HomeIndia2026 சட்டமன்றத் தேர்தலில்...

2026 சட்டமன்றத் தேர்தலில் 121 முதல் 130 இடங்களில் அதிமுக வெற்றி பெறும் : மூத்த பத்திரிகை ஊடகவியலாளர் அமைப்புகள் நடத்திய கருத்துக்கணிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் 23 ம் தேதி நடைபெறுகிறது.

காட்சி ஊடகங்கள் பத்திரிகைகள் ஒருபுறம் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டாலும்கூட பெரும்பாலும் அவை ஒருபக்கச் சார்பாக இருப்பதாக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

இந்நிலையில் பக்கச்சார்பு இல்லாமல் செய்திகளை, கள நிலவரங்களை வெளியிடும் பத்திரிகை ஊடகங்கள், பத்திரிகை ஊடகவியலாளர்களின் கணிப்புகள் மக்களுக்கு அவசியமானதாக இருக்கின்றன.

அந்த வகையில் தமிழ் ஊடகம் குழுமம் வெளியிட்ட 2026 தேர்தல் கள ஆய்வு அறிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் ஊடகம் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர்கள் இது ஒருபக்கச் சார்பு இல்லாத உள்ளது உள்ளபடியான நிலவரத்தைக் காட்டும் அறிக்கை என்று பாராட்டுதல்களைத் தெரிவித்தனர். அதில் இருந்த ஒன்றிரண்டு ஐயங்களையும் சுட்டிக்காட்டித் தெளிவு பெற்றனர்.

அதேபோல, “சென்னை ப்ரெஸ் க்ளப்” அமைப்பை நடத்திவரும் பத்திரிகையாளர் விமலேஸ்வரன் தலைமையிலான CPRO – Current Political Research Organisation அரசியல் ஆய்வு அமைப்பு தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து மேற்கொண்ட கள ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில்,

அதிமுக 121 இடங்களில் வெற்றி பெறும் என்றும்

திமுக 109 இடங்களிலும்

தவெக 5 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

“ஸ்பைடர் மேன்” எனும் தலைப்பில் சுமார் ஆயிரம் பத்திரிகை ஊடகவியலாளர்களைக் கொண்ட 11 குழுக்களை நடத்திவரும் மூத்த பத்திரிகை ஊடகவியலாளர் சீனு என்கிற ஸ்ரீனிவாசன் தலைமையிலான குழுவினர் நடத்திய கருத்துக்கணிப்பில்,

அதிமுக 130 இடங்களிலும்

திமுக 90 இடங்களிலும்

தவெக 2 இடங்களிலும்

நாம் தமிழர் 1 இடத்திலும் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்பைடர் மேன் குழுவினரின் கணிப்புகள் ஒவ்வொரு தேர்தலிலும் துல்லியமான முடிவுகளை முன்கூட்டியே தந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

Continue reading

பங்களா வீட்டு பூனைக்குட்டிகளும் திமுக...

"விடுதலை இயக்கத்தினரை வைத்து என்னைக் கொ*லை செய்ய வைகோ சதி செய்தார்" என்று குற்றம் சாட்டி திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். அவருக்காக சுமார் ஒன்பது பேர் தீக்குளித்து உயிரை மாய்த்தனர். மு.க.ஸ்டாலினுக்கு பட்டம் சூட்ட வசதியாக தம்மை கருணாநிதி வெளியேற்றியதாக கர்ச்சனை செய்தார் வைகோ. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குடும்பத்தை மோளம் அடிப்பவர்கள் என்று பொது...

ஈ*ழத் தமிழர்களை கொன்ற*ழித்த காங்கிரசைத் தமிழ்நாட்டில் காலூன்ற வைக்கும் நடிகர் விஜய் ! ராகுலின் வருகைக்குப் பிறகு விஜயின் பேச்சில் மாற்றம் !

நடிகர் விஜய் முகமூடியில் தமிழ் நாட்டில் ஊடுருவும் காங்கிரஸ் : பின்னணியில் ராகுல் காந்தி ! மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்த்த ராகுல் காந்தி ராகுலின் வருகைக்குப் பிறகு விஜயின் பேச்சில் மாற்றம் ! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் நடிகர் விஜய் "கமல்ஹாசன் 2.0" என்று நாம் நமது தமிழ் ஊடகத்திலேயே குறிப்பிட்டிருந்தோம். காரணம் இன்றைய விஜய் போலவே கமல்ஹாசன் அன்று தனித்து...

“கூட்டணி சேருங்க சீமான் !” : கிட்னி எடுக்க விடுக்கப்படும் அழைப்புகள் !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் சீமான் மட்டும் கூட்டணி சேர்ந்திருந்தால் எதிர்க்கட்சியாக வந்திருக்கலாம், ஆளும்கட்சியாக வந்திருக்கலாம், அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருக்கலாம், ஆப்பிரிக்க அதிபர் ஆகியிருக்கலாம், ஐநா தலைவர் ஆகியிருக்கலாம் என்றெல்லாம் தொடர்ந்து அறிவுரைகள் அள்ளித் தெளிக்கப்படுவதை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பார்க்க முடிகிறது. உண்மையில் சீமான் கூட்டணி சேர்ந்திருந்தால் இந்நேரம் பிரேமலதாவுக்கோ செந்தில் பாலாஜிக்கோ வாக்கு சேகரிக்கும்...