–வளர்மெய்யறிவான்(எ) விசுவா விசுவநாத்,
தமிழ்க் கடவுள் முருகனுக்கு பட்டை நாமம் சாத்தி வெங்கடாசலபதி ஆக்கியது!
திருப்பதி – இந்தப் பெயரே தூய தமிழ்ப் பெயர். “திரு” என்றால் இறைத்தன்மை கொண்ட என்று பொருள். “பதி” என்றால் ஞானியர் ஐக்கியமான கோயில் என்று பொருள். “திருமலை” என்பதும் தூய தமிழ்ப்பெயரே. திரு + மலை.
இந்தக் கோவிலில் உள்ள முருகன் திருவுருவச் சிலைக்கு முகத்தில் பட்டை நாமம் சாதி அவரை வைணவக் கடவுள் வெங்கடாசலபதி ஆக்கியதே தமிழர் இனவழிப்பின் முதல் கட்டம்.
திருப்பதி – திருமலை, போகர் சித்தரின் மாணவர் கொங்கணர் சித்தர் ஐக்கியமான தலம். போகர் எப்படி பழனியில் “தண்டாயுத பாணி” சிலையை அமைத்து பொது மக்கள் வழிபாட்டுக்கு விட்டாரோ அதே போல திருப்பதியில் கொங்கணர் முருகனுக்கு கோயில் அமைத்தார். அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் தமிழே.
காளத்தி, திருக்காளத்தி
இது தமிழர் ஐம்பூதக் (பஞ்ச பூத) கோயில்களில் ஒன்று. இதுவும் தமிழர் மண்ணே.
சித்தூர் – சிற்றூர் – சிறிய ஊர்
இதுவும் தமிழர் மண்ணே.
திருத்தணி – “திருத் தணிகை”
இதுவும் தமிழர் மண்ணே.
கடந்த 1905 ம் ஆண்டிலிருந்து….
பிரிடிஷ் ஆட்சியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவின் ஒரு பகுதி, ஆந்திரா, ஒரிசாவின் ஒரு பகுதி ஆகியவை ஒன்றிணைந்த மாகாணம் மதராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டது.
தென்குமரி ஆயிடை வடவேங்கடம் வரை….
இமயமலை வரை பறந்து விரிந்து தமிழர்கள் வாழ்ந்த காலம் மாறி கன்னடம், மலையாளம், தெலுங்கு என இனவழி மொழிகள் தோன்றிய பிறகும் கூட மேற்கண்ட இந்த ஊர்கள் தமிழர் பெரும்பான்மையாக வாழும் ஊர்களே.
இப்படிப்பட்ட நிலையில் 1905 ம் ஆண்டிலிருந்தே இந்த ஊர்களில் அதாவது ஆந்திர எல்லையோரம் இருந்த இந்த ஊர்களில் தமிழை அகற்றிவிட்டு தெலுங்கை நிலை நிறுத்தத் தொடங்கினார்கள்.
பள்ளிகளில் தெலுங்கு மொழி வழிக் கல்வி மட்டுமே போதிக்கப்பட்டது. நில ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் தெலுங்கு மயமாக்கப்பட்டது. தமிழர் குடி மக்கள் தெலுங்கர்களாகவே மாற்றப்பட்டார்கள். இது இப்போதைய வேலூர் தொடங்கி கும்மிடிப்பூண்டி வரை நிலைமை. இப்போதும் வேலூர் உள்ளிட்ட எல்லையோர ஊர்களில் இட ஆவணங்கள் தெலுங்கில் உள்ளதே சான்று.
இது நமது கற்பனை அல்ல. திருத்தணி மீட்புப் போரின் தளபதி விநாயகம் அவர்கள் மதராஸ் மாகாண சட்டமன்றத்தில் பதிவு செய்தது.
இப்படி பறையர், தேவேந்திர குல வேளாளர், வன்னியர், முதலியார், செட்டியார் உள்ளிட்ட தமிழ்க் குடிகள் அனைத்தும் தெலுங்கர்களாக மாற்றப்பட்டனர்.
திருத்தணி மீட்பு ….
திருப்பதி, சித்தூர், காளத்தி ஆகியவற்றைத் தெலுங்கர்கள் ஆக்கிரமித்துத் தெலுங்கு மண்ணாக மாற்றிவிட்டனர். இதை எதிர்த்து விநாயகம், ம.பொ.சிவஞானம் நடத்திய எல்லை மீட்பு போராட்டத்தில் திருத்தணியை மட்டுமே மீட்க முடிந்தது.
தலை கொடுத்தாவது தலைநகர் மீட்பு …
தெலுங்கர்களின் பேராசை மதராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னையையும் விட்டுவைக்க வில்லை.
“மதராஸ் மனதே“…அதாவது மெட்ராஸ் எங்களுடையதே என்று வெளிப்படையாகவே முழக்கமிட்டனர்.
இதை எதிர்த்தே…தலை கொடுத்தாவது தலைநகர் மீட்பேன்என்று களமிறங்கிப் போராடினார் ம.பொ.சிவஞானம். (இதனால்தான் திரவிட முகமூடித் தெலுங்கர்களுக்கு ம.பொ.சியைக் கண்டால் ஒவ்வாமை, வெறுப்பு). சொன்னபடியே சென்னையை மீட்டார் ம.பொ.சி. ஐயா.
ஆனாலும், இன்னமும் தெலுங்கர்கள் தமிழர்களை ஆளத் துடிக்கிறார்கள்..
தெலுங்கர்களின் பேராசை இன்னமும் தொடர்கிறது. இடத்தை, மண்ணை களவாடத்தான் முடியவில்லை, மாறாக ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து தங்களின் அடுத்தவர் நாட்டைப் பிடிக்கும் பேராசையை அதன் மூலம் நிறைவேற்றுவதே அவர்களின் மறைமுக வேலைத் திட்டமாக இருக்கிறது.
பெரியார் இராமசாமியின் இலக்கும் இதுவே…
நேரடியாகத் தமிழர்களிடம் மோத முடியாது, அவர்களை நயவஞ்சகமாகவே வெல்ல முடியும் என்று உணர்ந்து செயல்திட்டத்தை உருவாக்கியவர் ஈ.வெ.இராமசாமி.
நேரடியாகவேத் தமிழ் மொழி, தமிழர் இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழர் மெய்யியல், அரசியல் என அனைத்திலும் குறுக்கு வெட்டாக பிளக்க ஆரம்பித்தார்.
ஜியோனிஸ யூத செயல்திட்டமே “திராவிடமுகமூடி” செயல் திட்டத்தின் முன்னோடி!
யூதர்களின் ஜியோனிஸம் என்பது ஒரு வஞ்சக அரசியல் திட்டம் . அதே போல பிசகாமல் “திராவிட” எனும் பெயரில் “தெலுங்கு ஜியோனிஸத்தை” நடைமுறைப் படுத்தியவர் பெரியார் இராமசாமி.
ஈ.வெ.இராமசாமியின் செயல்திட்டமே திமுகவின் செயல் திட்டம்!
ஈ.வெ.இராமசாமியின் “தெலுங்கு ஜியோனிஸ வஞ்சக நுட்பமே” திராவிட செயல்திட்டம்.
தமிழர்கள் அனைவருக்கும் “திராவிட முகமூடியை” மாட்டிவிட்டு அணு அணுவாக தமிழர்களை அவர்களின் மொழியிலிருந்து பிரிப்பது, பண்பாட்டில் இருந்து பிரிப்பது, கலை இலக்கியம் ஆகியவற்றில் இருந்து பிரிப்பது, தமிழர் ஆண்டுக் கணக்கை மடை மாற்றுவது, தமிழர் நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்று மடைமாற்றுவது….
மிழர்களை அவர்களின் மண்ணில் இருந்து பிரிப்பது…இறுதியில் மண்ணையே களவாடிக் கொள்வது என்பதுதான் திராவிடத்தின் செயல்திட்டம்.
அதை 70 விழுக்காடு செய்து முடிந்துவிட்டது ஈ.வெ.இராமசாமியின் வஞ்சக தெலுங்கு ஜியோனிஸ முறை திராவிட செயல் திட்டம்.
இந்த செயல்திட்டத்தின் தொடர்ச்சிதான் திமுகவின் செயல் திட்டம்.
கடந்த 2021 தேர்தலுக்கு முன்னதாக தமிழர் வாழ்க என்று கூறிவிட்டு தேர்தலில் வெற்றி பெற்றதும் “திராவிட ஸ்டாக்” “திராவிட மாடல்” என்று உருட்டியது இதற்காகவே.
தமிழர் சங்க இலக்கியங்களைத் திராவிட இலக்கியம் என்றும், தமிழர்கள் வடக்கில் குஜராத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட தெலுங்கர்கள் உருட்டுவதும் ஈ.வெ. இராமசாமி, ஐராவதம் மகாதேவன், கி. இராஜநாராயணன் உள்ளிட்ட ஜியோனிஸ மாடல் தெலுங்கர்களின் செயல்திட்டமே.
மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகவே திராவிட முகமூடியில் தெலுங்கர் பாசத்தை வெளிக்காட்டும் வகையில் திமுகவினரே கடுமையாக விமரிசனம் வைக்கும் வகையில் தமிழர் கட்சியினரை அவமானப்படுத்திவிட்டு தெலுங்கர் கட்சி தேமுதிக, மதிமுக ஆகியவற்றுக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ளார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தெலுங்கரைத் தலைவராக நியமித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் இன்னமும் “திராவிடம்’ தங்களை வாழ வைக்கும் என்று நம்பினால் தமிழர்களைவிட மூடர்கள் உலகத்தில் வேறு எவருமில்லை.
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆய்வாளர் : தமிழியல், ஆசிரியர் : தமிழ் ஊடகம், நிறுவனர் : தமிழியல் நடுவம் 25/03/26

