HomeIndiaரயில் விபத்தில் செத்தவரையெல்லாம்...

ரயில் விபத்தில் செத்தவரையெல்லாம் தமிழ் மொழிப்போர் ஈகியர் ஆக்குவதா?

ஆன்ம சுத்தி கொண்ட இயக்கமா மே 17 ?!

அமைப்பின் பெயரை உடனே மாற்றுங்கள் திருமுருகன் காந்தி

வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்

மே 17 எனும் பெயரில் ஒரு இயக்கத்தை அமைத்தார் திருமுருகன் காந்தி. “மே 17” எனும் சொல்லைக் கேட்டாலே உள்ளத்தில் தளர்ந்து உருகி நெகிழ்ந்து போவார்கள் தமிழர்கள், இதனைப் பயன்படுத்தி என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் தமிழர்கள் கேட்டுக் கொள்வார்கள் என்று திட்டமிட்டு இந்தப் பெயரை திருமுருகன் காந்தியும் அவருக்குப் பின்னணியில் உள்ள “திராவிட முகமூடி” இயக்கங்களும் இந்திய இஸ்ரேல் உளவுத் துறை கூட்டமைப்பும் வைத்தனரோ எனும் ஐயம் மிக வலுவாகவே எழுகிறது.

சிங்கள பவுத்த பேரினவாத அரச பயங்கரவாதத்தால் அ*ழித்து ஒழிக்கப்பட்டு, இ*னப்படுகொலைக்கு ஆளான தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட போர் 2009 ல் நிறுத்தப்பட்டபிறகு போருக்குப் பிந்தைய தமிழர்களுக்கு மே 17 செய்த நன்மைகள் என்ன ?

மெழுகுவர்த்தி ஏந்துவது, கருப்பு சட்டை – நீல நிற ஜீன்ஸ் அணிந்து வந்து ட்ரம்ஸ் அடித்து ஊர்வலம் போவது என்பதைத் தாண்டி தமிழர்களுக்கான என்ன செயல் திட்டத்தை மே 17 கொண்டிருக்கிறது ?

வெற்று முழக்கங்களைத் தவிர தமிழர்களுக்காக என்ன செய்திருக்கிறது மே 17 ?

01. 2009 ல் இலங்கையில் போர் முடித்துவைக்கப்பட்டது. உலகெங்கிலும் விரட்டி அடிக்கப்பட்டு அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தரத் தொடர்ந்து மே 17 செய்யும் செயல்கள் என்ன ?

02. போர் காலங்களிலும், போருக்குப் பிறகும் இலங்கை அரச ஆயுதப்படையினரால் வலிந்து காணாமல் அடிக்கப்பட்டவர்கள், கொ*ல்லப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத் தர மே 17 செய்துவரும் (ஊர்வலம், சமூக ஊடகப் பதிவு, நோட்டீஸ் மேடைப்பேச்சு அல்லாத) செயல்கள் என்ன ?

03. இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரைப் பின் வாங்க வைக்க மே 17 செய்த செயல்கள் என்ன ?

04. உலகெங்கிலும் அகதிகளாக ஈ*ழத் தமிழர்கள் வாழ்ந்தாலும் அங்குள்ள அரசுகள் தமிழர்களை அரசியலில் பங்கேற்க அனுமதித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளாக ஆகும் நிலையை உருவாக்கி இருக்கின்றன. தமிழ்நாட்டு அரசியலிலில் இங்கே வாழும் ஒரு ஈ*ழத் தமிழரையாவது மே 17 அரசியல் தளத்தில் நிற்க வைக்க என்ன முயற்சி எடுத்தது ? அவர்களுக்கு இங்கே குடிமகன் எனும் அந்தஸ்து கூட இன்னும் அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு ஓட்டுரிமையே இல்லையே ? அவ்வளவு ஏன் அவர்களுக்கு “அகதி” எனும் அடையாளம் கூட அளிக்கப்படாமல் சட்டவிரோதக் குடியேறிகளாகத்தானே வைத்திருக்கின்றன இந்திய / தமிழ்நாடு அரசுகள் ? இந்த அவல நிலையை நீக்க மே 17 செய்த செயல்கள் என்ன ?

05. இலங்கையில் நடைபெற்றது இனவ*ழிப்புதான் என்று உலகமே சொல்லிவிட்டபோதும், தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய மே 17 இதுவரை செய்தது என்ன ?

06. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி அதைச் செய்தார் இதைச் செய்தார் என்று கூறிக்கொண்டு இதற்கு பதில் எழுத முனையாதீர்கள். ஐநா மனித அவையில் இதுவரை மே 17 கொண்டு நிறுத்திய சாட்சியங்கள், ஆவணங்கள் எத்தனை ?

07. எத்தனை பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள், பதிவுகள், சாட்சியங்களை மே 17 ஐநா மனித அவையில் சமர்ப்பித்துள்ளது ?

08. பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக குரல் எழுப்ப ஐநாவுக்கு செல்ல முயலும் பத்திரிகை ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்களுக்கு “விசா” மறுக்கும் சுவிஸ் அரசுக்கு எதிராக மே 17 கொடுத்த எதிர்ப்புக்குரல் எத்தனை ? விசா கிடைக்க வைக்க மே 17 செய்த செயல்கள் எத்தனை ?

நாம் தமிழர் கட்சியாவது நாம் தமிழர் என்றுதான் பெயர் வைத்துக்கொண்டுள்ளது. ஆனால் திருமுருகன் காந்தி “மே 17” என்று பெயர் வைத்துக்கொண்டு தமிழை, தமிழரை இழிவு படுத்தியே வாழ்ந்த பெரியார் ஈ.வெ.இராமசாமி புகழ் பாடிக்கொண்டிருக்கிறார்.

தமிழ், தமிழர், தமிழ்த் தேசியம் என்று நாம் தமிழர் கட்சி ஒரு அரசியல் இயக்கத்தைத் தொடங்கி அது இன்று 36 லட்சம் பேரின் வாக்குகளைப் பெற்று இந்திய அரசின் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மீண்டும் மீண்டும் களத்தில் நிற்கிறது.

பெ. மணியரசன் தலைமையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தொடர்ந்து தமிழ், தமிழர், தமிழ்த் தேசியம் என்று சமரசமில்லாமல் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

அவர்கள் கூட மே 17, ஜூன் 34 என்றெல்லாம் பெயர் வைத்துக்கொள்ளவில்லை.

ஆனால் அவர்கள் உண்மையான தமிழ்த் தேசியத்திற்காகக் களமாடுகிறார்கள்.

ஆனால், திருமுருகன் காந்தி ஊழல் மலிந்த அறிவாயாலத்தை விட்டும், யுனெசுகோ பெரியார் என்று பொய்ப் புத்தகம் போடும் பெரியார் திடல் சுற்றுச்சுவரை விட்டும் வெளியே வராமல் உலகிலேயே இல்லாத, இயற்கைக்கு மாறான ஒரு திராவிட “தமிழ்த் தேசியத்தை” கற்பனையாக உருவாக்கிக் கொண்டு உருட்டிக் கொண்டு திரும்பத் திரும்பத் தமிழர்களை ஏமாற்றி வருகிறார்.

தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி, மலம், சனியன் என்ற, “பெரியார் இராமசாமி இல்லாத தமிழ்த் தேசியமா” என்று உருட்டும் திருமுருகன் காந்திக்கு மே 17 என்று பெயர் வைக்க என்ன அருகதை இருக்கிறது ? வெட்கமாக இல்லை ? மானம் கெட்ட செயல் அல்லவா இது ?

“நாங்களே இங்கே அடிமைகளாக இருக்கிறோம். ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்” என்று ஈ*ழத் தமிழர் சார்பாக வந்து உதவி கேட்ட தந்தை செல்வநாயகம் ஐயாவிடம் மனசாட்சியே இல்லாமல் தெரிவித்த “பெரியார் இராமசாமி இல்லாத தமிழ்த் தேசியமா” என்று வெட்கமே இல்லாமல் கேட்கும் திருமுருகன் காந்திக்கு “மே 17” என்று பெயர் வைக்க யார் உரிமை கொடுத்தார்கள் ?

கருணாநிதியால் பாஜக – வாஜ்பாயி ஆதரவுடன் இந்திய அரசில் பங்கேற்க முடிகிறது, அமைச்சர் பொறுப்பு வாங்க முடிகிறது, காங்கிரஸ் கட்சியுடன் நிரந்தர கூட்டணி வைக்க முடிகிறது…..

மு.க. ஸ்டாலினால் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் சென்று இராமசாமி புகழ் பாட முடிகிறது, துபாய் சென்று முதலீடுகளை வாங்க முடிகிறது, ஈரான் நாட்டில் பேசி சமையல் எரிவாயு தரச் சொல்ல முடிகிறது, ஐநா சபை சென்று கடிதம் தர முடிகிறது,

ஆனாலும், பக்கத்து நாட்டில் 2009 ல் முள்ளிவாய்க்காலில் வைத்து ஒன்றரை லட்சம் பேரை இலங்கை இராணுவம் கொன்று குவித்த போது அது குறித்து இங்கே ஆட்சி ஆண்ட திமுக அரசுக்கு ஒன்றுமே தெரியவில்லை, அவர்கள் ஒன்றுமே அறிந்திருக்கவில்லை… ஒன்னும் தெரியாத பாப்பாவாகவே இருந்தனர்.

அட அட என்ன பரிதாபம்.

அங்கே போர் முடிந்தது, இயக்கம் அழிக்கப்பட்டது, மக்கள் கொ*ல்லப்பட்டார்கள் என்று தெரிந்தபிறகு மெரீனா கடற்கரைக்கு சென்று அரைநாள் படுத்து உண்ணாவிரதம் என்கிற பெயரில் ஒரு நாடகமாடி தமிழர்களிடையே ஒரு எழுச்சியும், போராட்டமும் நடைபெறாமல் பார்த்துக்கொண்ட கருணாநிதியின் திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் திருமுருகன் காந்திக்கு வெட்கம் என்று ஏதாவது இருக்கிறதா…மே 17 எனும் பெயரை வைக்க எந்த அருகதையாவது இருக்கிறதா ?

தமிழ் , தமிழர், தமிழ்த் தேசியம் என்பதற்காகப் பாடுபடும் சீமான் வீட்டிற்கு பணம் கொடுத்துக் கூட்டத்தை அழைத்துச் சென்று ஒப்பாரி வைத்த திருமுருகன் காந்திக்கு “மே 17” என்று பெயர் வைக்க கூசவில்லையா ? வெட்கமாக இல்லையா ?

தமிழ் எனும் பெயரில் பித்தலாட்ட நாடகம் ஆடும் மே 17 தமிழ் மொழிக்காக பட்ட பாடுகள் என்ன ?

திக, திமுக வின் தொங்கு சதையாக வாழும் திருமுருகன் காந்தி இத்தனை ஆண்டுகளில் தமிழின், தமிழர்களின் விடுதலைக்காக திமுக அரசிடம் முன்வைத்துப் பெற்ற தீர்வுகள் எதனை ?! அல்லது நடத்திய போராட்டங்கள் எத்தனை ?

தமிழில் எழுதுங்கள் என்று வலியுறுத்திய பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்களின் நிர்வாகிகள் மேகநாதன், சங்கர், தமிழ் ஆகிய மூன்று பேரைக் கைது செய்து 18 நாட்கள் சிறை வைத்தது திமுக அரசு…அதை எதிர்த்து ஒரு குரலாவது கொடுத்தாரா திருமுருகன் காந்தி ?

ஹிந்தித் திணிப்பை எதிர்த்து 1938 ம் ஆண்டு ஈழத்து சிவானந்தம் அடிகள் அழைப்பின் பேரில் வந்தவர்கள் தாளமுத்து, நடராசன். சிறையில் உயிர் துறந்தனர்.

1965 களில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள் ஒருபுறம். \

சரி..அந்தக் காலகட்டத்தில் அவர்கள் போராடி மொழிக்காக உயிர் நீத்தார்கள் என்பதில் ஒரு காரணம் இருக்கிறது. அவர்கள் மொழிப்போர் ஈகியர்கள்.

அதுவரை திமுக ஆட்சி இல்லை.

அதன்பிறகுதான் திமுக ஆட்சி அமைத்துவிட்டதே. அதன்பிறகு 7 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுகவால் இன்னமுமா ஹந்தித் திணிப்பைத் தவிர்க்க இயலவில்லை ? ஹிந்தி திணிக்கப்படாமல் செய்ய முடியவில்லை ?

அப்படியானால் அவர்கள் ஆட்சி செய்தார்களா ? இல்லை படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்களா ?

1965 க்குப் பிறகு 2026 வரை 7 முறை திமுக ஆட்சி செய்தும் 2026 ல் ஒருவர் அதுவும் இத்தனை நாள் இல்லாமல் தமிழ் வாழ்க, ஹிந்தி ஒழிக என்று கூறி ரயில் முன் விழுந்து சாகிறார் என்கிறார் என்றால் அது திமுகவுக்கு அவமானம் இல்லையா ?

ஹிந்தி எழுத்துக்களை அழிக்கிறேன் என்று திருமுருகன் காந்தி நடத்தியதே நாடகம்தான். அந்த நேரத்தில் ரயில் விபத்தில் இறந்துபோன ஒருவரை “மொழிப்போர் ஈகியர்” ஆக்கி மே 17 இயக்கத்திற்கு ஒரு பொய்யான புகழைப் பெற்றுத்தர செய்யும் திருமுருகன் காந்தியின் செயல் அருவறுக்கத்தக்கதா இல்லையா ?

திருமுருகன் காந்தியின் போராட்டம் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பா அல்லது தமிழ் மொழி பாதுகாப்பா ?

தமிழ் மொழிப் பாதுகாப்பு என்றால் தமிழ்நாடு அரசு சார்ந்த துறைகளிலும் தமிழை ஆதரித்துப் போராட வேண்டுமா இலையா ? தமிழ்நாடு அரசு எல்லா அரசு ஆணைகளும் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தும் இன்னமும் ஆங்கிலத்தில்தான் வருகிறதே…அதை ஒரு நாலாவது எதிர்த்தாரா திருமுகிருகன் காந்தி ?

தமிழ்க் கோயில்களில் இன்னமும் சமஸ்கிருதம் ஒலிக்கிறதே….அதை எதித்தாரா திருமுருகன் காந்தி ?

திருவண்ணாமலை தெலுங்கு மயமாகிறதே….அதை எதிர்த்தாரா திருமுருகன் காந்தி ?!

ரயில்வே துறை இந்திய அரசுடைய துறை. அந்த அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பிலேயே கோரிக்கை வைக்கவேண்டிய ஒரு செயலுக்கு எதற்காக கருப்பு சாயத்தை தூக்கிக்கொண்டு திருமுருகன் காந்தி ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டும் ?

தஞ்சாவூரில் எழுதப்பட்ட ஹிந்தி எழுத்துக்கு அப்படி ஒரு நடவடிக்கை முதலமைச்சரால் எடுக்கப்பட்டதே.

மேலும், ஈ*ழத்தில் உயிரிழந்த ஒன்றரை லட்சம் பேர் ஹிந்தி எழுத்தை அதுவும் இந்திய அரசின் ரயில் துறையின் அறிவிப்புப் பலகையில் ஹிந்தி எழுத்தை அழிக்கவா உயிர் இழந்தார்கள் ?!

எனவே, பெயர் ஒன்றை வைத்துக்கொண்டு செயல் வேறாக செய்துவ வரும் திருமுருகன் காந்தி தெளிவு பெற வேண்டும்.

அதற்கு, ஈ*ழத் தமிழர்களை இழிவு படுத்தும் மே 17 எனும் பெயரை திருமுருகன் காந்தி முதலில் மாற்ற வேண்டும்.

இனியும் ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றும் தொழிலையும் திருமுருகன் காந்தி கைவிட வேண்டும்.

சென்னை ரயில் நிலையம் ஒன்றில் ஹிந்தி எழுத்துக்களை அழிக்க திருமுருகன் காந்தியுடன் சென்ற சிவா திலீபன் என்பவர் விபத்தில் இறந்தார் என்பதுதான் ரயில்வே காவல்துறை பதிவு செய்துள்ள ஆவணம்.

எனவே….ரயில் விபத்தில் இறந்து போனவரையெல்லாம் மொழிப்போர் ஈகியர் பட்டியலில் சேர்த்தும் திராவிட முகமூடிகளின் ஏமாற்று வேலைகளுக்குத் தமிழர்கள் அனுமதி அளித்தல் கூடாது.

spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...