HomeIndiaடொனால்ட் ட்ரம்பின் முட்டாள்...

டொனால்ட் ட்ரம்பின் முட்டாள் தனமான நகர்வு !

முகிந்தன் துரைராஜசிங்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அந்த ஒரு பதிவு ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்தது. “அடுத்த 48 மணிநேரத்தில் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாகத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை – குறிப்பாக மிகப் பெரிய நிலையத்தை – அமெரிக்கா தரைமட்டமாக்கும்” என்ற எச்சரிக்கை, ஒரு புதிய உலகப்போருக்கான தொடக்கமாகப் பார்கப்படுகிறது.

ஆனால் ஈரான் “நெருப்புக்கு நெருப்பு” சிறந்த பதிலடி என்பது போல் ஈரான் சற்றும் பின்வாங்கவில்லை.

ட்ரம்பின் மிரட்டலுக்குப் பதிலளித்த ஈரானிய ராணுவத் தளபதிகள், “எங்கள் மின் நிலையங்கள் மீது ஒரு சிறு கீறல் விழுந்தாலும், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களும், இஸ்ரேலின் முக்கிய உள்கட்டமைப்புகளும் சாம்பலாகும்” என அறிவித்தனர்.

அத்துடன் ஈரான் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முழுமையாக மூடிவிடுவதாக அறிவித்தது.

ஈரானின் ‘IRGC ஏற்கனவே நீண்ட தூர ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளன. அமெரிக்காவின் நட்பு நாடுகளின் எண்ணெய் கிணறுகளும் இலக்குகளாக மாற்றப்பட்டன.

உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயில் சுமார் 20% இந்த நீரிணை வழியாகத்தான் செல்கிறது. இந்த முடக்கம் உலகப் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளும்:

கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 150 டாலரைத் தாண்டக்கூடும். இது பெட்ரோல், டீசல் விலையை விண்ணை முட்டச் செய்யும்.

போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால், உணவுப் பொருட்கள் முதல் மின்னணு சாதனங்கள் வரை அனைத்தின் விலையும் கிடுகிடுவென உயரும்.

உலகெங்கிலும் உள்ள பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்திக்கும், பல நாடுகள் பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளப்படும்.

இப்பொழுது புரிகிறதா ட்ரம்ப் எனும் முட்டாளின் முடிவுகள் உலகத்தில் உள்ள அனைவரினது பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கப்பட போகின்றது.

ட்ரம்பின் இந்த 48 மணிநேரக் கெடு ஒரு மிகப்பெரிய “முட்டாள்தனமான நகர்வு” (Stupid Move)

ராணுவத் தளங்களை விடுத்து மின் உற்பத்தி நிலையங்களை (Power Plants) தாக்குவதாகக் கூறுவது சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பானது. இது கோடிக்கணக்கான அப்பாவி மக்களை இருளில் தள்ளும் செயலாகும்.

ஈரானைத் தாக்கினால் அது ஒரு நீண்ட காலப் போருக்கு இட்டுச் செல்லும். ஏற்கனவே பொருளாதாரச் சுமையில் இருக்கும் அமெரிக்காவிற்கு இது ஒரு தேவையற்ற மற்றும் தற்கொலைக்குச் சமமான முடிவாகும்.

  • Explore tags ⟶
  • iran
spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...