தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டதால் ஒரு தொகுதியில் இருந்து அவர் விலக வேண்டும். மேலும் ஒரு உறுப்பினரை அவைத் தலைவருக்கு ஒதுக்கி விட்டால் மீதம் 106 மட்டுமே இருக்கும். எனவே 11 உறுப்பினர் ஆதரவு இருந்தால்தான் பெரும்பான்மை நிரூபிக்க இயலும்.
தற்போது காங்கிரஸ் வசம் 4 தொகுதிகள் மட்டுமே உண்டு. திமுக ஆதரவு கூட்டணியில் காங்கிரஸ் 5, இடதுசாரிகள் 4, முஸ்லீம் லீக் 2, விசிக 2, தேமுதிக 1 ஆகிய உறுப்பினர்கள் உள்ளனர்.
அதிமுக கூட்டணியில் பாஜக 1, அமமுக 1, பாமக 4, உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்களில் தேமுதிக ஆதரவு தர வாய்ப்பில்லை, காரணம், அவர்களுக்கு 10 இடங்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இடத்தை திமுக வழங்கி இருக்கிறது. விசிகவும் திமுகவை விட்டு விலக வாய்ப்பில்லை, காரணம் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விசிகவினர் உள்ளனர். இடதுசாரிகள் செல்லவும் வாய்ப்பு குறைவு. காங்கிரஸ் மட்டுமே தர வாய்ப்புள்ளது. எனினும் 12 உறுப்பினர்கள் தேறாது.
அதிமுக கூட்டணி கட்சிகளிடம் மொத்தமே 6 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனவே அதுவும் போதாது.
ஆக, மீதமுள்ள அதிமுக மற்றும் திமுக ஆதரவுடன்தான் விஜய் ஆட்சி அமைக்க முடியும்.
திமுக ஆதரவு தருமா என்பது சந்தேகம்.
ஆக, விஜய்க்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அதிமுகதான்.
இதற்கிடையில் ஆளுநர் சென்னைக்கு நாளைதான் வருகிறார்.
என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

