HomeIndiaசீமானும் நாம் தமிழரும்...

சீமானும் நாம் தமிழரும் எதிர்த்த நாசகாரத் திட்டங்களின் அத்தனை கதவுகளையும் திறக்கப்போகிறார் விஜய் ?! விஜயை “இயக்கும்” பெரும் கார்பொரேட் நிறுவனங்களின் பேயாட்டம் !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்

தமிழ்நாட்டின் மண், மரம், மாடு, காடு, கடல், ஏரி, வேளாண் நிலம், ஆறு, நதி காக்கத் தொடர் போராட்டம் நடத்தி சமரசம் இல்லாமல் குரல் கொடுத்து வந்தவர் சீமான்.

தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொரு தேர்தலிலும் இதற்காகவே தனியாகப் பெரும்பணத்தை ஒதுக்கி அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி செய்வார்கள்.

ஆனால், இந்த முறை விஜயின் ஒட்டுமொத்த கட்சி செயல்படுகளுக்கும், அரசியல் நகர்வுகளுக்கும் மொத்தமாக “நிதி” அளித்து பின்னாலிருந்து தவெகவை இயக்கியிருக்கிறார்கள் இந்தப் பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்கள்.

இவர்களின் பணம்தான் தண்ணீராக விஜய் வாய்க்கால் வழியாக கரை புரண்டு ஓடுகிறது.

தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியாமல் தத்தளித்த இந்தப் பெரும் கார்பொரேட் நிறுவனங்களே விஜயின் வெற்றிக்குப் பெருமளவில் உதவியிருக்கிறார்கள்.

இதன் காரணமாக அந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களின் வியாபார வணிகச் சந்தைக் கடையை பெரிய அளவில் திறக்கவிருக்கிறார்கள்.

ஏற்கனவே அதானியின் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது நாம் தமிழர்.

குறிப்பாக அப்பகுதியில் எளிய மக்களின் வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நாம் தமிழர் போராட்டங்களால் பெருமளவு தடைபட்டது.

ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை “சிறப்புத் திட்டமாக” அதிகார பூர்வமாக அனுமதித்தது.

இதன் காரணமாக நிலங்களை எளிதாகக் கையகப்படுத்த இயலும். மேலும் மிக விரைவாக அந்தத் திட்டம் நிறைவேறும்.

திமுக ஆட்சியிலும் திட்டங்களை சிரமப்பட்டே நிறைவேற்ற வேண்டியிருப்பதால் மாற்று அரசு ஒன்றை இந்தப் பெரு நிறுவனங்கள் – கார்பொரேட்டுகள் திட்டமிட்டனர்.

அவர்களின் தேர்வுதான் நடிகர் விஜய்.

இந்த கார்ப்பொரேட்டுகள் நிதி வழங்கும் பல மில்லியன் டாலர் மதிப்புடைய நிதியாளர்கள். இவர்களுக்குப் பின்னணியில் இந்திய அரசின் ஒரு “சக்தியும்” அதற்குப் பின்னணியில் இந்திய – இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் “சக்தியும்” அதன் பின்னணியில் ஜியோனிஸ்டுகளும் என ஒரு பெரிய வலைப் பின்னல் கூட்டமைப்பு உள்ளது. அதன் பொம்மலாட்டப் பொம்மைதான் நடிகர் விஜய்.

தமிழ்நாட்டில் திராவிட முகமூடி மற்றும் தமிழ்த் தேசிய அரசியலை உடைக்க வேண்டும் என்பதில் பாஜக – காங்கிரஸ் இரண்டுக்கும் துளியளவு வேறுபாடு இல்லை. இரண்டு இராட்சத முதலைகளும் எப்போதும் இதற்காகவே வாயைத் திறந்து கொண்டு காத்திருக்கின்றன.

இவர்களின் மூளையாக செயல்படுவதுதான் இந்திய – இலங்கை கூட்டு அரசியல் மூளையும் அதன் தாய் மூளையான இஸ்ரேலிய ஜியோனிஸ மொசாட்டும்.

தலை சுற்ற வைக்கும் இந்த அரசியல் சதுரங்க நகர்வுகள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து தொடர்ந்து பார்ப்போம் !

spot_img

Continue reading

சீமான் குறித்து அவதூறு பரப்புவோர் அனைவரின் ஒரே இலக்கு…மேதகு தலைவர், புலிக்கொடி, தமிழ்த் தேசியம் மூன்றையும் சீமான் கைவிடவேண்டும் என்பதே ! – என்றால் இவர்கள் யாருடைய கைக்கூலிகள் ?!

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது. கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு படம், கருத்துக்களை பகிராமல் இருந்திருந்தால் முகநூல் வருவாய் மாதம்தோறும் கணிசமான அளவு வந்திருக்கும். ஆனால் . கடந்த 16 ஆண்டுகளாக...

நாம் தமிழர் கட்சியின் தோல்விக்குக் காரணங்கள்…வாய்க்கு வந்ததை அள்ளிவிடும் சமூக ஊடகர்கள்!

01. சீமான் மக்களைத் திட்டிட்டார் அதனால் தோத்துப்போச்சு 02. திரள் நிதி வாங்கிட்டாங்க அதனால தோத்துப்போச்சு 03. சாட்டை துரைமுருகன் விஜய் குறித்து பேசியிருக்கக் கூடாது 04. பெரியாரை சீமான் பேசியிருக்க கூடாது அதனால் தோத்துப்போச்சு 05. பிராமண கடப்பாரைன்னு சொல்லிருக்கக் கூடாது அதனால தோத்துப்போச்சு 06. ஈ*ழத் தமிழர் நல்லதுக்கு ஒண்ணுமே செய்யலை அதனால தோத்துப்போச்சு 07. காளியம்மாளை வெளியேற்றி இருக்க...

தமிழ் ஊடகம் – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 கள நிலவர ஆய்வு முடிவுகள் – நடந்ததும் மாறி நடந்ததும் !

தமிழ் ஊடகம் குழுமம் கடந்த ஏப்ரல் மதம் 14 ம் தேதியன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் (ப்ரெஸ் கிளப்) செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் கள நிலவர அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 2025 ஆகஸ்ட், 2026 ஜனவரி மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சுமார் 35 ஆயிரம் பேரிடம் 234 தொகுதிகளிலும்...