சுகிறது என்றால் அது ஜனநாயக நாடா இல்லை சுடுகாடா என்கிற கேள்வி எழுகிறது.

பாடகரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சிறையில் அடைந்துள்ள சிங்கள பவுத்த பேரினவாத தமிழர் இனவெறுப்பு அனுரகுமார அரசு 11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 71 வயது புத்த பிக்கு பல்லேகம ஹேமரத்தன தேரோ என்பவரை பிணையில் விடுவித்து வெளியே நடமாட விட்டுள்ளது.

“ரேப்”பை விட “ராப் பாடல்” அவ்வளவு மனித குல விரோதமா என்ன ?

இலங்கை அரசு தொடர்ந்து மனித உரிமை மீறல்களை, இனவழிப்பு அடாவடியை செய்துகொண்டே இருக்கிறதை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

-சிறப்புச் செய்தியாளர் குழு

spot_img

Continue reading

தியாக தீபம் திலீபன் நினைவு நாளை ஒட்டி இளையராஜாவின் ஆஸ்திரேலியா இசை நிகழ்ச்சியின் தேதியை மாற்றக் கோரி வேண்டுகோள் !

இசைஞானி இளையராஜா அவர்களின் ஆஸ்திரேலிய இசை நிகழ்ச்சியின் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என உலகத் தமிழர்களின் உணர்வுகளை முன்வைத்து வேண்டுகோள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2026 செப்டம்பர் 26 அன்று இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாள் தமிழீ*ழப் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த தியாக தீபம்...

அறநிலையத்துறையில் சேகர் பாபு ஆடிய ஆடக் கூடாத ஆட்டம் ! 3,000 கிலோ தங்கம்; 4,000 கோயில் குடமுழுக்கு; குவிந்த தங்கக் கட்டிகள் !!

"தமிழ் ஊடகம் குழுமம்" சொன்னதை திமுக ஆய்வுக்குழு உறுதி செய்தது ! அறநிலையத்துறையில் சேகர் பாபு ஆடிய ஆடக் கூடாத ஆட்டம் ! 3,000 கிலோ தங்கம் ; 4,000 கோயில் குடமுழுக்கு ; குவிந்த தங்கக் கட்டிகள் நேர்மையான அதிகாரிகளைப் பந்தாடிய முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ! மீட்கப்பட்ட தமிழர் கோயில் இடங்களைத் தெலுங்கர்களுக்கு குத்தகை விட்ட...

தமிழ்த் தேசியத்திற்கு முதல் மரியாதை செலுத்திய பாரதிராஜாவுக்கு நாம் தமிழர் கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்திய சீமான் !

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிப்பயணத்தின்போது தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் கொடி போர்த்தி புகழ் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்த்திரையுலகின் தன்னிகரில்லாத கலைஞன் பாரதிராஜா. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ்த் தேசியத்தின்மீதும் அளவில்லாப் பற்றுக் கொண்டிருந்தவர். தமிழ்த்தேசிய விடுதலை பெறுவதற்கான 30 ஆண்டுகாலப் போராட்டம் நடத்திய மேதகு...