HomeIndiaஇறந்துபோன சகோதரியின் வங்கிக்...

இறந்துபோன சகோதரியின் வங்கிக் கணக்குப் பணம் |இறப்புக்கு சான்று கேட்ட வங்கி ; உடலைத் தோண்டி எடுத்து வந்த அண்ணன் | ஒடிசாவில் அதிர்ச்சி !

ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சார் மாவட்டத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் ஒரு சம்பவம் திங்கட் கிழமை நடைபெற்றது.

தனது இறந்த சகோதரியின் பெயரில் உள்ள வங்கி கணக்கிலிருந்து பணத்தைத் தருமாறு ஒரு பழங்குடி அண்ணன் வங்கியை அணுகியுள்ளார்.

இறப்புக்கான சான்று கேட்டுள்ளனர் வாங்கி அதிகாரிகள். சகோதரி இறந்துவிட்டார் என்று பலமுறை எடுத்துக்கூறியும் சான்றில்லாமல் பணம் தரமுடியாது என்று வங்கி தரப்பில் உறுதியாகக் கூறப்பட்டதால் வேறு வழியின்றி புதைக்கப்பட்ட தமது சகோதரி எலும்புக் கூட்டோடு வங்கிக்கு வந்தார் அந்தப் பழங்குடி மனிதர்.

படானா வட்டாரத்தில் உள்ள மலிபோசி கிளை ஒடிசா கிராமீன் வங்கியில் இந்த சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து போலீசும், நிர்வாக அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டனர்.

50 வயதான ஜீது முண்டா என்ற நபர், 2026 ஜனவரி 26ஆம் தேதி இறந்த தனது அக்கா கல்ரா முண்டாவின் வங்கி கணக்கில் இருந்த ₹20,000 பணத்தைப் பெற முயன்று வந்துள்ளார். “வங்கி அதிகாரிகள் கணக்கு வைத்திருப்பவரை நேரில் கொண்டு வர வேண்டும் என்று கூறியபோது அவர் இறந்துவிட்டார் என்று பலமுறை சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. அதனால் கோபத்தில் கல்லறையை தோண்டி எலும்புக்கூட்டை எடுத்துக் கொண்டு வந்தேன்,” என்று ஜீது முண்டா செய்தியாளர்களிடம் கூறினார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். படானா காவல் நிலைய ஆய்வாளர் கிரண் பிரசாத் சாஹு கூறுகையில், “வங்கி நடைமுறைகள் குறித்து அறிவின்மை மற்றும் அதிகாரிகள் சரியான வழிகாட்டுதல் வழங்காததே இந்த சம்பவத்திற்கு காரணம்” என்றார்.

மேலும், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜீது முண்டாவுக்கு சட்டபூர்வ வாரிசு அல்லது நியமனதாரர் (nominee) குறித்த புரிதல் இல்லாததாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் அந்த எலும்புக்கூடு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

உள்ளூர் மண்டல வளர்ச்சி அதிகாரி மனாஸ் டண்ட்பட், இதுவரை அவர் அரசு நிர்வாகத்தை அணுகவில்லை என்று கூறியதுடன், எனினும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

வங்கி தரப்பினரின் தகவலின்படி, கல்ரா முண்டாவின் கணக்கில் இருந்த நியமனதாரரும் ஏற்கனவே இறந்துவிட்டதால், ஜீது முண்டா ஒரே உரிமையாளராக உள்ளார். இதனால், அவர் எந்தத் தாமதமும் இல்லாமல் பணத்தை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...