சிந்திப்போம் தமிழர்களே !
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
கல்வெட்டுகளிலும், செப்புப் பட்டயங்களிலும் மறையர், மறையோர், பறையர், பறையோன் என்று இடம்பெற்றுள்ள பறையர், மறையர், சாம்பவர் என்போர் தமிழரினத்தின் பழம்பெரும் பெருமைக்குரிய போற்றுதலுக்குரிய பெருங்குடி மக்கள் ஆவர்.
பறையர் பெருங்குடி மக்கள் பல்திறன் (Multi Talented and Skilled) வாய்ந்தவர்கள் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. சுமார் 342 விதமான தொழில்களைச் செய்தவர்கள் பறையர் பெருங்குடி மக்கள்.
தொழில் ரீதியான பிரிவு மக்களே பிற்காலத்தில் சாதிகளாக மாற்றப்பட்டு அதில் வர்ணாசிரமம் புகுந்து ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கியது. ஆனால் அதற்கு முன்பு எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாத சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்துள்ளது.
அந்த வகையில் பறையர் உட்பிரிவுகள் 342 பிரிவுகள் இருந்ததாக 1891 ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் சுமார் 7 கோடி மக்கள் தொகையில் சுமார் 1 கோடிப்பேர் பறையர் பெருங்குடி மக்கள்.
பறையர் பெருங்குடி மக்களில் கல்வி அறிவு பெற்றவர்கள் இருந்தனர் என்பதைப் பாண்டியர் கால கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.
“இராஜ ராஜப் பெரும்பறையன்” என்று தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் அருண்மொழிவர்மன் இராஜ ராஜ சோழப் பெருமன்னரால் பட்டம் தரப்பட்டு கல்வெட்டில் பொறிக்கப்பட்ட பெருமையுடைய பெருங்குடி மக்கள் பறையர் மக்கள்.
சதுர்வேதி மங்கலம் என்பது ஏதோ பார்ப்பனர் / பிராமணர்களுக்கு மட்டும்தான் எனும் தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. சதுர்வேதி மங்கலத்தில் பறையர்களும் வசித்துள்ளனர்.
தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 7 எண் 794 ல், ஜெயங்கொண்ட சோழ சதுர்வேதிமங்கலத்து தென்பிடாகை மணற்க்குடியிலிருக்கும் ஊர்ப்பறையன் மண்டை சோமனான ஏழிசைமோகப்படைச்சன் என்பவர் கோயில் ஒன்றுக்குக் கொடை அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயிலுக்குக் கொடை அளிக்கும் நிலையில் வளமாக வாழ்ந்த பெருங்குடி மக்கள் பறையர் பெருங்குடி மக்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
பறைச்சேரியும் கம்மாணங்சேரியும் ஊரின் நடுபட்ட குளமும் புலத்திற்குளமுங்கரையும் இவ்வூர்திருவடிகள் என்ற கல்வெட்டுத் தகவலின்படி கம்மாளர், பறையர் ஆகியோர் குடியிருப்புகள் ஊரின் நடுவே இருந்ததும் தெரியவருகிறது. இதேபோல பார்ப்பனச் சேரியும் இருந்துள்ளது. ஆக, “சேரி” எனும் சொல் “குடியிருப்பு” எனும் பொருளில் வழங்கப்பட்டு வந்துள்ளது தெரியவருகிறது.
தமிழர் வரலாற்றின் தரவுகளின்படி பறையர்கள் நாடாளும் சிற்றரசர்களாகவும் இருந்துள்ளனர்.
இன்றைய கேரளாவில் உள்ள பறூர் என்றழைக்கப்படும் பறையூரில் வசித்த மக்கள் பறையர்கள் எனவும் அவர்களின் அரசன் தாந்திரீகத்தை நன்குணர்ந்தவர் என்றும், நம்பூதிரிகள் ஒரு போட்டியில் பறையூர் தலைவனை வீழ்த்தி பறையூருக்கு அரசன் ஆனதாக நாட்டார் கதை வழக்கொன்று உள்ளது.
சிலப்பதிகாரத்திலும் ‘பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்’ என்ற பாடல் வரி வருகின்றது, அந்த சாக்கையன் கூத்து இன்றுவரை கேரளாவில் “பறையன் துள்ளல்” என்ற பெயரில் ஆடப்பட்டு வருகின்றது.
இலங்கையில் இருந்த “அடங்காப்பதத்தில்” நான்கு அரசுகள் இருந்தன அதில் கணுக்கேணியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள் “வில்லிகுலப்பறையர்கள்” எனவும், இவர்கள் ஆதிக்குடிகள் எனவும், யாருக்கும் அடங்காதவர்களாக இருந்ததனால் அந்த பகுதிக்கு அடங்காப்பதம் என்று பெயர் வந்ததாகவும் வையாப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது.
சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பட்டுச்சுரத்திற்கும் கும்பகோணத்திற்கும் நடுவே இருந்த சோழ மாளிகையைத் தலைமையிடமாகக் கொண்டு நந்தன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். பிறகு மறவர்களால் நந்தனும் அவனது ஆட்சியும் அழிக்கப்பட்டது, அதன் பிறகு வந்த நாயக்கர் ஆட்சியில் விளாரியில் இருந்த நந்தன் கோட்டையும் அழிக்கப்பட்டது.
பறையர்களில் நெசவு தொழில் செய்தவர்கள் கோலியர்கள் ஆவார்கள். இவர்கள் நெசவுப்பறையர் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் இலங்கையில் சாலியர் என்று அறியப்படுகின்றனர்.
பறையர்களைப்பற்றிய நான்கு கல்வெட்டுக்கள் அவர்கள் சூத்திர ராயர்கள் என்று குறிப்பிடுகின்றது. அவற்றில் ஒன்று “மன்றாடி பூசகரி லரைசன் பறையனான பொய்யாத் தமிழ்நம்பி” என்று குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டுக்களின் மூலம் பரையர்கள் பிரம்ம சூத்திரம் உட்பட சூத்திரங்கள் அறிந்த சூத்திர ராயர்கள்என்பதும் மேலும் இவர்கள் பூசகர்களாக இருந்துள்ளனர் என்பதும் தெளிவாகின்றது.
பறையன் அல்லது பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார்.
தென் இந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலில் கிளைட்டன் என்பவர் பிராமண பெண் ஒருவர் பறையரின் கோவிலுக்கு சென்று தன் பிள்ளையை குணப்படுத்த வேண்டியதாகவும் அங்கு பறையன் மந்திரங்கள் சொல்லியதாகவும் குறிப்பிடுகின்றார். அயோத்தி தாச பண்டிதர் போன்றோர் சித்த மருத்துவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதது. இதன் மூலம் பறையர்கள் மருத்துவம் பார்த்து வந்தனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலய தல வரலாறு காவற் பறையனைப்பற்றி குறிப்பிடுகின்றது. சங்க நயினார் ஆலயம் கட்டுவதற்க்கு முன்பு அங்கு காவற் பறையன் என்பவன் புன்செய் நிலத்தை பாதுகாத்து வந்த வேளையில் ஒரு புற்றை இடிக்கையில் அதில் இருந்து லிங்கமும் பாம்பும் வந்ததாகவும், இச்செய்தியை மணலூரில் ஆட்சி செய்து வந்த உக்கிரப்பாண்டியனிடம் சொல்ல உக்கிரப் பாண்டியன் இந்த ஆலயத்தை கட்டுகின்றார். காவற்பறையனை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தில் காவல் பறையனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
“வடபரிசார நாட்டுக் கொற்ற மங்கலத்திலிருக்கும் வெள்ளாழன் பையரில் பறையன் பறையனேன்” என்றும், “வடபரிசார நாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பையயரில் சடையன் நேரியான் பறையனேன்” என்றும், “வடபரிசார நாட்டிலிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன்” என்றும் கோயம்பத்தூர் பகுதியைச்சேர்ந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன, இதன் மூலம் பரையர்கள் வெள்ளாளர்களாகவும், காமிண்டனாகவும்(கவுண்டர்) இருந்துள்ளமையை அறிந் கொள்ளலாம்..
மடிவலை, வாளை வலை, சாளை வலை, சணவலை, போன்ற வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களுக்கு ஒரு நபருக்கு ஒரு பணம் என்றும், அம்மீனை வாங்கி விற்க்கும் வியாபாரியான சாம்பானுக்கு ஒரு பணம் என்றும் வரி வசூலிக்கப்படுவதாக இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனில் 15ஆம் நூற்றாண்டில் கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீனை விற்பனை செய்யும் வியாபாரியாக கன்னியாகுமரி சாம்பவர்கள் இருந்துள்ளனர்.
குதிரைக்கிப் புல்லிடும் பறையர் என்று சோழர்காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன
உழுதொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உழப்பறையர்
பறையர்கள் நிலங்களுக்கு உரிமையாளராக இருந்ததற்கும் கோவில்களுக்குத் தானம் வழங்கும் அளவுக்கு பணம் படைத்தவராக இருந்தமைக்கும் சிலசான்றுகள் உள்ளன.
கோவில்களுக்கு நிலங்கள் மட்டுமின்றி நந்தா விளக்கெரிக்க கால்நடைகளைத் தானமாகவும் வழங்கியுள்ளனர். திருமானிக்குழிஆளுடையார் கோவில் பெரிய நாச்சியாருக்கு நந்தா விளக்கேற்ற ஊர்ப்பறையன் மண்டை கோமான் என்பவர் பால் எருமை ஒன்றைஅதன் கன்றுடன் குலோத்துங்க சோழக்கோன் என்ற மன்றாடியிடம் வழங்கியதை மூன்றாம் ராஜராஜனின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று (தெ.இ.க. 7,க.எ.794) குறிப்பிடுகிறது.
விக்கிரம சோழ தேவன் காலத்திய (1292–93) கல்வெட்டொன்றில், வெள்ளாட்டி பூசகரான பறையன் ஆளுடை நாச்சி என்பவனும் அவருடைய சிறிய தாயாரும் சேர்ந்து உடுமலைப்பேட்டை வட்டம் சோழமாதேவி நல்லூர் ஊரிலுள்ள குலசேகர சுவாமி கோவில்மண்டபத்திற்கு திருநிலைக்கால் இரண்டும் படியிரண்டும் செய்வித்துள்ளார் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. (தெ.இ.க. 26,க.எ. 253)
1881-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “CENSUS OF BRITISH INDIA” என்ற நூலில் “வேட்டுவ பறையன்”, “திகிழு பறையன்”, “மொகச பறையன்”, “குடிமி பறையன்”, “அத்வைத பறையன்” உட்பட “தமிழ், தெலுங்கு, மலையாளம் பேசிய” 83 பரையர் உட்பிரிவுகளை குறிப்பிடுகின்றது.
- அச்சக்காசினியூர் பறையன்
- அத்வைத பறையன்
- அய்யா பறையன்
- அழக காட்டு பறையன்
- அம்மக்கார பறையன்
- அங்கல பறையன்
- அங்கையன் பறையன்
- பூபு பறையன்
- சுண்ணாம்பு பறையன்
- தேசாதி பறையன்
- இசை பறையன்
- ககிமல பறையன்
- களத்து பறையன்
- கிழகத்து பறையன்
- கிழக்கத்தி பறையன்
- கீர்த்திர பறையன்
- கொடக பறையன்
- கெங்க பறையன்
- கொடிக்கார பறையன்
- கொரச பறையன்
- குடிகட்டு பறையன்
- குடிமி பறையன்
- குளத்தூர் பறையன்
- மகு மடி பறையன்
- மா பறையன்
- மரவேதி பறையன்
- மிங்க பறையன்
- மொகச பறையன்
- முங்கநாட்டு பறையன்
- நர்மயக்க பறையன்
- நெசவுக்கார பறையன்
- பச்சவன் பறையன்
- பஞ்சி பறையன்
- பரமலை பறையன்
- பறையன்
- பறையக்காரன்
- பறையாண்டி
- பசதவை பறையன்
- பெருசிக பறையன்
- பொய்கார பறையன்
- பொறக பறையன்
- பொக்கி பறையன் கூலார்
- பிரட்டுக்கார பறையன்
- ரெகு பறையன்
- சம்மல பறையன்
- சர்க்கார் பறையன்
- செம்மண் பறையன்
- சங்கூதி பறையன்
- சேரி பறையன்
- சிதிகரி பறையன்
- சுடு பறையன்
- தங்கமன் கோல பறையன்
- தங்கம் பறையன்
- தங்கினிபத்த பறையன்
- தட்டுகட்டு பறையன்
- தென்கலார் பறையன்
- தெவசி பறையன்
- தங்கலால பறையன்
- தரமாகிப் பறையன்
- தாயம்பட்டு பறையன்
- தீயன் பறையன்
- தோப்பறையன்
- தொப்பக்குளம் பறையன்
- தொவந்தி பறையன்
- திகிழு பறையன்
- உழு பறையன்
- வைப்பிலி பறையன்
- வலகரதி பறையன்
- உறுமிக்கார பறையன்
- உருயாதிததம் பறையன்
- வலங்கநாட்டு பறையன்
- வானு பறையன்
- வேட்டுவ பறையன்
- விலழ பறையன்
- உடும பறையன்
தெலுங்கு பேசிய பறையர்கள்
- முகத பறையன்
- புள்ளி பறையன்
- வடுக பறையன்
மலையாளம் பேசிய பறையர்கள்
- ஏட்டு பறையன்
- மதராஸி பறையன்
- முறம்குத்தி பறையன்
- பறையாண்டி பண்டாரம்
- வர பறையன்
போர்க்களத்தில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்படும் நிலம் உதிரப்பட்டிஅல்லது இரத்தக்காணிக்கை எனப்படும். ஊரின் நன்மைக்காக வேறு வகையில் உயிர் துறந்தவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும்நிலமும் உதிரப்பட்டி என்றே பெயர் பெற்றது.
திருமய்யம் வட்டம் தேவமலைக் குடபோகக் கோவிலுக்கு இடதுபுறம் பாறையில் உள்ள கல்வெட்டு மலையாலங்குடி ஊர் பெரியான்பேரையூர் பறையன் மகள் நாடியாருக்கு உதிரப்பட்டியாக மூன்று மா நிலம் வழங்கியதைக் குறிப்பிடுகிறது.
தகவல்கள் நன்றி : இணையதளப் பக்கங்கள், பறையர்சாமபவர் இணையதளம் மாறும் ஆய்வு நூல்கள்
வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் பத்திரிகை ஊடகவியலாளர், ஆசிரியர் : தமிழ் ஊடகம், நிறுவனர் : தமிழியல் நடுவம். [email protected]

