-நாச்சி.செல்வராஜ், பத்திரிகை ஊடகவியலாளர்
வரும் 23 ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக இதில் யார் தோற்றாலும் அதற்கு முக்கியக் காரணமாக இருக்கப்போவது சீமானின் நாம் தமிழர் கட்சியே.
கடந்த 15 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி என்ற பேரியக்கத்தை நடத்திக் கொண்டே பல தேர்தல்களைச் சந்தித்தவர் சீமான்.
அரசியலில் பல புதுமைகளைப் புகுத்தி மற்ற அரசியல் கட்சிகளுக்கும் பாடம் எடுத்தவர்.
எடுத்துக்காட்டாக, பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதையே இந்தியா விடுதலை பெற்று சுமார் 70 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்துகொண்டிருக்கின்றன இந்திய அரசியல் கட்சிகள்.
ஆனால் அதை வெறும் ஏட்டளவில் இல்லாமல் 50 விழுக்காடு என்று நடைமுறைப் படுத்திக் காட்டியவர் சீமான்.
ஆண்களுக்கு 117 பெண்களுக்கும் 117 என்ற சரிசமமான, அதே சமயம் சமரசமில்லாத
கொள்கையை நிலை நாட்டியவர் சீமான்.
ரஷ்ய புரட்சி, சீனப் புரட்சி போல தமிழகத்தில் ஓர் அரசியல் ( சமூக) புரட்சியை நடத்திக் காட்டியவர் சீமான்.
இப்படி சமூகப் புரட்சிகளுக்கு முக்கியத்துவம் மட்டுமல்லாமல் தமிழ் மொழிக்காவும், தமிழனத்திற்காகவும் அரும்பாடுபட்ட ஐயா மாபொ.சிவஞானம், மறைமலைஅடிகளார், கவிக்கோ அப்துல்ரகுமான், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், இரட்டைமலை சீனிவாசன், வனக்காப்பாளர் வீரப்பன், கல்விக்காகப் பாடுபட்ட காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல்சேகரனார் போன்றோருக்கு அவர்களது பிறந்தாள் மற்றும் நினைவு நாட்களில் போஸ்டர் மூலம் தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்தி அதன் மூலம் அவர்களது நினைவுகளை பதிவிட்டு புதிய அரசியல் தடம் பதித்தவர் சீமான்.
செல்லும் இடமெல்லாம் வெட்டி அரசியலைப் பேசி நேரத்தை வீண்டிக்காமல் தொலை நோக்கு சிந்தனையுடன் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த வழிமுறைகளை வகுத்துப் பேசியவர் சீமான்.
கால்நடைகள் மூலம் வியாபரத்தைப் பெருக்கி மாநில வரவு செலவுக் கணக்கில் அதை இடம் பெற வகிப்பது எப்படி எனத் திட்டமிட்டு செயலாற்றியவர் சீமான்.
இப்படி நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவும் மொழி காக்கவும் பல புரட்சிகளுக்கு
வித்திட்ட சீமான் 2026 சட்ட மன்ற தேர்தலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்த போகிறார் என தேர்தல், வியூக வகுப்பாளர்களுக்கே குழப்பமான மனநிலை நிலவுகிறது.
அதனால்தான் நாம் தலைப்பில் “சைலன்ஸ் கில்லர் சீமான்” என்று குறிப்பிட்டோம்.
இரண்டு பெரிய திராவிடப் பெயர் கொண்ட கட்சிகளான அதிமுக, அல்லது திமுக இரண்டில் ஒன்று ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது, இது கள எதார்த்தம்.
இந்த இரண்டில் தோல்வியுறும் கட்சிக்கு அந்த பாதிப்பை ஏற்படுத்துவது யார்? சீமானா ? அல்லது தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயா? இதுதான் அரசியலில் முக்கிய ஆட்டமாக உள்ளது.
விடலப் புள்ள, விசிலடிச்சான் குஞ்சுகள் என தவெகவை விமர்சித்தாலும் இதுவரை அவர்கள் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல் முதன் முதலாக இந்தத் தேர்தலில் போட்டியிடவிருப்பதால் எந்த வகையான தாக்கத்தை விஜய் ஏற்படுத்த போகிறார் என்று தெரியாது.
ஆனால் பல தேர்தல்களைச் சந்தித்தும் தொடர் தோல்விகளடைந்தும் விடாது தொடர்ந்து களம் காணும் நாம் தமிழர் ஏற்படுத்தப் போகும் விளைவுகள்தான் அதிமுக – திமுக கட்சிகளுக்கும் பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணிக்குள் இருக்கும் களேபரம், பூசல் தற்போது வெளிப்படையாகப் பொதுத்தளத்திற்கு வந்து விட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் உச்சகட்ட ஆணவப் போக்கினாலும், பிஜேபி – திமுக இடையே கள்ள உறவு என்ற மம்தா பானர்ஜியின் பயங்கரக் குற்றசாட்டும் திமுகக் கூட்டணி கட்சிகளிடையே மீண்டும் ஒன்று சேர்த்த முடியாத பெரிய விரிசலை ஏற்படுத்தி விட்டன.
இந்த விரிசல் தேர்தல் களத்திலும் பிரதிபலிக்கிறது. இதனால் தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றம் இருக்கும்.. ஒரு வேளை அப்படி மாற்றம் கண்டால் தமிழ்நாட்டில் பல கட்சிகள் காணமல் போகும். இந்தப் பட்டியலில் முதலிடம் வகிப்பவை தேமுதிக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிஸ், தவெக ஆகியவை.
அதிமுக – திமுக ஆகிய கட்சிகளைச் சார்ந்தே அரசியல் செய்துகொண்டிருக்கும் இந்த இயக்கங்களே பெரும் பின்னடைவைச் சந்திக்கும்.
ஆனால் நாம் தமிழர் கட்சி “சுயம்பாக” வளர்ந்து நிற்கிறது.
திமுக – அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் அக்கட்சிகளைச் சார்ந்து வாழும் கட்சிகளுக்கும் ஏற்படும்.
ஆனால் அந்த நிலை நாம் தமிழருக்கு இல்லை. காரணம் அக்கட்சி பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை சார்ந்து இல்லை.
இந்த மாற்றங்களுக்கு இடையே நாம் தமிழர் கட்சி தன்னை மேலும் புதுப்பித்து கொள்ளும், மேலும் புதிய ஊக்கம் பெரும், இதனால் முன்பை விட அதன் அரசியல் வேகமெடுக்கும். தமிழக அரசியலில் புது இரத்தம் பாய்ச்சி அடுத்த போருக்குத் தயாராகும்.
சமகால அரசியல் நிகழ்வாக உண்மையான சமூக நீதிக்கான வேட்பாளர்கள் தேர்வு என்பது நாதகவிற்கு மேலும் ஒரு மகுடத்தைச் சூடியிருக்கிறது. பிராமண வகுப்பினருக்கு 7 இடங்களை ஒதுக்கி வேட்பாளர்களக அறிவித்து அம்மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது நாம் தமிழர்.
சென்னையில் உள்ள அந்தச் சமூக மக்களிடையே பல்வேறு சங்கங்கள் உள்ளன. அவை அனைத்தும் சீமானைப் பெருமையோடு பார்ப்பதை உணர முடிகிறது.
இவையெல்லாம் அந்தத் தாக்கத்தை நிலை நிறுத்தும் கண்ணாடிகளாக உள்ளன.
ஒவ்வொரு தொகுதியிலும் நாம் தமிழர் ஓட்டுக்கள் முக்கியமானவை. இவை ஒரு திராவிடக் கட்சியை காலி செய்யும் பேராயுதம்.
அந்த அரசியல் கணக்கில் சீமான் வெற்றி பெறுவார். அவருக்கு இந்தத் தேர்தல் பல பாடங்களைக் கற்றுத் தரும்.
மே 4 ம் தேதி தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இன்று காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச்சிறுத்தைகள் போன்ற கட்சிகளை சார்ந்திருப்பவர்கள் அன்று நாம் தமிழர் கட்சியை நோக்கி வருவார்கள்.
தொலை நோக்கு சிந்தனையோடு செயல்படும் சீமானைத் தலைவராக அவர்கள் ஏற்றுக் கொள்ளவார்கள். அதற்கான காலம் விரைவில் கனிந்து வரும். தேர்தலில் கூட்டணி சேராமல் தனித்து நிற்பதின் பொருள் இதுதான். இதைக் கடைசி வரை அடம்பிடித்து விடாது கடைபிடித்த சீமான் உன்மையில் சைலன்ஸ் கில்லர்தானே !

