HomeSpecial Articles"எதிரிகளை வீழ்த்த" முருகன்...

“எதிரிகளை வீழ்த்த” முருகன் காலில் விழுந்த ஸ்டாலின் குடும்பமும், நடிகர் விஜயும் ! ஏற்பாடு செய்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு !

-சிறப்பு செய்தியாளர்

நடந்து முடிந்த 2026 தேர்தல் யாருக்கு இறுக்கத்தைத் தந்ததோ இல்லையோ திமுக தலைமை குடும்பத்தினருக்கு கடும் இறுக்கத்தை அளித்திருக்கிறது.

அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைப்பதற்கு முன்பு வரை 200 இடங்களில் திமுக வெற்றி பெரும் என்று முழங்கினார்கள் திமுகவினர். தனித்தனியே நின்ற அதிமுக – பாஜக கூட்டணி அமைத்தபிறகு 200 தொகுதி வெற்றி என்ற திமுகவினர் முழக்கத்தில் “சுதி” குறைந்தது.

இப்போது ஏதோ அன்று சொல்லிவிட்டோமே என்கிற காரணத்தினால் சுரத்தே இல்லாமல் 200 தொகுதிகளில் வெல்வோம், 2.0 ஆட்சி அமைப்போம் என்று இறுக்கத்தோடு சொல்கிறார்கள் திமுக அமைச்சர்கள்.

திமுக உடன்பிறப்புகள் சமூக ஊடகங்களில் திமுகவுக்கு வாக்களிக்காத அனைவருக்கும் சாபம் கொடுத்து வருகிறார்கள். முட்டை மந்திரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தவெக விஜய் அரசியல் வருகை காரணமாக அவர், “அதிமுக வாக்குகளைப் பிரிப்பார், நாம் தமிழர் கட்சியே இல்லாமல் போகும்” என்றெல்லாம் கூறிக்கொண்டிருந்த திமுகவினர், தமிழ் ஊடகம் கடந்த 14 ம் தேதி வெளியிட்ட கள நிலவர அறிக்கைக்குப் பிறகு அதைச் சொல்வதையும் குறைத்துக் கொண்டனர்.

தமிழ் ஊடகம் அறிக்கையில், “விஜய் வாக்குகள் நாம் தமிழருக்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது, திமுகவுக்கு 70 விழுக்காடு பாதிப்பும், அதிமுகவுக்கு 30 விழுக்காடு பாதிப்பும் ஏற்படுத்தும்” என்றும் கூறினோம்.

அதன்பிறகே சுதாரித்துக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் பெரம்பூரில் விஜயை எதிர்த்துப் பரப்புரை செய்தனர்.

வாக்குப்பதிவு நடந்து முடிந்த அடுத்த நாள் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றனர். உடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் சென்றார்.

கோடை விடுமுறையை கழிக்க ஸ்டாலின் குடும்பத்தார் சென்றால் சுற்றுலாத்துறை அமைச்சர் செல்வதே பொருத்தமானது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு எதற்காக செல்லவேண்டும் என்கிற கேள்வி பத்திரிகை ஊடகவியலாளர்கள் மத்தியில் எழுந்தது.

அதற்கு விடை தரும் விதமாக துர்கா ஸ்டாலின் கொடைக்கானலில் உள்ள குறிஞ்சி முருகன் கோயிலுக்கு சென்றார். முன்னதாக சேகர்பாபு பழனி கோயிலுக்கு வந்துவிட்டு கொடைக்கானல் சென்றுள்ளார். பூம்பாறை முருகன் கோயிலும் கொடைக்கானலுக்குப் பக்கமே உள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு அட்டம சனியும், ஜென்மத்தில் கேதுவும் உள்ளதால் சித்தர் வழிபாடு அதிலும் சித்தர்களின் தலைவர் முருகன் வழிபாடு, எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் தரும் முருக வழிபாடு செய்வதற்காகவும் சிறப்பு பூசைகள் செய்யவுமே வாக்குப்பதிவு நடைபெற்ற உடனே அவர்கள் கொடைக்கானல் சென்று இருக்கலாம் என்று சோதிடமும், ஆன்மீகமும் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் இப்படி பழனி மற்றும் பூம்பாறை முருகனை வழிபட, அந்தப் பக்கம் நடிகர் விஜய் இரவோடு இரவாகப் புறப்பட்டு “செவ்வாய்க் கிழமை” திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு இருக்கிறார்.

வாக்குப்பதிவுக்கு முன்னர் திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் முட்டிக்கால் இட்டு நடந்து சென்று வேண்டுதல் வைத்தார் நடிகர் விஜய்.

ஆக, இரண்டு தரப்பும் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக முருகப் பெருமானின் காலில் விழுந்து வேண்டுதல் செய்திருக்கின்றனர்.

ஸ்டாலின் குடும்பத்திற்குத் தேவையான சிறப்பு பூசை ஏற்பாடுகளை செய்யவே அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களுடன் கொடைக்கானலில் முகாமிட்டிருக்கிறார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சிறப்பு யாகங்கள் ஏதும் நடந்திருந்தாலும் வியப்பில்லை என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

வாக்குப்பதிவுகள் முடிந்து வாக்குப்பெட்டிகள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ள நிலையிளையும், மக்கள் தங்கள் முடிவை வாக்குகள் மூலமாகக் கூறிவிட்ட நிலையிலும், இனி என்ன வழிபாடு செய்தாலும், என்ன யாகம் நடத்தினாலும் என்ன ஆகப்போகிறது என்று கூறி தலையில் அடித்துக்கொள்கிறார்கள் மக்கள்.

பெரியார் இராமசாமியைக் கொள்கைத் தலைவராகக் கொண்டுள்ள விஜயும், பெரியார்இராமசாமியை குலக்கொழுந்தாகக் கொண்டுள்ள ஸ்டாலின் குடும்பத்தினரும் இப்படிக் கோயில் கோயிலாகச் செல்வது குறித்து பகுத்தறிவுப் பகலவன் பெரியார் திடல்காரர்கள் எதுவும் பேசமாட்டார்களா என்று கேட்கிறார் விவரம் தெரியாத சக பத்திரிகையாளர் ஒருவர்.

பெரியார் இராமசாமி மண்ணுடா !

spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...