HomeTamil Naduஇந்திய அரசின் "மேலாளர்"...

இந்திய அரசின் “மேலாளர்” ஆளுநர் இருக்கும் வரை யார் ஆட்சிக்கு வந்தும் எந்தப் பலனும் இல்லை !

இந்திய அரசின் “மேலாளர்” ஆளுநர் இருக்கும் வரை யார் ஆட்சிக்கு வந்தும் எந்தப் பலனும் இல்லை !

-தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்

TNTV தமிழ் ஊடகம் குழுமத்தின் தலைமை ஆசிரியர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்துக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் நேர்காணல் அளித்துள்ளார். அவரது நேர்காணல் காணொளிகளை TNTV Tamil Oodagam Youtube வலையொளித் தளத்தில் காணலாம்.

அவரது நேர்காணலின் சாராம்சம் இதோ,

“இந்தியாவின் அங்கமாக உள்ள மாநிலங்களில் இந்திய அரசின் மேலாளராக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வரையிலும் எந்த மாநிலமும் “முழுமையான சுயாட்சி” பெறுவது கடினம்.

காரணம், நீங்கள் சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடத்தி, 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் ஒரு முதன்மை அமைச்சரைத் தேர்ந்தெடுத்து, சட்டமன்றத்தில் மாநிலத்திற்காக எந்த ஒரு சட்டத்தை நீங்கள் இயற்ற எண்ணினாலும். உங்களால் சட்ட மசோதா மட்டுமே நிறைவேற்ற முடியுமே தவிர அது உண்மையில் சட்டமாக ஆகவேண்டுமானால் அதற்கு ஆளுநரின் ஒப்புதல், கையெழுத்து வேண்டும்.

ஆக, நீங்கள் 234 உறுப்பினர்கள் எத்தனை சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுத்தாலும் அவர் கையெழுத்துப் போடவில்லை என்றால் அது ஒருபோதும் சட்டமாகாது.

பிறகு எங்கே மாநில சுயாட்சி இருக்கிறது ?

இந்த முறை மாறவேண்டுமானால் இந்திய நாடாளுமன்றத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும். ஆனால் ஹிந்தி பேசும் 6 – 7 மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வரமாட்டார்கள்.

உத்திரபிரதேசத்தில் மட்டும் 24 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இப்படி வட மாநிலங்களில் சுமார் 50 கோடிக்கும் அதிகமான மக்களை இந்திய அரசு கைகளில் வைத்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் இவர்களே அதிக அளவு உறுப்பினர்களைக் கொண்டிருப்பார்கள். நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து வெறும் 39 இடங்களை வைத்துக்கொண்டு என்ன மாற்றம் கொண்டு வரமுடியும் ?!

தமிழர்கள் வெறும் எட்டுக் கோடிப் பேர்தான் தமிழ்நாட்டில் உள்ளோம். ஹிந்திக்கு ஆதரவாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் மட்டுமே 24 கோடிப்பேர்கள் உள்ளனர்.

எனவே, இங்கே மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆளுநர் எனும் இந்திய அரசின் மேலாளரின் ஒப்புதலின்றி ஆட்சி நடத்துவது கடினம்.

எனினும், அத்தகைய வரம்புக்கு உட்பட்ட மாநில ஆட்சியிலும் தமிழர் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசியத்தின் இலக்கே தவிர, அந்த ஆட்சி அதிகாரம் மட்டுமே தமிழர்களின் உரிமைகளை மீட்டுத்தராது.

மக்கள் திரள் போராட்டங்கள் மூலமாக மட்டுமே தமிழர்கள் தங்களுக்கான உரிமைகளை பெற்றெடுக்க முடியும்”.

இவ்வாறு பெ. மணியரசன் கூறியுள்ளார்.

-தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம், 6/6/26

spot_img

Continue reading

அறநிலையத்துறையில் சேகர் பாபு ஆடிய ஆடக் கூடாத ஆட்டம் ! 3,000 கிலோ தங்கம்; 4,000 கோயில் குடமுழுக்கு; குவிந்த தங்கக் கட்டிகள் !!

"தமிழ் ஊடகம் குழுமம்" சொன்னதை திமுக ஆய்வுக்குழு உறுதி செய்தது ! அறநிலையத்துறையில் சேகர் பாபு ஆடிய ஆடக் கூடாத ஆட்டம் ! 3,000 கிலோ தங்கம் ; 4,000 கோயில் குடமுழுக்கு ; குவிந்த தங்கக் கட்டிகள் நேர்மையான அதிகாரிகளைப் பந்தாடிய முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ! மீட்கப்பட்ட தமிழர் கோயில் இடங்களைத் தெலுங்கர்களுக்கு குத்தகை விட்ட...

தமிழ்த் தேசியத்திற்கு முதல் மரியாதை செலுத்திய பாரதிராஜாவுக்கு நாம் தமிழர் கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்திய சீமான் !

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிப்பயணத்தின்போது தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் கொடி போர்த்தி புகழ் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்த்திரையுலகின் தன்னிகரில்லாத கலைஞன் பாரதிராஜா. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ்த் தேசியத்தின்மீதும் அளவில்லாப் பற்றுக் கொண்டிருந்தவர். தமிழ்த்தேசிய விடுதலை பெறுவதற்கான 30 ஆண்டுகாலப் போராட்டம் நடத்திய மேதகு...

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் பிணையில் வெளிவரலாம் : இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகே

இது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்…! சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது. குறித்த...