தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்து பல கருத்துக்கணிப்புகள் வெளியாகிய நிலையில் சோதிட ரீதியாக “கட்டத் துரைகளுக்குக் கட்டம் எப்படி இருக்கு ?” என்கிற கேள்வியை சோதிடத்தில் பட்டம் பெற்ற அனுபவம் வாய்ந்த சோதிடர் சுதி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டோம் !
இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும் எனவே சுருக்கமாக சொல்லுங்கள் என்றோம்.
சரி என்றவர் அனுப்பிய சோதிடக் கட்டக் கணிப்பு !
நடிகர் விஜய்
விஜயின் இராசிக் கட்டப்படி, எட்டாம் இட அதிபதி சனி 9 ம் இடத்தில் உள்ளது. மேலும் வியாழன் 12 ம் இடத்தில் மறைந்துவிட்டது அவருக்கு இந்தத் தேர்தலில் பின்னடைவையே தரும். “கவுரவத்திற்கு சிதைவு” ஏற்படும் காலகட்டம். மேலும், அவருக்கு ஆட்சி அதிகாரத்தில் அமரும் வகையில் சூரியன், குரு, செவ்வாய் ஆகிய கோள்களின் பலம் சரியில்லை. ஆனால் சினிமாத்துறைக்கு ஏற்ற வகையில் சுக்கிரன் வலுவாக இருக்கிறது. எனவே அவருக்கு அரசியலைவிட சினிமாத் துறைதான் நிரந்தரம்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் இராசிக் கட்ட அடிப்படையில் அவருக்கு இப்போது அட்டம சனி. ஜென்மத்தில் கேது. காலமும் நேரமும் சாதகமாக இல்லை. அவமானப் படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமிகு கண்டகச் சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதாவது ஏழாம் இடத்தில் சனி. புதன் திசையில் சுக்கிர புத்தி, அவருக்கு சுக்கிரன் 11 ஆம் இடத்தில் உச்சமாக இருக்கிறார். கோச்சாரத்தில் ஆறாம் இடத்தில் இருக்கும் ராகு எதிரிகளை சமாளிக்கும் துணிச்சலை தருவார். மறைமுக எதிரிகள் தொல்லை இருந்தாலும், அவற்றையெல்லாம் முறியடித்து மீண்டும் அரியணை ஏறுவதற்கு எடப்பாடி அவர்களுக்கு காலம் சாதகமாக உள்ளது
என்று சோதிடர் தமது காலக்கணக்கு துணுக்குகளை அனுப்பியுள்ளார்.
மே 4 ம் தேதி பார்த்துவிடுவோம்.

