HomeIndiaபங்களா வீட்டு பூனைக்குட்டிகளும்...

பங்களா வீட்டு பூனைக்குட்டிகளும் திமுக எனும் பெர்முடா முக்கோணமும்!

“விடுதலை இயக்கத்தினரை வைத்து என்னைக் கொ*லை செய்ய வைகோ சதி செய்தார்” என்று குற்றம் சாட்டி திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். அவருக்காக சுமார் ஒன்பது பேர் தீக்குளித்து உயிரை மாய்த்தனர். மு.க.ஸ்டாலினுக்கு பட்டம் சூட்ட வசதியாக தம்மை கருணாநிதி வெளியேற்றியதாக கர்ச்சனை செய்தார் வைகோ. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குடும்பத்தை மோளம் அடிப்பவர்கள் என்று பொது மேடையிலேயே விமர்சனம் செய்தார் வைகோ.

இதெல்லாம் ஒரு காலம்.

பிறகு திரும்பிப்பார்த்தால் “மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்காமல் ஓயமாட்டேன்” அதே சிங்கக்குரலில் கர்ச்சனை செய்துகொண்டு அறிவாலயத்தில் பூனைக்குட்டியாக உருமாறி நிற்கிறார் இப்போது.

திமுக என்கிற கட்சியை ஒழித்தே தீருவேன் என்று வசனம் பேசிய கமல்ஹாசன் அதே திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகி கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜிக்கு வெட்கமே இல்லாமல் வாக்கு கேட்டு பரப்புரை செய்கிறார் கமல்ஹாசன். உலகநாயகன் உலக்கை நாயகனாக மாறி அறிவாலய பூனைக்குட்டி ஆகிவிட்டார்.

முந்திரிக் காட்டில் வீரத்தோடு சுற்றித்திரிந்த “சிறுத்தை” இப்போது அறிவாலயத்தில் பூனைக்குட்டியாகிவிட்டது. தான் பெயர் சொன்ன போது எழுந்து கூட நிற்காமல் அவமானப்படுத்திய பிரேமலதாவுக்க்கு வேலு நாச்சியார் ரேஞ்சுக்கு புகழ் பாடிக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் சிறுத்தையாக சுற்றித்திரிந்த இன்றைய பூனைக்குட்டி ! பிரேமலதாவுக்கு வாக்கு கேட்டு பரப்புரை செய்யும் பேச்சாளர் ஆகிவிட்டது சிறுத்தை.

திமுகவை எதிர்த்துத் தொடங்கப்பட்ட விஜயகாந்தின் தேமுதிகவை திமுகவிடமே அடகு வைத்துவிட்டார் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா.

இப்படி திமுக குடும்பம் எனும் பெர்முடா முக்கோணத்திற்குள் நுழைந்தவர்கள் காணாமல் போவதில்லை அரண்மனை அடிமைகளாக உருமாறிப் போகிறார்கள் என்பதே வரலாறு !

ஆக……

spot_img

Continue reading

ஈ*ழத் தமிழர்களை கொன்ற*ழித்த காங்கிரசைத் தமிழ்நாட்டில் காலூன்ற வைக்கும் நடிகர் விஜய் ! ராகுலின் வருகைக்குப் பிறகு விஜயின் பேச்சில் மாற்றம் !

நடிகர் விஜய் முகமூடியில் தமிழ் நாட்டில் ஊடுருவும் காங்கிரஸ் : பின்னணியில் ராகுல் காந்தி ! மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்த்த ராகுல் காந்தி ராகுலின் வருகைக்குப் பிறகு விஜயின் பேச்சில் மாற்றம் ! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் நடிகர் விஜய் "கமல்ஹாசன் 2.0" என்று நாம் நமது தமிழ் ஊடகத்திலேயே குறிப்பிட்டிருந்தோம். காரணம் இன்றைய விஜய் போலவே கமல்ஹாசன் அன்று தனித்து...

“கூட்டணி சேருங்க சீமான் !” : கிட்னி எடுக்க விடுக்கப்படும் அழைப்புகள் !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் சீமான் மட்டும் கூட்டணி சேர்ந்திருந்தால் எதிர்க்கட்சியாக வந்திருக்கலாம், ஆளும்கட்சியாக வந்திருக்கலாம், அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருக்கலாம், ஆப்பிரிக்க அதிபர் ஆகியிருக்கலாம், ஐநா தலைவர் ஆகியிருக்கலாம் என்றெல்லாம் தொடர்ந்து அறிவுரைகள் அள்ளித் தெளிக்கப்படுவதை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பார்க்க முடிகிறது. உண்மையில் சீமான் கூட்டணி சேர்ந்திருந்தால் இந்நேரம் பிரேமலதாவுக்கோ செந்தில் பாலாஜிக்கோ வாக்கு சேகரிக்கும்...

கட்டத் துரைகளுக்குக் கட்டம் எப்படி இருக்கு ?!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்து பல கருத்துக்கணிப்புகள் வெளியாகிய நிலையில் சோதிட ரீதியாக "கட்டத் துரைகளுக்குக் கட்டம் எப்படி இருக்கு ?" என்கிற கேள்வியை சோதிடத்தில் பட்டம் பெற்ற அனுபவம் வாய்ந்த சோதிடர் சுதி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டோம் ! இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும் எனவே சுருக்கமாக சொல்லுங்கள் என்றோம். சரி என்றவர் அனுப்பிய...