“தமிழ் ஊடகம் குழுமம்” சொன்னதை திமுக ஆய்வுக்குழு உறுதி செய்தது !
- அறநிலையத்துறையில் சேகர் பாபு ஆடிய ஆடக் கூடாத ஆட்டம் !
- 3,000 கிலோ தங்கம் ; 4,000 கோயில் குடமுழுக்கு ; குவிந்த தங்கக் கட்டிகள்
- நேர்மையான அதிகாரிகளைப் பந்தாடிய முன்னாள் அமைச்சர் சேகர் பாபு !
- மீட்கப்பட்ட தமிழர் கோயில் இடங்களைத் தெலுங்கர்களுக்கு குத்தகை விட்ட சேகர் பாபு !
அறநிலையத்துறையின் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் “ஜெகதலப் பிரதாபங்கள்” குறித்த முதல் பதிவில் அவர் எப்படி “அமைதிப்படை அம்மாவாசை” போல செல்வி.ஜெயலலிதாவிடம் நடித்து மாட்டிக்கொண்டார், மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் எப்படி அவரிடம் மாட்டிக்கொண்டார்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் விசாரித்துக் கோடிட்டுக் காட்டியிருந்தோம்.
இதனைத் “தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்த திமுகவின் ஆய்வுக்குழுவும்” உறுதி செய்துள்ளது. அந்த ஆய்வுக்குழுவினரிடம் திமுகவினர் பலர் முன்வைத்த குற்றச்சாட்டு சேகர் பாபு மீதானவைதான்.
சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சரா ? நாடு விளங்குமா ?!
சென்னை ஓட்டேரியில் உள்ள செல்லப்ப முதலித் தெருவில் ஒரு காலத்தில் நடைபாதையில் அமர்ந்து வெட்டியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தவர்தான் சேகர் பாபு. சிறிது காலம் சைக்கிள் ரிக்சா ஓட்டியவர்.
இவை தவறானதில்லை. நேர்மையாக உழைக்கும் எல்லாத் தொழிலும் மேன்மையானதே. ஆனால் இந்த “ரிக்சா மாமா” பிற்காலத்தில் “அரசியல் தாதா” போல உருவெடுத்ததுதான் தவறு.
காங்கிரஸ் கட்சியினரின் கோட்டையாக இருந்த சேகர் பாபு தொகுதியில் வலுவாக அரசியல் செய்துவந்த காங்கிரஸ் கட்சியினர் வெற்றிவேல், கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ உள்ளிட்டவர்கள் இருந்தவரை சேகர் பாபு இவர்களைவிடக் குறைவான அரசியல், அதிரடி ஆள் பலம் கொண்டவராகவே இருந்தார். அங்கு அந்தக் காலத்தில் ரவுடியாக வலம் வந்த ஒருவர் வாகன விபத்தில் இறக்க, அதன் பிறகே தன்னை “தாதாவாக” நிலை நிறுத்திக்கொண்டார் சேகர் பாபு.
மதுசூதனன் ஆதரவிலேயே அதிமுக எனும் அரசியல் கட்சியின் பலத்தில் தம்மை வளர்த்திக்கொண்டவர் நம்ம “அமைதிப்படை அம்மாவாசை” சேகர்பாபு.
இவருக்கும் இவரது வாழ்க்கைக்கும் அறநிலையத்துறை என்பது சற்றும் பொருத்தமற்ற துறை. சபரி மலை கோயிலுக்கு செல்லும் வழக்கம் கொண்டவர் என்பதாலேயே ஒருவருக்கு அறநிலையத்துறையை திமுக ஒதுக்கியது… சத்யராஜ் – வடிவேலு நடித்த ஒரு திரைப்படத்தில் கிரிக்கெட்டுக்கு ஆள் சேர்ப்பது போல நகைச்சுவையானது. அறம் அற்றவர்களுக்கு அறநிலையத்துறை என்பது தமிழர் இனத்திற்கு ஏற்பட்ட பெரும் கேடு.
இராசராச சோழன், இராசேந்திர சோழன் முன்னின்று கட்டிய திருகோயில்களுக்கு சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சர் என்றால் தமிழர்களுக்கு இதைவிட என்ன இழுக்கு வேண்டும் ?!
பொதுவாக அடிதடி செய்பவர்கள், அடாவடி செய்பவர்கள், சுரண்டிக் கொழுப்பவர்கள், சாராயம் விற்பவர்கள் எல்லாம் கோயில்களுக்குள் வந்தபிறகுதான் தமிழ்நாட்டுக் கோயில்களின் நிலை பரிதாபகரமானதாக ஆகியது என்கிறார்கள் நற்குணம் கொண்ட பெரியவர்கள்.
வடசென்னைப் பகுதியில் நன்கு அறியப்பட்ட சேகர்பாபுவுக்கு அறநிலையத்துறை என்கிறபோதே அவரின் பின்னணி குறித்து அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இவருக்கு இந்தத் துறை கிடைக்கப் பெற்றதற்குக் காரணம் இவரின் மனைவியின் தயவால்தான். திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களிடம் இவரது மனைவி அழுது புரண்டு கேட்டதால்தான் இத்துறை கொடுக்கப்பட்டது என்கிறார்கள்.
உண்மையில், மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சேகர் பாபுவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் எண்ணமெல்லாம் சிறிதும் இல்லை, அதில் அவருக்கு உடன்பாடும் இருந்திருக்கவில்லை என்கிறார்கள் திமுக தரப்பில் நாம் விசாரித்தவரை.
ஆனால் அம்மாவாசை அவ்வளவு எளிதாக விட்டுவிடுவாரா என்ன ?
துர்கா அவர்களுடன் நல்ல மரியாதையான நட்பில் இருந்த பலரில் ஒரு முன்னாள் பெண் எம்பி தவிர சேகர் பாபுவின் மனைவியும் ஒருவர். கோயில்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு துர்காவுடன் இவர்கள் செல்லும் அளவுக்கு இவர்களின் நட்பு.
அப்படிப்பட்ட நிலையில்தான் துர்கா அம்மாவிடம் புலம்பி இந்தப் பதவியை சேகர்பாபுவுக்குப் பெற்றுத்தந்தார் அவரது மனைவி என்கிறது விவரம் அறிந்தவர்கள் கூறும் தகவல்.
அதுவரை வெள்ளை வேட்டி சட்டை என்று சுற்றிக்கொண்டிருந்த “அமைதிப்படை அம்மாவாசை” அதன்பிறகு காவி வெட்டி, நெற்றியில் திருநீறு என்று கெட் அப்பை மாற்றி “ஞானப்பழம்” போல சுற்ற ஆரம்பித்தார். திக மேடையில்கூட இதே உடையுடன் சென்று அமர்ந்தார் சேகர் பாபு.
பார்ப்பதற்கு தேவாரம், திருவாசகம், வள்ளலாரின் திருமுறைகள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர் போலத் திரியும் சேகர் பாபுவுக்குத் தெரிந்தது எல்லாம் காந்தி படம் போட்ட காகிதம், நிலம், தங்கக்கட்டிகள், கமிஷன், கட்டிங் மட்டுமே என்கிறார்கள் நாம் பேச்சுக்கொடுத்த அறநிலையத்துறைப் பணியாளர்கள்.
இந்து சமய அறநிலையத்துறையின் நிலங்களை மீட்டார் சேகர் பாபு என்று செய்யப்பட்ட “விளம்பரத்திற்குப்” பின்னணியில் விசாரித்தால் எதற்கு அதை அவர் மீட்டார் என்கிற பல உண்மைகள் தெரியவரும் என்றும் அவர்கள் அதிர்ச்சி தருகிறார்கள்.
அவ்வாறு மீட்கப்பட்ட தமிழர் கோயில் இடங்களைத் தெலுங்கு பேசுவோருக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாகவும் தகவல். தமிழர்களின் உரிமைகளைத் தட்டிப்பறித்து தெலுங்கர்களுக்கு அளித்துள்ளார் சேகர் பாபு என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பலர்.
உண்மையில் அந்த நிலங்களை எல்லாம் மீட்கவேண்டும் என்கிற உறுதிப்பாடும், உள்ள சுத்தியும் இருப்பவர் என்றால் சிதம்பரம் கோயிலை சேகர் பாபு மீட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்களை பின்புலமாக் கொண்ட அதேபோல பிராமணர்கள் வசமுள்ள ஸ்ரீரங்கம், சிதம்பரம் என்றால் பின்வாங்கும் சேகர் பாபு தமிழர் கோயில்களை எல்லாம் குறிவைத்து சூறையாடியிருக்கிறார்.
அந்த அடிப்படையிதான் வடலூர் வள்ளலாரின் 108 ஏக்கர் பெருவெளியில் மீதமுள்ள 72 ஏக்கரையும் கபளீகரம் செய்து “கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ்” ஆக்கத் துடித்திருக்கிறார் சேகர் பாபு. வடலூர் வள்ளலார் மீது துர்கா ஸ்டாலினின் சகோதரர் ஆர்வம் காட்டவே துர்கா அம்மாவிடம் மேலும் நற்பெயர் பெறவே வள்ளலார் பெருவெளியை சிதைத்து கட்டுமானம் கட்டத் துடித்திருக்கிறார் சேகர்பாபு. அதனை எதிர்த்துப் போராடிய வள்ளலாருக்கு 108 ஏக்கர் நிலம் தானம் செய்த வாரிசுகள் மீதெல்லாம் பிணையில் வர முடியாத வகையில் பொய் வழக்குகள் போட்டார் சேகர் பாபு. வடலூரில் பேயாட்டம் ஆடினார் சேகர் பாபு. எப்படியவது மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரை இப்படி ஏதாவது வகையில் திருப்பதி படுத்தி காரியம் சாதித்துக் கொண்டிருந்தார் சேகர் பாபு.
துர்கா அம்மையாரின் அளவு கடந்த “இறை பத்தி” சேகர் பாபுவுக்கு ஆடுகளமாக அமைந்துவிட்டது.
இதுதவிர, திருக்கோயில் தொடங்கி திருவண்ணாமலை வரை அவரது தெலுங்கு பாசம் கரைபுரண்டோடியிருக்கிறது. இவர் வந்ததற்குப் பிறகு அறநிலையத்துறை முழுதும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் பெரும்பாலும் நிரப்பப்பட்டு இருக்கிறார்கள் என்கிறார்கள்.
தமிழர் வரலாற்றை அழிக்கும், மறைக்கும், திரித்து எழுதும் சிந்தனை கொண்ட சில தெலுங்கர்களின் வரிசையில் முதலில் நிற்கிறார் சேகர்பாபு.
தமிழர்களின் சுமார் 46 ஆயிரம் கோயில்களில் 4,000 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்திவிட்டதாக விளம்பரம் செய்து கொண்ட சேகர் பாபு அந்த 4,000 கோயில் குடமுழுக்கில் “சம்பாதித்தது” எவ்வளவு என்று இன்றய தவெக அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அடிவயிறு எரியக் கூறுகிறார்கள் தமிழர் கோயில்கள் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர்கள்.
- கடந்த 2021 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு “100 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை நினைவுச் சின்னங்கள் என்றும் அத்தகைய கோயில்களில் மராமத்துப் பணிகள் செய்யவவோ மாற்றி அமைக்கவோ விரும்பினால் 17 பேர் கொண்ட ஒரு குழுவிடம் அனுமதி பெற்றே அக்குழுவின் வழிகாட்டல் படியே செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.
- இந்தக்குழுவில் 17 வெவ்வேறு துறைகள் சார்ந்த தனிமனிதர்கள், வல்லுநர்கள், கற்றறிந்தவர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதில் தொல்லியல் துறை சார்ந்தவர்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதும் உத்தரவு.
- ஆனால் சேகர் பாபு தலைமையிலான அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்ட இக்குழுவில் 12 பேர்கள் மட்டுமே இருந்ததாகத் தெரிகிறது. இக்குழுவில் பெரும்பான்மையானவர்கள் கையெழுத்து இட்டால் போதும் என்கிற அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- இக்குழுவின் கடமை, ஒரு கோயில் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றால் அதை மாற்றி அமைக்கும்போதோ, மராமத்து செய்யும்போதோ அதன் பழமை எந்தவிதத்திலும் சிதைக்கப்படக்கூடாது. ஒருவேளை பராமரிக்க முடியாத நிலையில் அக்கட்டுமானம் இருந்தால், சிதிலமடைந்து இருந்தால் அந்தப் பழம் பொருட்களை பத்திரமாக அதே கோயில் வளாகத்தில் பாதுகாக்க வேண்டும். விமானங்கள் எனும் கோபுரங்கள், மண்டபக் கட்டுமானங்கள் ஆகியவற்றை எந்தவிதக் காரணம் கொண்டும் இடித்துக் கட்டக்கூடாது. அவ்வாறு கட்ட வேண்டும் என்றால் மேற்கூறிய காரணங்கள் இருக்க வேண்டும். அதற்கும் விதிமுறைகள் உள்ளன, கோயில் பாதுகாப்புக் குழுவின் முறையான அனுமதியும் தேவை.
- ஆனால், இந்தக் குழுவினரிடம் சும்மா பேருக்கு ஒரு அறிக்கை வாங்கிக்கொள்வார்கள். ஆனால் நடைமுறையில் தாறுமாறாக கோயில்களை இடித்தும் மாற்றியும் கட்டிக்கொள்வார்கள்.
- சரி அதில் சேகர்பாபுக்கு என்ன இலாபம் என்கிற கேள்வி எழலாம். இதோ….
- தமிழர் பழம் கோயில்களில் சுற்றுச்சுவரில் நிலைக்கதவு வைக்கும்போதே அதன் அத்திவாரத்தில் தங்கம், வைரம் உள்ளிட்ட விலை மதிக்க முடியாத இரத்தினக் கற்களை இட்டே நிலைக்கதவு வைக்கும் வழக்கம் தமிழர் மன்னர்கள் வழக்கம்.
- ஒரு நிலைக்கதவுக்குக் கீழேயே விலைமதிக்க முடியாத பொருட்களை இடுவோர் கருவறைக் கீழே எத்தனை விலைமதிக்க முடியாத பொருட்களை இட்டு வைத்திருந்திருப்பார்கள் ?!
- மேலும் ஒவ்வொரு கோயில்களின் தங்க நகை, இடம் உள்ளிட்ட சொத்துக்கள் என கோயில் கட்டிய மன்னர்களால் வைக்கப்பட்டிருக்கும். இந்தத் தகவல்களையெல்லாம் எடுக்கும் அதிகாரம் அறநிலையத்துறையிடம் மட்டுமே உண்டு. வேறு யாரும் உள்ள நுழைந்து எடுத்துவிட முடியாது.
- ஆக தமிழர்களின் விலை மதிக்கமுடியாத வரலாறுகள் கொண்ட ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், தங்க, வைர, வைடூரிய இரத்தினக் கற்கள் கொண்டவைதான் ஒவ்வொரு பழம் கோயிலும்.
- கக்கூஸ் கட்டுவதில்கூடக் கமிஷன் கேட்கும் ஒருவர் தலைமையிலான அறநிலையத்துறை இவற்றையெல்லாம் சும்மா விட்டுவிடுமா என்ன. இந்தத் தமிழர்களின் “செல்வங்கள்” என்ன ஆயிற்று ? அதன் நிலை என்ன என்று எந்த வெளிப்படைத் தன்மை கொண்ட அறிக்கையாவது சேகர் பாபுவால் இந்த 4000 கோயில்கள் தொடர்பில் வெளியிடப்பட்டதா ?!! இல்லையே ?
- சேகர் பாபு தலைமையில் நடத்தப்பட்ட 4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நிகழ்வுகளை அறநிலையத்துறை செய்திருந்தாலும்கூட அதற்கான நிதி என்பது மக்களும், தனியார் நிறுவனங்களும் கொடுத்த பல ஆயிரம் கோடி நன்கொடைகள்.
- திருச்செந்தூர் கோயிலில் 300 கோடி ரூபாய் செலவில் கழிவறைகள் கட்டிக்கொடுத்தவர் ஷிவ் நாடார் என்பது உலகறிந்த ஒன்று. அதிலும் சேகர்பாபு குழுவினர் “கமிஷன்” கேட்டதாகத் தகவல்கள் வெளியாகின. கக்கூஸ் கட்டுவதில் கூட கமிஷன் கேட்ட சேகர் பாபுதான் அறநிலையத்துறை அமைச்சர் என்றால் அந்தத் துறை என்ன தரத்துக்கு இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் என்று சொல்லி அயர வைக்கிறார்கள் அறநிலையத்துறைத் தகவலாளர்கள்.
- ஒவ்வொரு பெரு நிறுவனங்களும் CSR (Corporate Social Responsibility) எனும் பொதுச்சேவைப் பொறுப்புக்கான நிதி ஒதுக்க வேண்டும் என்பது விதி. அத்தகையப் பணம் இந்தக் கோயில்களுக்கான குடமுழுக்குக்கான கட்டுமான நிதியாகவும் அளிக்கப்படுவது வழக்கம்.
- இப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் தனிமனிதர், நிறுவனங்கள், துணிக்கடைகள், பத்தர்கள் என 4,000 கோயில்களுக்கு அளிக்கப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு ? அதில் எவ்வளவு தொகை முறையாக செலவிடப்பட்டது ? மீதமுள்ள தொகை எவ்வளவு ? அதில் “கமிஷன்” எவ்வளவு அதிலும் எத்தனை கிலோ தங்கக் கட்டியாகத் தரப்பட்டது என்று இன்றய தவெக அரசு விசாரணையை மேற்கொண்டால் “பல அதிர்ச்சித்” தகவல்கள் வெளிவரும் என்கிறார்கள் நாம் விசாரித்த அறநிலையத்துறை தரப்பினர் சிலரே.
- கோயில் உண்டியல்களில் போடப்பட்ட தங்க நகைகளை உருக்கி அதனைத் தங்கக் கட்டிகளாக வங்கி இருப்பில் வைத்துவிட்டோம் என்று கூறிய சேகர் பாபு, அப்படி “எத்தனை நகைகள் உருக்கப்பட்டன, அதன் எடை எவ்வளவு ? அதை உருக்கிய பிறகு எவ்வளவு எடை இருந்தது ? அதில் இருந்த “கற்கள்” எங்கே ? அதன் மதிப்பு எவ்வளவு ? ஒவ்வொரு நகையும் உருக்குவதற்கு முன்னர் நிழல் படம் (போட்டோ), ஒளிப்பதிவு செய்யப்பட்டதா ? சேதாரங்கள் எவ்வளவு ? என்று ஒரு தகவலாவது வெளி வந்திருக்கின்றதா ? அதுகுறித்து தவெக
அரசு விசாரணை மேற்கொண்டு வெள்ளை அறிக்கை சமரிப்பிக்க வேண்டும் என்பதும் பத்தர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. - இந்த “நகைகளை” உருக்க மகாதேவன், ஆதிகேசவலு உத்தரவிட கோயில் பாதுகாப்புக் குழுக்களிடம் அனுமதி கோரப்பட்டதா ? தமிழர்களின் கலை நயம் மிக்க நகைகளை உருக்கியதன் மூலம் தமிழர்களின் இக்காலத்திய தங்க நகை வடிவங்களை, நாகரிகத்தை அழித்து ஒழித்திருக்கிறார் சேகர் பாபு. கீழடி, கொற்கை உள்ளிட்ட தொல்பொருள் ஆய்விடங்களில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க ஆபரண நகைகள் கிடைக்கின்றனவே. அதுபோல இந்த 21 ம் நூற்றாண்டின் நகைகள் அனைத்தும் இருக்காது அழிக்கப்பட்டுவிட்டதே ? இதைவிட தமிழர் அடையாளத்தை அழிக்கும் செயல் வேறு ஏது ?
- இந்த “டீலிங்”குக்குத் தடையாக இருக்கும், ஒப்புக்கொள்ள மறுக்கும் பல அறநிலையத்துறையின் அதிகாரிகள் தாறுமாறாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர், தவறே செய்யாமல் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஒருசிலருக்கு “ட்ராப்” வைத்து லஞ்ச ஒழிப்புத்துறையிலும் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டுள்ளனர். தனக்குச் சாதகமான அதிகாரிகளை மட்டும் பக்கத்தில் வைத்துக்கொண்டார் சேகர் பாபு என்கிறார்கள்.
- அதாவது இந்தக் குழு ஒரு கோயிலைப் பார்த்து ஆய்வு செய்து, “இந்த இந்தப் பணிகளை மட்டும் இப்படிச் செய்ய வேண்டும், சுண்ணாம்பா, செங்கலா, சிமெண்டா….என்ன என்ன பயன்படுத்த வேண்டும், என்ன பயன்படுத்தக் கூடாது என்கிற வழிகாட்டு நெறிமுறைகள்” அளிப்பார்கள். அதன் அடிப்படையில்தான், மராமத்தோ, பராமரிப்போ, கட்டுமானங்களோ செய்ய வேண்டும். அதற்கு இம்மியளவும் மாறக்கூடாது.
- இப்படித் தாறுமாறாக தமிழர் கோயில் அடையாளங்களையெல்லாம் அழித்து எடுத்துக்காட்டாக சோழ மன்னன் ஒருவர் கட்டிய கோயிலில் தற்போது ஒரு துணிக்கடைக்காரர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, அதுவும் கருவறை சுவற்றில். அதாவது இன்னும் 50 ஆண்டுகள் கழித்துப்பார்த்தால அந்தக் கோயிலைக் காட்டியவர் சோழ மன்னர் என்கிற வரலாறு இருக்காது. பிரபலமான இன்றைய துணிக்கடை அல்லது பணம் கொடுத்த வேறு ஒரு நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.
- இதைவிடத் தமிழர் வரலாற்றை அழிக்கும் செயல் வரலாற்றில் இருந்தது உண்டா ?
- முகலாய மன்னர்கள் படையெடுத்து கோயில் செல்வங்களைக் கொள்ளையடித்தார்கள் என்று செவி வழிக் கதைகள் கேட்டிருக்கிறோம். அப்படி அவர்கள் கொள்ளையடித்தும் இத்தனை செல்வங்கள் மீதம் இருக்கின்றனவே எப்படி ? காரணம் ஒருவேளை அவர்கள் அப்படி கொள்ளையடிக்க வந்திருந்தாலும் இரகசியத் தகவல்களை அவர்கள் எடுத்திருக்க முடியாது. ஆனால் அறநிலையத்துறையால் அந்த இரகசியத் தகவல்களை எடுக்க முடியும். அப்படிப்பட்ட துறையில் இப்படிப்பட்ட சேகர்பாபுக்களும், கொள்ளைக்கூட்டமும் இறங்கினால் தமிழர் கோயில்களில் என்ன மீதம் இருக்கும்…புதிய பெயிண்ட் பூச்சுகள், சிமெண்ட் கட்டடங்கள், பள பளப்பான தரை தவிர ?! என்று வருத்தம் கொப்பளிக்கக் கூறுகிறார்கள் தமிழ்க் கோயில்கள் மீது அன்பும், அக்கறையும் கொண்ட தமிழர்கள்.
மேலும் பல தகவல்கள் சான்றுகளுடன் தொடரும்…
– சிறப்புப் புலனாய்வு செய்திக் குழு

