HomeIndiaநாறி துர் நாற்றமெடுக்கும்...

நாறி துர் நாற்றமெடுக்கும் ‘பெரியார் இராமசாமி’ மண் ! தமிழர் நாட்டை நாசம் செய்த திராவிட முகமூடிகள் ! இதுவாடா எங்கள் தமிழ் நாடு ?!

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்

சை, எனத் திரியேல் !

தமிழர்கள் கல்வி அறிவில்லாத காட்டுமிராண்டிகளாகத் திரிந்தார்கள். அவர்களுக்கு நாங்கள்தான் கல்வி கற்றுக்கொடுத்தோம். அவர்களுக்கு நாங்கள்தான் ஆடை அணிவித்துக் கற்றுக்கொடுத்தோம், அவர்களுக்கு நாங்கள்தான் நாகரிகம் கற்றுக்கொடுத்தோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிற திராவிட முகமூடிகள் உருவாக்கி வைத்திருக்கும் இப்படி ஒரு அவலமான தலைமுறையைக் கண்டு உலகமே சிரிக்கிறது !

என் புருசனை விட்டு விட்டு விஜயைத் திருமணம் செய்துகொள்வேன் என்று பேட்டி தருவது, விஜயின் படத்திற்கு முத்தமிடுவது, வெறித்தனமாக பைத்தியங்கள் போல திரிவது என்று இன்று ஒட்டுமொத்த மக்களை முகம் சுழிக்க வைத்துக்கொண்டிருக்கும் இந்தக் கூட்டம் இதே திராவிட மாடல் பள்ளிக்கூடங்களில், திராவிட மாடல் கல்லூரிகளில் வளர்க்கப்பட்டவைதான்.

திராவிட மாடலே இதுதான் நீங்கள் கற்றுக்கொடுத்த கல்வியா, ஆளுமைத் தன்மையா?

பல லட்சம் ரூபாய் கட்டணமாக வாங்கிக்கொண்டு திராவிட முகமூடிகள் கற்றுக்கொடுக்காத பண்பை, ஆளுமையை தமிழினத்தின் மூத்த மகள் ஒளவைப்பாட்டி கற்றுக் கொடுக்கிறாள்.

அறம் செய விரும்பு

சை, எனத் திரியேல்

தக்கோன் எனத் திரி

சான்றோர் இனத்து, இரு

சொல், சோர்வு படேல்

என்கிறாள் எங்கள் மூதாட்டிப் புலவர் ஒளவையார்.

தமிழர்களுக்கு மட்டுமே உரித்தான “அறம்” எனும் சொல் நடிகர் விஜயிடம் உள்ளதா அல்லது அவரின் வார்ப்புகளான தொண்டர்கள் வசம் உள்ளதா ?

மக்கள் “ச்சை” என்று ஒதுக்கி முகம் சுளிக்கும் வண்ணம் நடக்காதே என்கிறாள் ஒளவைப்பாட்டி.

பெரியவர்களால் “தக்கோன்” தகுதியானவன் என்று பாராட்டும் அளவுக்கு நடந்துகொள் என்கிறாள் ஒளவைப்பாட்டி.

சான்றோர் அறிவுரை கேட்டு அவர்கள் வழியில் நில் என்கிறாள் ஒளவைப்பாட்டி.

பண வருவாய் ஒன்று மட்டுமே குறிக்கோள் என்று வீங்கித் திரியும் திராவிட முகமூடிகளின் பள்ளிக்கூடங்களில் எங்காவது ஒளவைப்பாட்டியின் அறிவைக் கற்றுக் கொடுத்திருந்தால் இப்படி ஒரு தலைமுறை உருவாகியிருக்குமா?!

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.” 

கசடறக் கற்பதும் கற்றபின் அதற்கு ஏற்ப நடப்பதும் தமிழர் அறம். திராவிட முகமூடிகள் கற்றுக்கொடுத்த லட்சணம் விஜய் இரசிகர்களிடம் தெரிகிறது.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.” 

ஒழுக்கம், ஒழுங்கு என்கிற இரண்டு சொற்களுக்கு என்ன பொருள் என்றே விஜய் இரசிகர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாதவாறு ஒரு கல்வி முறையைத்தான் திராவிட முகமூடிகள் இத்தனை ஆண்டுகள் அளித்திருக்கிறார்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் இந்த உலகத்திற்கு அறிவியல், அணு அறிவு, அரசியல், தனிமனித ஒழுக்கம் என்று உலக மனிதர்கள் அனைவர்க்கும் பொருத்தி வருகிற ஒரு ஒழுங்கு முறையை, ஒழுக்கத்தை வகுத்துப் போதித்து வருகிறார்கள்.

சான்றோர்களின் வழிகாட்டல், தமிழரின் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் அனைத்தையும் அழித்து ஒழிப்பதே திராவிடத்தின் ஒரே குறிக்கோளாக இருப்பதால் தமிழர் தலைமுறைகள் இப்படித் தறிகெட்டு நாசமாவதைத் திராவிட மாடல் இரசிக்கிறது. மேலும், மதுபோதை, போதை மருந்து, திரை மயக்கம், தொலைக்காட்சித் தொடர் மயக்கம் என்று மேலும் பித்துப் பிடிக்க வைக்கிறது.

அன்றாடம் குளித்துத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு பெரியார் இராமசாமியை எடுத்துக்காட்டாக கூற முடியுமா ?

ஆனால் கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி என்கிறார் ஒளவையார்.

பெண்களை மதித்து ஒழுக்கத்தோடு நடத்த வேணடும் என்பதற்கு எந்த ஒரு திராவிட முகமூடித் தலைவரையாவது எடுத்துக்காட்டாக கூற முடியுமா ?

நாகரிகம் என்பதற்கு எடுத்துக்காட்டாக எந்த ஒரு திராவிட முகமூடி இயக்கத்தினரையாவது எடுத்துக்காட்டாக கூற முடியுமா ?!

அப்புறம் எப்படி இவர்களின் கல்வி முறை சான்றோர்களை ஆன்றோர்களை உருவாகும் ?

போலிகளை, புரட்டுகளை, பைத்தியங்களைத் தானே இவர்களால் உருவாக்க இயலும் !

சிறுமியாவது கிழவியாவது என்று ஏளனமாக எண்ணும் பாலியல் வன்முறையாளர்களைத் தானே உருவாக்க இயலும் ?!

இதுவாடா எங்கள் தமிழ்நாடு ? இந்த நாட்டை உருவாக்கவா எங்கள் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் ?!

பெயருக்குத் திருவள்ளுவர் சிலை, பெயருக்கு திருவள்ளுவர் புகழ், பெயருக்கு ஒழுக்கம்…ஆனால் திராவிட முகமூடிகள் உருவாக்கியவை அனைத்தும் சொல்வதற்கு நேர் எதிராக ….

தமிழினமே உன் கண்முன்னே உனது இனத்தையும், நாட்டையும், பண்பாட்டையும், அறிவையும் அழிக்கிறர்கள்.

இனியும் உறக்கமேன் !

spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...