HomeIndiaதமிழ் ஊடகம் -...

தமிழ் ஊடகம் – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 கள நிலவர ஆய்வு முடிவுகள் – நடந்ததும் மாறி நடந்ததும் !

தமிழ் ஊடகம் குழுமம் கடந்த ஏப்ரல் மதம் 14 ம் தேதியன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் (ப்ரெஸ் கிளப்) செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் கள நிலவர அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

2025 ஆகஸ்ட், 2026 ஜனவரி மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சுமார் 35 ஆயிரம் பேரிடம் 234 தொகுதிகளிலும் நடத்தப்பட்ட கேள்வி பதில் தரவுகள், ஆய்வறிஞர்கள், பத்திரிகையாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோரிடம் பேசி எடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் முடிவுகளை தமிழ் ஊடகம் வெளியிட்டது.

அவை தமிழ் ஊடகத்தின் தனிப்பட்ட கருத்துகள் அல்ல. பல்வேறு தரப்பினரிடம் எடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையிலானது.

எனினும் அவ்வாறு வெளியிட்ட கள நிலவர அறிக்கைத் தகவல்களுக்கும் நடைமுறையில் நடந்த நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கிறது தமிழ் ஊடகம்.

அறிக்கையில் தெரிவித்தவற்றுள் நடந்தவை :

திமுக மீண்டும் வர விருப்பமா ?! – எனும் கேள்வி

01. மு.க.ஸ்டாலினின் திமுக அரசு மீண்டும் வர விருப்பமில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டது நடந்துள்ளது. (இந்த அறிக்கை வெளிவரும் வரையிலும் 100 க்கு 99 பத்திரிகை ஊடகங்கள் திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது)

02. ஆட்சி மாற்றம் உறுதி என்று அறிக்கையில் கூறப்பட்டதும் அப்படியே நடந்துள்ளது

விஜய் யாருடைய வாக்குகளுக்கு எதிர்ப்பாக இருப்பார் ? – எனும் கேள்வி

விஜய் 70 விழுக்காடு திமுக வாக்குக்கும், 30 விழுக்காடு அதிமுக வாக்குகளுக்கும் சேதாரம் தருவார் என்று அறிக்கையில் கூறப்பட்டது நடந்தது.

வாக்கு விழுக்காடு என்பதை விட தொகுதிகள் அடிப்படையிலேயே 74 தொகுதிகளை தவெகவிடம் இழந்துள்ளது திமுக. 13 தொகுதிகளை தவெகவிடம் இழந்துள்ளது அதிமுக.

அறிக்கையில் தெரிவித்தவற்றுள் மாற்றி நடந்தவை :

01. விஜய் வாக்குகள் ரசிகர்கள் வாக்குகள் மட்டுமே என்ற கள நிலவர அறிக்கைக்கு மாற்றாக பொதுமக்கள் வாக்குகளும் அதிக அளவில் குவிந்தன (குழந்தைகள், மகன், மகள், பேரன், பேத்தி, மனைவி, சகோதரி கோரிக்கையை ஏற்று வாக்களித்த பெற்றோர் எண்ணிக்கை இதில் அதிகம். எனவே நாம் கருத்துக் கேட்டவர்கள் எவரும் இப்படி ஒரு கோணத்தை வெளிப்படுத்தவில்லை)

02. அதிமுக 150 இடங்கள் வரை பெறும் என்று நமது அறிக்கையில் அளித்ததற்கு மாறாக அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்றது. இதுவும் விஜய் ரசிகர்களின் குறிப்பாக குழந்தைகள், மகன், மகள், பேரன், பேத்தி, மனைவி, சகோதரி கோரிவிக்கையை நேற்று அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த வாக்குகள் கள நிலவரத்தில் வெளிப்படவில்லை).

03. நாம் தமிழர் 12 விழுக்காடுகளைப் பெறுவார்கள், 10 இடங்களில் வெல்ல வாய்ப்பு என்கிற அறிக்கைக்கு மாறாக அக்கட்சி சுமார் 15 லட்சம் வாக்குகளை இழந்துள்ளது. இதற்குக் காரணம், ஆட்சி மாற்றம் தேவை என்கிற உறுதியான முடிவெடுத்த மக்கள் விஜய்க்கு ஆதரவு அளித்ததே காரணம்.

அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழ் ஊடகம் இன்னும் துல்லியமாக மக்கள் கருத்துக்களை பிரதிபலிக்கும் ஆய்வு அறிக்கைகளை வெளியிட முயற்சிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தக் கள ஆய்வுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் தமிழ் ஊடகம் வாசகர்கள், நேயர்கள், பார்வையாளர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

நன்றி

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்

ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம் 07/05/2026

spot_img

Continue reading

சீமான் குறித்து அவதூறு பரப்புவோர் அனைவரின் ஒரே இலக்கு…மேதகு தலைவர், புலிக்கொடி, தமிழ்த் தேசியம் மூன்றையும் சீமான் கைவிடவேண்டும் என்பதே ! – என்றால் இவர்கள் யாருடைய கைக்கூலிகள் ?!

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது. கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு படம், கருத்துக்களை பகிராமல் இருந்திருந்தால் முகநூல் வருவாய் மாதம்தோறும் கணிசமான அளவு வந்திருக்கும். ஆனால் . கடந்த 16 ஆண்டுகளாக...

நாம் தமிழர் கட்சியின் தோல்விக்குக் காரணங்கள்…வாய்க்கு வந்ததை அள்ளிவிடும் சமூக ஊடகர்கள்!

01. சீமான் மக்களைத் திட்டிட்டார் அதனால் தோத்துப்போச்சு 02. திரள் நிதி வாங்கிட்டாங்க அதனால தோத்துப்போச்சு 03. சாட்டை துரைமுருகன் விஜய் குறித்து பேசியிருக்கக் கூடாது 04. பெரியாரை சீமான் பேசியிருக்க கூடாது அதனால் தோத்துப்போச்சு 05. பிராமண கடப்பாரைன்னு சொல்லிருக்கக் கூடாது அதனால தோத்துப்போச்சு 06. ஈ*ழத் தமிழர் நல்லதுக்கு ஒண்ணுமே செய்யலை அதனால தோத்துப்போச்சு 07. காளியம்மாளை வெளியேற்றி இருக்க...

சீமானும் நாம் தமிழரும் எதிர்த்த நாசகாரத் திட்டங்களின் அத்தனை கதவுகளையும் திறக்கப்போகிறார் விஜய் ?! விஜயை “இயக்கும்” பெரும் கார்பொரேட் நிறுவனங்களின் பேயாட்டம் !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் தமிழ்நாட்டின் மண், மரம், மாடு, காடு, கடல், ஏரி, வேளாண் நிலம், ஆறு, நதி காக்கத் தொடர் போராட்டம் நடத்தி சமரசம் இல்லாமல் குரல் கொடுத்து வந்தவர் சீமான். தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொரு தேர்தலிலும் இதற்காகவே தனியாகப்...