HomeIndiaஅமெரிக்காவையும், இஸ்ரேலையும் மீண்டும்...

அமெரிக்காவையும், இஸ்ரேலையும் மீண்டும் அலறவிட்ட ஈரான் !

இஸ்ரேல் கொடுத்த அழுத்தம் காரணமாகப் பொய்யான காரணங்களைக் கூறி ஈரான் மீது போரைத் தொடங்கிவிட்டு படாதபாடு படுகிறது அமெரிக்கா.

கடந்த 20 நாட்களாக நடந்து வரும் இப்போரில் ஈரான் நாடு, அமெரிக்கா மீதோ அல்லது இஸ்ரேல் மீதோ அல்லது வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீதோ முதலில் தாக்குதலை நடத்தவில்லை.

அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப்படைதான் ஈரான் மீது முதலில் தாக்குதல் நடத்தியது.

தாமாக எந்த ஒரு தாக்குதலையும் முதலில் நடத்தாமல் அமைதி காக்கிறது ஈரான். அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப்படை அடித்தால் உடனே திருப்பி அடிக்கிறது.

இதனால் உலக நாடுகளும் இதில் தலையிடமுடியாத நிலை. ஈரான் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்குகிறது என்ன செய்ய முடியும் என்பதே அவர்களின் நிலை.

இப்படிப்பட்ட நிலையில் ஈரானின் அணுசக்தி செறிவூட்டும் நிலையமான நடன்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. நல் வாய்ப்பாக அணுக் கதிர்வீச்சு எதுவும் ஏற்படவில்லை.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நாட்டின் அதி உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள டிமோனா அணுசக்தி செறிவூட்டும் நிலையத்திற்கு மிக அருகில் ஒரு தாக்குதலை நடத்தி எச்சரித்திருக்கிறது ஈரான். இதில் 100 பேர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தப் பதிலடியால் கலங்கிப்போயிருக்கிறது அமெரிக்காவும், இஸ்ரேலும். இப்போது ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது அமெரிக்கா.

முன்னதாக, ஈரான் மீது தாக்குதல் நடத்த தங்களது தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரிட்டன் அறிவித்த சில மணித்துளிகளில் டியாகோ கார்சியா தீவில் உள்ள பிரிட்டன் – அமெரிக்க கூட்டுத் தளத்தின் மீது ஏவுகணை வீசி எச்சரிக்கைத் தாக்குதல் நடத்தியது ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டியாகோ கார்சியா தீவின் மீது தாக்கும் அளவுக்கு ஈரானிடம் ஏவுகணை உள்ளதை அறிந்து அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமல்லாது பிரிட்டனும் அதிர்ந்துபோய் உள்ளது.

  • Explore tags ⟶
  • iran
spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...