சென்னைக்கு அருகே வேளாண் நிலம், ஏரி, கிணறு உள்ள 5700 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி வானூர்தி நிலையம் ஒன்றை அமைக்க அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ஏற்கனவே மீனம்பாக்கத்தில் வானூர்தி நிலையம் இருந்தும் அங்கு போதுமான வானூர்திகள் இல்லாத நிலையில் எதற்காக மற்றுமொரு வானூர்தி நிலையம், அதிலும் வேளாண் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கட்டப்படவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் அம்மக்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து போராடி வந்தனர்.
தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும் தேர்தலுக்கு முன்னதாக அந்தப் பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.
இந்நிலையில், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, அந்தப் பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தை “சிறப்புத் திட்டமாக” மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிவித்திருந்தது.
தேர்தல் முடிவுற்று, விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் அத்திட்டம் குறித்து இந்த அரசு என்ன முடிவு எடுக்கும் என்கிற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், அத்திட்டத்தைக் கைவிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
இதுவரை கையகப்படுத்தப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிறப்புப் பொருளாதாரத் தொழிற் பூங்கா அமைக்கலாமா என்றும் அரசு தரப்பில் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகிவில்லை.
எனினும், அத்திட்டம் கைவிடப்பட்டால் அதற்கு மூல காரணம் நாம் தமிழர் கட்சியின் தொடர் போராட்டங்களே. சீமானின் இயற்கைக்கு ஆதரவான முழக்கங்களே.

