HomeIndiaநடிகர் விஜயின் சைக்கோத்...

நடிகர் விஜயின் சைக்கோத் தனமான செயல்பாடுகள் ! ஜனநாயகன் வாயிலாக “எமோஷனல் Trigger” செய்ய முயற்சி !

நடிகர் விஜய் ஒரு அசாதாரண உளவியல் கட்டமைப்பைக் கொண்ட ஒருவராக இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் புரியும். அவரிடம் கொஞ்சம்கூட எதார்த்தமோ, இயல்போ இல்லாமல் இருப்பதைக் கவனிக்க முடியும். சினிமா ஹீரோபோலவே அவர் அரசியலிலும் நடிப்பதும், சினிமா இரசிகர்கள் போலவே தமது பின்பற்றாளர்களை உணர்வு மயமாக்கி வைத்திருப்பதும் விஜயின் அசாதாரணமான உத்திகள்.

முதலில் தாம் அரசியல் முறையாகக் கற்று அதனை தமது பின்பற்றாள இளையோருக்கும் கற்றுக்கொடுத்து பக்குவமாக்கி மக்கள் பணி செய்தல் வேண்டும்.

தம்மைப் பின்பற்றும் இளையோரை எப்போதும் தன் மீதான வெறித்தனமான உணர்வுக் கொந்தளிப்பிலேயே வைத்திருக்க வேண்டும் என்கிற தீவிரம் விஜயின் ஒவ்வொரு புறச் செயல்களிலும் இருப்பதை உணரலாம்.

அதற்கென செயற்கையான காட்சி, உரை, சமூக ஊடகங்கள் வாயிலாக “செட் அப்” காட்சிகளை அவர் செய்யவும் தயங்குவதில்லை.

ஆனால், மக்கள் அரசியல் என்பது மிக எளிதானதும், கடும் உழைப்பு, நேரம், அர்ப்பணிப்பு தேவைப்படும் ஒரு இயல்.

சினிமாவில் அப்படி அல்ல, ஒரு காட்சியைப் படமாக்க நடிகருக்கு சவுகரியமான நேரத்தில் காட்சிப்படுத்தலாம்.

நடிகரின் மன நிலை “mood” க்கு ஏற்றார்போல காட்சிப் படுத்தலாம். அதாவது இரவில் கூட விளக்குகளை எரிய விட்டு பகல்போல செயற்கையாக காட்சிப் படுத்தலாம். எதுவுமே இல்லையா செயற்கை நுண்ணறிவு மற்றும் வரைகலை (Graphics) காட்சிகள் மூலமாக காட்சிகள் அமைக்கலாம், தமது வாயை அசைத்து வேறு யாரையாவது பேச அல்லது பாடவிட்டுப் படமாக்கலாம்.

ஒரே பாடல் காட்சிகளில் பல நாடுகளுக்குப் பயணம் செய்யலாம். அமிஞ்சிக்கரையில் நடனம் ஆடிக்கொண்டே அடுத்த நொடி அமெரிக்காவில் ஓடிக்கொண்டிருக்கலாம். இதெல்லாம் சினிமா எனும் செயற்கைப் பொழுதுபோக்கில் சாத்தியம்.

உண்மையான அரசியல் வாழ்க்கை

ஆனால் உண்மையான அரசியல் வாழ்க்கையில் இது எதுவுமே சாத்தியமில்லை.

ஒரு ஊராட்சி மன்ற உறுப்பினரக ஆனாலும் கூட எப்போது வேண்டுமானாலும் மக்கள் வந்து தம்மை சந்திக்கவும், அணுகுவதற்கு எளிமையாகவும் இருக்க வேண்டும். ஆயத்தமாக இருக்க வேண்டும்.

நள்ளிரவு 12 மணிக்குக் கூட மக்களிடமிருந்து ஒரு அவசர அழைப்பு வரலாம். அப்போதும் அவர்களது அழைப்பை எடுக்க ஆயத்தமாக இருக்கவேண்டும்.

ஒரு ஆட்சி அதிகாரத்தைக் கொண்ட முதலைமைச்சர் பதவி என்பது அலங்கார சிம்மாசனம் அல்ல, மக்கள் பணி செய்யவேண்டிய ஒரு பொறுப்புமிக்க ஒரு பொறுப்புப் பதவி.

வாரத்திற்கு ஒருநாள் மட்டும் வெளியே வருவது…அப்போதும் தம்மை வெறித்தனமாக இரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது போல தனிமனித புகழ்ச்சி, போற்றுதலுக்காக அதிலும் புகழ்ச்சியை மட்டுமே வெளிக்காட்ட விரும்புவது என விஜய் செய்யும் ஒவ்வொரு செயலும் சினிமா எனும் கனவுத் தொழிற்சாலைக்குப் பொருந்துமே தவிர உண்மையான அரசியலுக்குப் பொருந்தாது.

வெளியூர் விருந்தாளி

வெளியூர் விருந்தாளி போல இருந்தால் அதற்குப் பெயர் அரசியல் அல்ல.

வாகனத்தில் வரும்போது தாமே செட் அப் செய்து பூக்களை, குளிர்பானத்தை, தர்பூசணி பழத்தை வீசுவது போல நடிக்க வைப்பது, ஆயிரக்கணக்கானோர் நெருக்கியடித்து தம்மை பார்க்க தள்ளு முழு செய்வது போல நடிக்க வைப்பது, பெண்களை செயற்கையாக பேச வைப்பது, அதனை ரீல்ஸ், ஷார்ட்ஸ் வடிவில் வைரல் ஆக்குவது என்று எல்லாமே விஜய் புகழ் பாட விஜயால் செயற்கையாக செய்யப்படும் செட் அப்களே.

தாம் வெளியே வந்தால் கூட்டம் கூடி தள்ளு முள்ளு ஆகிவிடும் என்பதாக விஜய் கூறுவதே அப்பட்டமான ஒரு பொய்.

விஜயைவிட மிகப் பிரபலமானவர்கள் யாரும் வெளியே வராமல் பதுங்கிக்கொண்டா இருக்கிறார்கள் ?

விஜய் தமது வீட்டிலிருந்து விமான நிலையம் போனதே இல்லையா ? வேறு எந்த இடத்திற்கும் போனதே இல்லையா ?

பெரியார் இராமசாமி சிலைக்கும், அண்ணல் அம்பேத்கர் சிலைக்கும் முதலில் மாலை போட போனபோது யாருமே கண்டுகொள்ளவில்லையே…மரணித்த அனிதா வீட்டுக்கு விஜய் சென்றபோதும், நல்லகண்ணுவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்தபோதும் அப்படி எந்தக் கூட்டமும் வந்து தள்ளு முள்ளவில்லையே…

முன்கூட்டியே சொல்லாமல் அமைதியாக வந்துவிட்டுப் போனால் யார் கூடப்போகிறார்கள் ? என்ன தள்ளு முள்ளு நடக்கப்போகிறது ?

கேரளாவில் மம்மூட்டி மோகன்லால் போன்ற திரை ஆளுமைகள் யாரும் இப்படியெல்லாம் உருட்டியதே இல்லையே !

இசையமைப்பாளர் இளையராஜா, ரகுமான், ரஜினிகாந், தனுஷ், சிம்பு, சூர்யா, அஜித் என்று யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லையா என்ன ?

விஜய் மட்டும் வானத்தில் இருந்து குதித்த தேவதையா ?

ஆனால் விஜய் மட்டும் ஏதோ வானத்தில் இருந்து குதித்த ஒரு தேவதைத் தலைவர் போலவும், அவர் வெளியே வருவதே பெரும்பாடு என்பது போலவும் செய்யப்படும் அனைத்து பில்ட் அப்புகளும் விஜயின் சைக்கோத் தனத்தின் வெளிப்பாடு.

உலக நாயகன் கமல்ஹாசனும் தேர்தலில் போட்டியிட்டார். அவரும் தெருத்தெருவாக பரப்புரை செய்தார். ஆனால் அவர் அப்படி ஏதும் பில்ட் அப் செய்யவில்லையே….

அரசிலுக்கு வந்த விஜய் மிகவும் செயற்கையாக, எல்லாவற்றிலும் ஒரு “ஸ்கிரிப்ட், ஆக்ஷன், கட்” என்கிற அடிப்படையில் நடிப்பதும், தம்மை விட்டால் தமிழ்நாட்டுக்கு வேறு கதியே இல்லை என்பது போல பில்ட் அப் செய்வதும் அதற்காக 41 பேர் பலியானாலும், மனைவி விவாகரத்து கோரினாலும், ஜனநாயகன் படம் கசிந்தாலும்…எதற்கும் முறையான விளக்கமோ, அறிக்கையோ தராமல் பதுங்கிக் கொண்டு குறிப்பிட்ட நாளில் வெளியே வந்து தமது ரசிகர்கள் என்கிற பெயரில் செட் அப் செய்யப்பட்ட ஆட்களை வைத்து ட்ராமா நடத்துவதும் என மக்களை முட்டாளாக்கி வருகிறார்.

ஜனநாயகன் திரைப்படம் முழுக்க முழுக்க 2026 தேர்தலை மையமாக வைத்து தமது இரசிகர்களை மட்டுமல்லாது எமோஷனல் அதாவது எளிதில் உணர்ச்சி வயப்பட்டக் கூடிய மக்களின் மண்டையைக் கழுவி தமக்கு வாக்களிக்க வைக்க செயற்கைத் தனமாகத் திட்டமிட்டு கதை வசனம் எழுதிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள் வெளி நாடுகளில் அப்படத்தைப் பார்த்த தமிழ் ஊடகம் வாசகர்கள்.

படம் முழுக்க வன்முறை, வெட்டு, குத்து என்று வன்முறைக் காட்சிகள் மூலமாக இரசிகர் கூட்டத்தை சைக்கோத் தனமாக மாற்றி ஒரு Emotional Trigger அதாவது உணர்வுத் தூண்டல் செய்ய வேண்டும் என்பதுதான் விஜயின் வேலைத் திட்டம்.

விஜய் ஒரு ஆபத்தான சைக்கோ

அதாவது மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடாமல், சினிமாவில் போராடுவதுபோல நடித்து அதை ரசிகர்களை, பார்வையாளர்களை, வாக்காளர்களை நம்ப வைத்து வாக்குகள் வாங்க பல நூறு கோடிகள் செலவு செய்து ஒரு திரைப்படத்தை உருவாக்கி, சிறப்பு விமானத்தில் பயணம் செய்து பரப்புரை எனும் பெயரில் சாலையிலும் நடித்துக்கொண்டு…”கோடிக்கணக்கான வருவாயை விட்டுவிட்டு வழிகளைத் தாங்கி அரசியலுக்கு வந்தேன் ” என்று அப்பட்டமாக மக்களை ஏய்த்து வரும் விஜய் ஒரு ஆபத்தான சைக்கோ என்று சொன்னால் தகுமா தகாதா ?!

spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...