HomeTamil Naduகி.பி.18 ஆம் நூற்றாண்டு...

கி.பி.18 ஆம் நூற்றாண்டு வாள்; பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

கி.பி.18 ஆம் நூற்றாண்டு வாள்; பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

பழனியை அடுத்த பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் முருகவேல்.

இவர் தமது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த பழைய வாள் ஒன்றைப் பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.

இந்த வாளை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் திருமதி சசிகலா ஆகியோர் கூறியதாவது :

“இந்த வாள் இரும்பினால் செய்யப்பட்டது.

பண்டைய நாட்களில் போருக்குப் பயன்படுத்தப் பட்ட இந்த வாள் மிகவும் துருப்பிடித்த நிலையில் காணப்படுகிறது.

வாள் 1.110 கிலோ எடை உள்ளது.

வாளின் நீளம் 77 செ.மீ ஆகவும் நடுப்பகுதியில் 3 செ.மீ ஆகவும் உள்ளது.

கைப்பிடி வேலைப்பாடுகளுடன் கூடியதாகவும் வாளின் மேல் பகுதி சற்றே வளைந்த நிலையிலும் காணப்படுகிறது.

இது ஒருபுறம் மட்டும் வெட்டும் வகையில் கூர்மைப் படுத்தப் பட்டுள்ளது.

வாளின் வடிவமைப்பைக் கொண்டு இந்த வாள் கி.பி.17 அல்லது 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருத முடிகிறது.

வாள் கிடைத்த பாப்பம்பட்டி ஊரானது பண்டைய நாட்களில் இரட்டையம்பாடி பாளையப்பட்டு – ஜமீன் பகுதிக்கு உட்பட்டு இருந்தது.

பின்னாட்களில் இரட்டையம்பாடி நெய்க்காரபட்டி ஜமீனுடன் இணைந்தது.

இந்த வாளுக்கும் இரட்டையம்பாடி ஊருக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...