HomeIndiaதமிழ்த் தேசியத்தை வீழ்த்த...

தமிழ்த் தேசியத்தை வீழ்த்த ரஜினி, கமல், விஜய்…அடுத்து ?! விஜய்க்கு மிகச் சரியான எதிர்வினையாற்றிய சாட்டை துரைமுருகன் !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்

கடந்த 2011 ம் ஆண்டு வெளியான மொழிவாரிக் கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர்.

இதில் தனித்தமிழ் பேசுவோர் அதாவது தமிழர்களின் எண்ணிக்கை 6 கோடியே 37 லட்சத்து 53 ஆயிரத்து 997 பேர்.

தெலுங்கர் எண்ணிக்கை 42 லட்சத்து 34 ஆயிரத்து 302 பேர்

கன்னடர் எண்ணிக்கை 12 லட்சத்து 86 ஆயிரத்து 175 பேர்

உருது பேசுவோர் எண்ணிக்கை 12 லட்சத்து 64 ஆயிரத்து 537 பேர்

மலையாளிகள் 7 லட்சத்து 26 ஆயிரத்து 96 பேர்

ஹிந்தி பேசுவோர் 3 லட்சத்து 93 ஆயிரத்து 380 பேர்

குஜராத்திகள் 2 லட்சத்து 74 ஆயிரத்து 023 பேர்

மராத்தியர்கள் 85,454 பேர்

ஆங்கிலம் பேசுவோர் 24,495 பேர்

துளு பேசுவோர் 2,636 பேர்

பிற – 1 லட்சத்து 935 பேர்

அதாவது தமிழர் அல்லாத பிறமொழியாளர்கள் 83 லட்சத்து 93 ஆயிரத்து 33 பேர். ஒரு கோடிக்கும் குறைவு.

ஆக சுமார் ஆறரைக் கோடித் தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டில் சுமார் 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் தெலுங்கர்களால் தொடங்கப்பட்டு அதன் தலைவர்கள், நிர்வாகிகள் தெலுங்கர்களாக உள்ளனர்.

தமிழ்நாடு அமைச்சரவையில் குறிப்பாக திமுக அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் தெலுங்கர்கள்.

ஆட்சி அதிகாரத்தில் பிறமொழியாளர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

திரைத்துறையில் சுமார் 40 விழுக்காடு தெலுங்கர்கள். அதிலும் மிக முக்கியப் பொறுப்புகளில் குறிப்பாக தயாரிப்பாளர்கள், நிதிநிறுவன அதிபர்கள், கதாநாயக நடிகர்கள் என ஆதிக்கம் செலுத்திவருவது தெலுங்கர்களே.

இப்படித் திரைத் துறைக்குள் கதாநாயகன்களாக அறிமுகம் ஆகி, அதன் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்று அவர்களை ஒரு இயக்கமாக மாற்றி அப்படியே அந்த இரசிகக் கூட்டத்தோடு அரசியலுக்குள் நுழைந்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துத் தமிழ்நாட்டை ஆண்டு அனுபவிக்கத் தெளிவான திட்டங்களுடன் செயலாற்றுகின்றனர் திராவிட” எனும் முகமூடியை அணிந்த தெலுங்கர்கள்.

இவர்கள் இங்கே”திராவிட” எனும் முகமூடியை அணிந்துகொண்டிருப்பதால் தமிழர்கள் ஏமாந்து இரசிகர்களாக மாறி சில்லறைகளைச் சிதறவிட்டு கைகொட்டி அடிமைகள் போலாகிவிட்டனர்.

திரைத்துறையில் 10 படங்கள் நடித்துவிட்டு அதைவைத்து தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை எளிதில் பிடித்துவிடலாம் என்பதுதான் இந்தத் திராவிட முகமூடிகளின் வேலைத் திட்டம்.

இன்னொருபுறம் பத்திரிகை குறிப்பாக காட்சி செய்தி ஊடகங்களில் ஆசிரியர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இவர்கள் ஆக்கிரமித்து அமர்ந்து கொள்கிறார்கள்.

எழுத்தாளர்கள் என்ற பெயரில் தமிழர் வரலாற்றைத் திரித்து எழுதி இவர்களுக்கு இவர்களே விருது கொடுத்து பெரிய சிந்தனையாளர்கள் போல பிம்பம் அமைத்துக் கொள்கிறார்கள்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தலைவர் பொறுப்பிடத்தில் தெலுங்கர் அமர்ந்து கொள்கிறார்.

ஆக, சினிமா, பத்திரிகை ஊடகம் தமிழ் ஆராய்ச்சி, தொல்லியல் என மிக முக்கியமான இடங்களில் எல்லாம் இவர்கள் அமர்ந்து கொண்டு ஆறரைக் கோடி தமிழர்களின் சொத்துக்களுக்கு “திராவிடம்” எனும் முகமூடியின் பின்னணியில் தங்களது பெயரை எழுதி உரிமை மாற்றம் செய்து கொள்கிறார்கள்.

கடந்த 2009 முள்ளிவாய்க்கால் இனவழி*ப்பின் உச்சக்கட்டத்திற்குப் பிறகே எங்கோ தவறு நடப்பதாகத் தமிழர்களுக்கு உரைக்கத் தொடங்கியது.

திரும்பிப் பார்த்தால் சுமார் 600 ஆண்டுகாலமாக வட வேத வைதீகர்களும், பிறமொழி திராவிட முகமூடிகளும் தமிழர்களை ஏலம் போட்டு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக 1944 ம் ஆண்டு முதல் வெளிப்படையாகவே தமிழர்களுக்கு திராவிடர் முகமூடி மாட்டிவிட்டு அந்த முகமூடிகளுக்குத் தாமே தலைவர் என்று கூச்சமே இல்லாமல் பட்டம் சூட்டி இந்த வைபவத்தைத் தொடங்கி வைத்தவர் பெரியார் இராமசாமி.

அன்றுமுதல் இன்றுவரை இராமசாமியின் நயவஞ்சக உத்தியின் மூலமே தமிழர்களை மேலாதிக்கம் செய்து வருகிறார்கள் திராவிட முகமூடிகள்.

ஆட்சி ஆண்டு சுரண்டிக் கொழுத்துவிட்டனர் அவர்கள்.

தமிழ்மக்கள் ஒருபோதும் தங்களை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக இலவசம், மது மயக்கம், திரைக் கவர்ச்சி மூலம் தமிழர்களை மயக்கத்திலேயே ஆழ்த்தி வைத்து வருகின்றனர்.

திராவிட முகமூடிகளைத் தமிழர்கள் அடையாளம் கண்டு கொண்டுவிட்டால், அவர்கள் கொள்ளையடிப்பதைக் கண்டு தமிழர்கள் கோபம் கொண்டு விட்டால் உடனே ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களை “நட்ட நடு நிலை” தலைவர்கள் போல வேடம் கட்டி இறக்கிவிடுவார்கள் இந்த முகமூடிகள்.

மக்களும் நம்பி அவர்களுக்கு வாக்களித்தால் ஒன்றிண்டு தேர்தல்களில் “தங்களின் தனித்துவ முகமூடியை அகற்றிவிட்டுத்” திராவிட முகமூடி திமுகவினருடன் கலந்து கரைந்து போய்விடுவார்கள் அந்த நடிகர்கள்.

ஆக, ஆட்சி அதிகாரம் எப்போதும் இந்த திராவிட முகமூடிகள் வசமே இருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்பாட்டில்தான் கமல்ஹாசனும் அடுத்து விஜயும் களமிறக்கப்பட்டனர்.

நாம் தமிழர் வளரும் காலத்திலேயே ரஜினியை இறக்க முயற்சி நடந்தது. அதை நாம் தமிழர் முறியடித்தது.

அடுத்து கமல் களம் இறக்கப் பட்டார். நாம் தமிழருக்கு வரவேண்டிய சுமார் 5 விழுக்காடு வாக்குகளை கமல் பறித்தார். பிறகு நாம் மேலே சொன்னது போல திமுகவுக்குச் சென்று கரைந்துவிட்டார்.

இப்போது 2026 ல் விஜய் இறக்கப்பட்டிருக்கிறார். விஜய் இல்லையெனில் நாம் தமிழர் பெரு வெற்றிகளைக் குவித்திருக்கும்.

திட்டமிட்டு விஜயால் நாம் தமிழர் மட்டுப் படுத்தப்பட்டது.

அன்று ரஜினி வந்தபோது அதை நாம் தமிழர் எதிர்த்து நின்று முறியடித்தது. விஜய் வந்தபோது விஜயின் அரசியல் நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல மட்டுமே முடிந்தது.

அந்த மகத்தான பணியைச் செய்தவர் செய்தவர் சாட்டை துரைமுருகன்.

சீமானுக்கு வலு சேர்க்கும் எவர் உருவானாலும் அவர்களைக் கொம்பு சீவி விடுவது, அல்லது அவர்கள் குறித்து அவதூறு பரப்பி சீமான் உருவாக்கும் கட்டுமானத்தை குலைத்துக்கொண்டே இருப்பது என்கிற உத்தியை சிலர் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியினர் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, அடுத்து தவெக என தமிழருக்கு எதிரான கொள்கைகளுடன் நிற்கும் அனைத்துக் கட்சிகளின் உள்நோக்கத்தையும் சரியாகவே வெளிப் படுத்துகிறார்கள். . அந்தவகையில் புதிதாக மரு வைத்து மாறுவேடத்தில் வந்துள்ள விஜயையும் வெளிப்படுத்தவேண்டியது நாம தமிழரின் கடமை. அதைச் சிறப்பாகவே செய்தனர் நாம் தமிழர்.

தமிழர் இனத்தின் எதிரி யார், எப்படிப்பட்டவன், எங்கிருந்து எப்படித் தாக்குதல் நடத்துவான் என்கிற அடிப்படை நுட்பம் கூட புரிந்துகொள்ளாத தமிழ்த் தேசியம் எனும் பெயரில் உலவும் சிலரே நாம் தமிழர்க்கு எதிராகவும், நாம் தமிழரை மட்டம் தட்டியும் பேசி வருவது தமிழ்த் தேசியத்தை கருவறுக்கும் செயலன்றி வேறு எதுவுமில்லை.

spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...