HomeIndiaஈரான் போரின் 27...

ஈரான் போரின் 27 வது நாள் ! என்ன நடக்கிறது ?!

ஈரானுக்கு எதிரான அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படையின் போர் 27 வது நாளாக நீடிக்கிறது.

இந்த மாதத் தொடக்கத்தில் புனித ரமலான் மாதம் தொடங்கிய நாளில் ஈரான் மீது முதலில் தாக்குதலை நடத்தியது அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப் படை.

இதையடுத்து சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களின் மீதும் இஸ்ரேல் மீதும் பதில் தாக்குதல் நடத்தியது ஈரான்.

இது தனிப்பட்ட முறையில் அமெரிக்காவுக்கு இழப்பையும் உள்நாட்டிலேயே கடும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது.

இஸ்ரேல் நாட்டுக்காக அமெரிக்கா இழப்பதைப் பெரும்பாலான அமெரிக்கர்கள் விரும்பிவில்லை.

இதனால் ஈரானைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது அமெரிக்கா

அதை நிரகாரித்த ஈரான் சில அடிப்படை நிபந்தனைகளை முன்வைத்தது. 1 ஹோர்ர்முஸ் நீரிணையின் அதிகாரம் ஈரான் வசமே இருக்க வேண்டும் என்பதை உலக நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும். 2. போர் தொடுத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு இழப்பீடு தரவேண்டும். 3. ஈரானின் உரிமைகளை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். 4. ஈரான் மீது எதிர்காலத்தில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படாது என்று உலக நாடுகள் உறுதியளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துத் தொடர்ந்து போராடி வருகிறது.

இருதரப்புக்கும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் கச்சா எண்ணைக்கான பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு அதிகரித்து உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

  • Explore tags ⟶
  • iran
spot_img

Continue reading

பங்களா வீட்டு பூனைக்குட்டிகளும் திமுக...

"விடுதலை இயக்கத்தினரை வைத்து என்னைக் கொ*லை செய்ய வைகோ சதி செய்தார்" என்று குற்றம் சாட்டி திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். அவருக்காக சுமார் ஒன்பது பேர் தீக்குளித்து உயிரை மாய்த்தனர். மு.க.ஸ்டாலினுக்கு பட்டம் சூட்ட வசதியாக தம்மை கருணாநிதி வெளியேற்றியதாக கர்ச்சனை செய்தார் வைகோ. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குடும்பத்தை மோளம் அடிப்பவர்கள் என்று பொது...

ஈ*ழத் தமிழர்களை கொன்ற*ழித்த காங்கிரசைத் தமிழ்நாட்டில் காலூன்ற வைக்கும் நடிகர் விஜய் ! ராகுலின் வருகைக்குப் பிறகு விஜயின் பேச்சில் மாற்றம் !

நடிகர் விஜய் முகமூடியில் தமிழ் நாட்டில் ஊடுருவும் காங்கிரஸ் : பின்னணியில் ராகுல் காந்தி ! மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்த்த ராகுல் காந்தி ராகுலின் வருகைக்குப் பிறகு விஜயின் பேச்சில் மாற்றம் ! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் நடிகர் விஜய் "கமல்ஹாசன் 2.0" என்று நாம் நமது தமிழ் ஊடகத்திலேயே குறிப்பிட்டிருந்தோம். காரணம் இன்றைய விஜய் போலவே கமல்ஹாசன் அன்று தனித்து...

“கூட்டணி சேருங்க சீமான் !” : கிட்னி எடுக்க விடுக்கப்படும் அழைப்புகள் !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் சீமான் மட்டும் கூட்டணி சேர்ந்திருந்தால் எதிர்க்கட்சியாக வந்திருக்கலாம், ஆளும்கட்சியாக வந்திருக்கலாம், அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருக்கலாம், ஆப்பிரிக்க அதிபர் ஆகியிருக்கலாம், ஐநா தலைவர் ஆகியிருக்கலாம் என்றெல்லாம் தொடர்ந்து அறிவுரைகள் அள்ளித் தெளிக்கப்படுவதை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பார்க்க முடிகிறது. உண்மையில் சீமான் கூட்டணி சேர்ந்திருந்தால் இந்நேரம் பிரேமலதாவுக்கோ செந்தில் பாலாஜிக்கோ வாக்கு சேகரிக்கும்...