HomeIndiaஈ*ழத் தமிழர்களை கொன்ற*ழித்த...

ஈ*ழத் தமிழர்களை கொன்ற*ழித்த காங்கிரசைத் தமிழ்நாட்டில் காலூன்ற வைக்கும் நடிகர் விஜய் ! ராகுலின் வருகைக்குப் பிறகு விஜயின் பேச்சில் மாற்றம் !

நடிகர் விஜய் முகமூடியில் தமிழ் நாட்டில்

ஊடுருவும் காங்கிரஸ் : பின்னணியில் ராகுல் காந்தி !

மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்த்த ராகுல் காந்தி

ராகுலின் வருகைக்குப் பிறகு விஜயின் பேச்சில் மாற்றம் !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்

நடிகர் விஜய் “கமல்ஹாசன் 2.0” என்று நாம் நமது தமிழ் ஊடகத்திலேயே குறிப்பிட்டிருந்தோம்.

காரணம் இன்றைய விஜய் போலவே கமல்ஹாசன் அன்று தனித்து நின்று திமுகவை கடுமையாக எதிர்த்துப் பரப்புரை செய்தார். கலைஞர் கருணாநிதி கொடுத்த தொலைக்காட்சி பெட்டியை உடைப்பது போல “ஸ்டண்ட்” எல்லாம் செய்தார்.

இதன்காரணமாக திமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்துத் தாம் எடுத்து அந்த வாக்குகள் நாம் தமிழருக்கோ, அதிமுகாவுக்கோ செல்லாமல் தடுத்தார்.

இதற்காகத்தான் அவர் யூ-டர்ன் எல்லாம் போட்டு டிவி பெட்டியை எல்லாம் உடைத்தார் என்பது பிறகுதான் புரிந்தது.

திமுகவுக்கு எதிராக அப்படி ஆவேசமாகப் பேசி மக்கள் முன்னிலையில் நடித்து அந்தத் தேர்தலை சந்தித்தாலும் அவர் இறுதியில் தோல்வி அடைந்தார்.

அதன்பிறகு அவரது உழைப்பைப் பாராட்டும் விதமாக அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு கொடுத்து அவரது தரை நடிப்புக்கு ஊதியம் கொடுத்தது திமுக.

எந்த திமுகவை எதிர்த்து டிவி பெட்டியை எல்லாம் உடைத்தாரோ அதே திமுகவுக்கு 2026 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டு அதே கோவை தெற்கு தொகுதியில் பரப்புரை செய்கிறார் உலக நாயகன்.

ஆக, கமல்ஹாசன் தரையிலும் சிறப்பாக நடிக்கும் “கலைஞன்” என்பது நிரூபணம் ஆனது.

ஆஸ்கர் விருது கிடைக்காவிட்டால் என்ன அறிவாலய விருது கிடைத்துவிட்டதே என்று பெருமையோடு வாழ்கிறார் கமல்ஹாசன்.

இப்படிப்பட்ட நிலையில் 2026 தேர்தலில் கமல்ஹாசனைப் போலவே திமுகவை மட்டுமே அதிகம் எதிர்த்துப் பரப்புரை செய்து வருகிறார் நடிகர் விஜய்.

தமிழ்நாட்டை அதிமுக, திமுக என்று மாறி மாறி ஆட்சி செய்தபோதும், அக்கட்சிக்கு பாஜக, காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக என பல காட்சிகள் கூட்டாளிகளாக இருந்தும் வந்தபோதும், திமுகவை மட்டுமே அதிலும் மு.க.ஸ்டாலினை மட்டுமே குறிப்பிட்டு பேசி ஒரு செயற்கையான போலியான எதிர்ப்பை காட்டி வருகிறார் விஜய்.

இந்தத் திமுக போலி எதிர்ப்பில் கமல்ஹாசனின் நடிப்பை விஞ்சும் அளவுக்கு நடிகர் விஜயின் நடிப்பு தரையில், மேடையில், பரப்புரை வாகனத்தில் களை கட்டுகிறது.

ஆனால் கமல் போல அல்லாமல் விஜயின் “இயக்குநர்கள்” அறிவாயாலய இயக்குநர்கள் மட்டுமல்ல என்பதுதான் விஜய் கதையில் ஒரு ட்விஸ்ட்.

தமிழ்நாட்டின் மாநில சுயாட்சியைப் பறிப்பதிலும், மாநிலத்திற்கு எதிரான திட்டங்களைத் திணிப்பதிலும், தமிழர்களின் குரலை நசுக்குவதிலும் பாஜகவுக்கும் – காங்கிரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவான ஈ*ழத் தமிழர்களைக் கொன்ற*ழித்த காங்கிரஸ் கட்சியை எந்த இடத்திலும் நடிகர் விஜய் மறந்தும்கூட விமர்சனம் செய்தது அல்ல. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டுக்குச் செய்த எந்த துரோகம் குறித்தும் விஜய் மூச்சுக் கூட விடுவதில்லை. காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் என்பது இமாயல ஊழல் என்று எந்த இடத்திலும் விஜய் மூச்சுக்கூட விடுவதில்லை.

சீமான், காங்கிரஸ்-பாஜக-அதிமுக-திமுக என எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்கிறார். அது தெளிவான, உறுதியான நிலைப்பாடு.

ஆனால் விஜய் காங்கிரஸ் கட்சியை மட்டும் எதிர்ப்பதே இல்லை. மாறாக காங்கிரஸ் கட்சியின் ஊதுகுழலாக செயல்படுகிறார்.

ஊழல் என்றாலே அது காங்கிரஸ்தான் என்று பெயர்பெற்ற கட்சியை நேரடியாகவே ஆதரிக்கிறார்.

தமது தவெக கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதற்குத் தடையாக இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களை திமுகவுக்கு விலை போனவர்கள் என்றே பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டவர்கள் விஜயுடன் கூட்டு என்பதாகவே வெளிப்படையாக செயல்பட்டனர்.

இதில், காங்கிரஸ் காட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கடந்த நான்கு நாளைக்கு முன்புகூட இளையபாரதம் எனும் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் திமுக, ஸ்டாலின், உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்கிறார்.

கூட்டணியில் இருந்து கொண்டு அதுவும் தேர்தல் நேரத்தில் திமுகவை முழுவதும் தாக்கிப் பேசுவது திமுக-காங்கிரஸ் இடையேயான சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

தேர்தல் பரப்புரைக்கு புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி மு.க.ஸ்டாலினை சந்திக்கவே இல்லை.

புதுச்சேரியில் திமுக பெயரையோ, ஸ்டாலின் பெயரையோ உச்சரிக்கவேயில்லை.

தமிழ்நாட்டுக்கு வந்த ராகுல் பரப்புரையின்போது ஸ்டாலின், திமுகவைப் பெரிதாக புகழ்ந்து பேசவே இல்லை.

ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசியதை வேண்டுமென்றே தப்பும் தவறுமாக மொழி பெயர்த்து பொய் பேசுகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை. எங்கே மு.க.ஸ்டாலின் கோவித்துக்கொள்வாரோ என்று எண்ணினாரோ தெரியவில்லை.

முன்னதாக இந்தியா கூட்டணியில் உள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் மறைமுக கூட்டு வைத்துள்ளதாகப் பகிரங்கமாகக்” குற்றம் சாட்டினார்.

இதற்குப் பின்னணியில் ராகுல் இருக்கிறார் என்று நாம் ஏற்கனவே குறிப்ப்பிட்டிருந்தோம்.

இதை நேற்று 21 ம் தேதி தமது உரையில் உறுதி செய்தார் தவெக தலைவர் விஜய். ஸ்டாலினுக்கும் பாஜகவுக்கும் இரகசிய உறவு உள்ளதாகத் தாம் ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே சொன்னதாகவும், அது இன்று இந்தியா முழுவதும் எதிரொலிப்பதாகவும் விஜய் கூறினார்.

ஆக, திமுவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி, நேரடியாக விஜயை ஆதரிக்கிறது அல்லது பின்னின்று இயக்குகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

அதிமுகவை வைத்து பாஜக தமிழ்நாட்டில் வளரும் நிலையில் திமுகவை வைத்து காங்கிரஸ் வளர முடியாத நிலை. எனவே விஜயின் முதுகில் ஏறி இங்கே காலூன்ற நினைக்கிறது காங்கிரஸ் என்பதும் தெளிவாகிறது.

அடுத்து வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜயுடன் கூட்டணி வைத்துவிட்டது காங்கிரஸ் என்பது ராகுல் – விஜய் பேச்சுக்களில் எதிரொலிக்கிறது

தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்த காங்கிரஸ் கட்சியை விஜய் மூலமாக தமிழ்நாட்டில் காலூன்ற வைப்பதில் இஸ்ரேலின் மொஸாட் உளவுப்பிரிவு பின்னணியில் இருக்கலாம் என்கிறார்கள் பன்னாட்டு அரசியல் அறிந்தவர்கள்.

ஈழப்போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அள்ளிகொடுத்த நிலையில் 500 ரூபாய் கிள்ளிகொடுத்த விஜய் இதுவரை உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கான தீர்வு குறித்தோ, இலங்கை மீதான இனப்படுகொ*லை, மற்றும் போர்க்குற்றங்கள் குறித்தோ வாய் திறந்தது உண்டா. பொது வாக்கெடுப்புக்கு குரல் கொடுத்திருக்கிறாரா ?

இதிலிருந்தே விஜயின் உண்மை முகத்தை நாம் உணரமுடியும்.

விஜய் ஒரு யூத ஜியோனிஸ ஆதரவாளர் என்பதை அவர் அந்தப் பிரமிட் மற்றும் ஒற்றைக்கண் குறியிடுகளைத் தமது படங்களில் சுமந்து வந்தபோதே உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை திரிஷா ஏற்கனவே இஸ்ரேலின் ஜியோனிஸ மொஸாட் தொடர்பில் இருப்பவர் என்று கூறப்படுகிறது.

ஆக, விஜய் எனும் மாறுவேடத்தில் காலூன்ற முகனைகிறது காங்கிரஸ். தமிழர் இனத்தை அழித்து ஒழித்த காங்கிரஸ் வஞ்சகத்துடன் தமிழர்களை அணுகுகிறது.

தமிழர்களே விழிப்போடு இருங்கள் !

காலம் நமக்கு கையளித்த அரிய வாய்ப்பு இந்த 2026 தேர்தல்.

spot_img

Continue reading

பங்களா வீட்டு பூனைக்குட்டிகளும் திமுக...

"விடுதலை இயக்கத்தினரை வைத்து என்னைக் கொ*லை செய்ய வைகோ சதி செய்தார்" என்று குற்றம் சாட்டி திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். அவருக்காக சுமார் ஒன்பது பேர் தீக்குளித்து உயிரை மாய்த்தனர். மு.க.ஸ்டாலினுக்கு பட்டம் சூட்ட வசதியாக தம்மை கருணாநிதி வெளியேற்றியதாக கர்ச்சனை செய்தார் வைகோ. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குடும்பத்தை மோளம் அடிப்பவர்கள் என்று பொது...

“கூட்டணி சேருங்க சீமான் !” : கிட்னி எடுக்க விடுக்கப்படும் அழைப்புகள் !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் சீமான் மட்டும் கூட்டணி சேர்ந்திருந்தால் எதிர்க்கட்சியாக வந்திருக்கலாம், ஆளும்கட்சியாக வந்திருக்கலாம், அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருக்கலாம், ஆப்பிரிக்க அதிபர் ஆகியிருக்கலாம், ஐநா தலைவர் ஆகியிருக்கலாம் என்றெல்லாம் தொடர்ந்து அறிவுரைகள் அள்ளித் தெளிக்கப்படுவதை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பார்க்க முடிகிறது. உண்மையில் சீமான் கூட்டணி சேர்ந்திருந்தால் இந்நேரம் பிரேமலதாவுக்கோ செந்தில் பாலாஜிக்கோ வாக்கு சேகரிக்கும்...

கட்டத் துரைகளுக்குக் கட்டம் எப்படி இருக்கு ?!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்து பல கருத்துக்கணிப்புகள் வெளியாகிய நிலையில் சோதிட ரீதியாக "கட்டத் துரைகளுக்குக் கட்டம் எப்படி இருக்கு ?" என்கிற கேள்வியை சோதிடத்தில் பட்டம் பெற்ற அனுபவம் வாய்ந்த சோதிடர் சுதி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டோம் ! இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும் எனவே சுருக்கமாக சொல்லுங்கள் என்றோம். சரி என்றவர் அனுப்பிய...