திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள அருள்மிகு சிவன்மலை ஆண்டவர் தலத்தில் கடந்த 29 ம் தேதி ஏர்க் கலப்பை, மண், மண் கலயத்தில் நீர், பிரம்பு ஆகியவை உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டது.
சிவன்மலை உத்தரவுப்பெட்டி என்பது பத்தர்களின் கனவில் வரும் தகவல் அடிப்படையில், கோயில் அர்ச்சகர்கள் முருகப்பெருமானிடம் “பூ” கேட்டு உறுதி செய்து கனவில் கண்ட பொருட்களை வைக்கும் காட்சிப் பெட்டி ஆகும்.

இந்தப் பெட்டியில் இவ்வாறு வைக்கப்படும் பொருட்கள் தொடர்புடைய நிகழ்வுகள் நாட்டில் நடைபெறும் என்பதே சிவன்மலை பத்தர்களின் நம்பிக்கை மற்றும் அனுபவமாக இருக்கிறது.
அந்தவகையில் கடந்த 29 ம் தேதியன்று மண், மண் கலயத்தில் நீர் மற்றும் ஏர்க்கலப்பை வைக்கப்பட்டுள்ளது.
இது வேளாண்மை சார்ந்த ஏதோ ஒரு பெரிய நிகழ்வு அல்லது மாற்றம் குறித்த ஒரு குறீயிடு என்றபோதும், தேர்தல் முடிவுகள் நெருங்கி வரும் நிலையில் மண், மண் கலயத்தில் நீர் மற்றும் ஏர்கலப்பை ஆகியவை நாம் தமிழர் கட்சியின் கொள்கை மற்றும் சின்னத்தைக் குறிப்பதாக சிலர் கருதுகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்பதே மண்ணுக்கான அரசியல், நீருக்கான அரசியல், வேளாண் மக்களுக்கான அரசியல் என்பதால் இந்தப் பொருட்கள் பொருந்திப் போகின்றன என்றும் ஆட்சி அதிகாரத்தை பிரம்பு குறிப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
இது வேளாண் தொடர்பானதா அல்லது அரசியல் மாற்றம் தொடர்பானதா என்பது நாளை மே 4 ம் தேதி வாக்குகள் எண்ணப் பட்டால் தெரிந்துவிடும்..
சிவன்மலை சித்தர் சிவவாக்கியர் ஐக்கியமான மலை என்பது குறிப்பிடத்தக்கது. சிவவாக்கியர் நிறுவிய முருகன் தலம் இது என்பதால் சிவன்மலை என்றே வழங்கப்படுகிறது.
பார்ப்போம்.

